13.8 C
New York
Wednesday, April 10, 2024

Buy now

spot_img

பூச நட்சத்திரத்தைப் பற்றி பொதுவான பலன்கள்

பூச நட்சத்திரத்தைப் பற்றி பொதுவான பலன்கள்

1. பரதன் பிறந்த நட்சத்திரம்.

2. சாந்த சொரூபி வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து வேத விற்பனர்.

3. எல்லா மதமும் சம்மதம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் பழகுதல் நட்பு வைத்துக் கொள்ளுங்கள்.

4. கருமமே கண்ணாயிரம்.

5.தான தர்மங்களை செய்வார் பாத்திரம் அறிந்து பிச்சை இடுவார்.

6. எந்த முடிவும் உடனுக்குடனே எடுக்காமல், யோசித்து நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.

7. ரெக்கார்ட் படி இவர்களுக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.

8. தாய் மீது சற்று பாசம் அதிகம், தந்தையிடம் இருந்து விலகி நின்றல்.

9. சிறு வயதில் தாய் தந்தையை பிரிந்து தாத்தா பாட்டியிடம் வளர்வார்.

10. இவர்களுக்கு சற்று காம உணர்வு அதிகம்.

11.இவருடைய மூத்த சகோதரன் சகோதரிகள் மீது அன்புடன் பாசமுடன் இருப்பார்.

12.எதையும் தன்னிச்சையாக செயல்படுத்துவார் தனித்துவம் நிறைந்த மனிதராக இருப்பார்.

13. எந்த நிலை ஆனாலும் ஒரு உயர்வை அடைவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்வார், முயற்சிப்பார்.

14. திருமணம் நடக்கும் ஆனால் அன்யோன்யம் சற்று குறைவாக இருக்கும்.

15.கீழ் நிலையிலிருந்து பாடுபட்டு ஞானத்தையும், படிப்பு, அறிவையும், வளர்த்துக் கொண்டு உயர்ந்த நிலையை அடைவார்.

16. மற்றவர்கள் சாதனைகளை பார்த்து பாராட்டும் குணம் இவர்களுக்கு உண்டு.

17. குடும்பத்துக்கு தேவையான அனைத்தையும், கடமை உணர்வுடன் செய்வார், குடும்பத்தில் சற்று அடங்கி போவார்,ஆனால் வெளியுலகத்தில் பிரகாசமாக இருப்பார் சில மறைமுக பெண்கள் தொடரவும் இவர்களுக்கு அமைய வாய்ப்பு உண்டு.

18. உணவை விரும்பி உண்ணுவர், அதிலும் தரமுள்ள உணவை .

19. வெளிப்படையாக பேசாதவர்கள் மன அழுத்தம் அதிகம் உண்டு.

20. இவர்களுடைய மனநிலை மாறிக்கொண்டே இருக்கும்.

21. இவர்களுக்கு எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும்.

22. பெண்கள் இந்த நட்சத்திரத்தில் ருதுவானால், குடும்பத்தில் வளர்ச்சி உண்டு.

23. எல்லோரிடமும் சகஜமாக பேசுவார் கலகலப்பாக இருப்பவர், எல்லா விஷயங்களையும் பற்றி தெரிந்து கொண்டிருப்பார்.
24.இவர்களுடைய திறமை ஆற்றல் புத்திசாலித்தனம் வீட்டில் செல்லுபடியாகாது வெளியில் தான்.

25.எந்த ஒரு விஷயத்தையும் உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார் பல கோணங்களில் அதை ஆராய்ந்து பின்பு மெதுவாக முடிவெடுப்பார்.

26. இவர்கள் சற்று சுயநலமாக இருப்பார், மனதிற்குள் எதிர்மறையான எண்ணங்கள் இருக்கும், வெளிப்பாட்டில் நேர்மறையான எண்ணங்களுடன் பேசுவார்.

27. சில நபர்களுக்கு அடிப்படைப் படிப்பு மட்டும்தான் படித்திருப்பார்கள் ஆனால் அவர்களுடைய செயல்பாடு அறிவு தன்மை சிறப்பாக இருக்கும்.

28. தொழிலுக்கு ஏற்றாற்போல், சூழ்நிலைக்கு தகுந்தார் போல், தன் படிப்பு அறிவு திறமையை வளர்த்துக் கொள் வார்.

29. சிறுவயதிலேயே ஒரு சில பேர் வறுமையில் இருந்தாலும், நடுத்தர வயதில் அரும்பாடுபட்டு முன்னேறி விடுவார்.

30. கண் பாதிப்பு, சளித் தொந்தரவு, சைனஸ் பிரச்சனை, போன்ற நோய்கள் வரக்கூடும்.

31.பெரியவர்களுக்கு நல்ல மரியாதையை கொடுத்தாலும் அவர்கள் சொல்வதை ஒடக்கான் தலையை ஆட்டுவது போல் ஆடினாலும், தனக்கு பிடித்தால் போல் செயல்படுத்துவார்.

32.இவர்களுடைய உடல் அமைப்பை இப்படித்தான் இருக்கும் என்று நிர்ணயிக்க முடியாது. ஒரு சில பேர் ஒல்லியாக இருப்பார்கள் ஒரு சில பேர் பூசினாற் போல் இருப்பார்கள், ஒரு சில பேர் மிகவும் குண்டாக இருப்பார்கள்.

33. நியாயத்திற்காக போராடும் குணம் உண்டு, ஆனால் ரிஸ்க் அதிகமாக எடுக்க மாட்டார்.

34. இவர்கள் சிந்தனை செயல் ,நேர்மை உழைப்பு வருமானம் தனித்துவம் உயர்பதவி சமுதாயத்தில் அந்தஸ்து கௌரவம், எதையும் நிதானித்து யோசித்து முடிவெடுத்து, கீழ் நிலையிலிருந்து மிகவும் உயர்ந்த நிலையை அடைவார்.
🙏🌹🙏🌹🙏🌹🌹
ராமசுப்பிரமணியம் ஈரோடு
ஜோதிட மாணவன்.
🙏🌹🙏🌹🙏🌹🌹
(மேலே சொல்லப்பட்ட அனைத்தும் பொதுவான பலன்கள்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!