19.9 C
New York
Friday, June 7, 2024

Buy now

spot_img

நட்சத்ர பொதுப் பலன்கள்

நட்சத்ர பொதுப் பலன்கள் :-
*****************
1 . அசுவினி
******
இது கேதுவின் நட்சத்ரம் ஆகும் . காலபுருஷ தத்துவப்படி
இதுவே முதல் நட்சத்ரம் ஆகும் .

21 தலைமுறை என்றால் என்ன  ??????
தந்தையின் முன் பிறந்த 7 பாட்டன்கள் ,தந்தையின் பின் வரும் 7 பேர் ,தாய் வழி பாட்டன்கள் 7 ,  நமது தாய் உருவாக காரணம் ஆக காரனமாய் இருப்பவர் தாயின் தகப்பன் , ஆகவே முதல் நட்சத்ரம் ஆக அம்மாவைப்பெற்ற தகப்பன் ஆனா கேதுவின் நட்சத்ரம் ஆகும் அழகான மனைவி அன்பான துணைவி ,கனிவான குழந்தை அமையும் யோகம் உண்டுபண்ணும்
.

இது கமிசன் , மருந்துகள் , வாசனை அல்லது நாற்றம் பிடித்த தொழில் செய்ய நல்லது ,இந்த பிறந்த டாக்டர்கள் நல்ல கைராசிக்கார டாக்டர் என்று பெயர் எடுப்பார். டாக்டர் பட்டம் பெறா விட்டாலும் இவர்கள் கையால் தண்ணீர் வாங்கி குடித்தால் கூட அது மருந்தாக நன்மை செய்யும் -சிறு வயதில் இவரை யோகம் இல்லாதவர என்று சொல்வார்கள்-
இவர்கள் பிறந்த 25 வயதுக்கு மேல் அந்திம காலம் வரை நல்ல பேரோடும் , புகலோடும் , வாழ்வார்கள்- சிறுத்த கண்களும் ,பருத்த தோள்களும். கொண்டு சிறப்புடன் வாழ்வார்கள் .எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற கொள்கை உள்ளவர்கள்-, பிறருடைய சொல்லயையும் , செயல்களை மதிப்பார்கள்

அரசு உத்யோகம் மற்றும் கௌவரமான தொழில் செயவ்வார்கள் -எளிதில் எல்லோரிடமும் நட்பு கொள்வர்.—-எதிர் காள பலன்களை நன்கு
கணித்து சொல்லுவதில் , வல்லவர்கள் -நன்கு புத்ர பாக்கியம் அமையும் .சிலருக்கு பணக்கார மனைவி அமையும் –
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2. பரணி
*********
‘பரணியில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் ‘ என்ற பழமொழி உண்டு .எல்லோரும் தரணி ஆள்வதில்லை ஆனாலும் ஊர் , உலக விஷயம் என்று தனக்கு இது தேவை இல்லை ,இருந்தாலும் , அதை நொங்கி நோண்டி விசியத்தை தெரிந்து கொள்வார்கள்-

இது அசுர நட்சத்ரம் ஆன சுக்கிரனுடையது ஆகும்-.ஆயுள் தீர்க்கம் உண்டு .ஆன்மிக ஈடுபாடு , தெய்வபக்தி சிறு வயது முதலே இருக்கும் .முரட்டுத்தனம் ,தைரிய சாலிகள்.
இவர்களுக்கு 12 வயதுக்கு மேல் யோகம் உண்டுபண்ணும்.
தர்க்கவாதம் செய்வதில் வல்லவர்கள் —-. மெய்யை பொய் ஆக்குவதிலும்பொய்யை மெய் ஆக்குவதிலும் வல்லவர்கள் –

நீண்ட வசனம் பேசக்கூடியவர்கள் இவர்கள் வக்கீல் தொழில் செய்தால் வெற்றி இவர்கள் பக்கம் தான் ,நட்பு வட்டாரம் மிகப் பெரியது- தாய் , தந்தையின் மீது அளவு கடந்த பாசம் உள்ளவர்கள் .சகோதரர், சகோதரி வசம் சமயத்துக்கு ஏற்ப நடக்கும் தன்மை உண்டு-,இவர்கள் மூக்கால் பேசும் தன்மை கொண்டவர்கள் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3. கார்த்திகை
********
இதில் பிறந்தவர் பெரும்பாலோனோர் சிவ பக்தராக இருப்பார்கள் .தாய்,தந்தை மீது பயபக்தி மரியாதையும் உள்ளவர்கள்.ஆனால் வியாபாரம் செய்வதற்க்காக பொய் சொல்ல தயங்க மாட்டார்கள் —

] பொருளதாரம் பற்றி கவலைப்படாமால் வாழ்வார்கள் .எப்படியும் பணம் சம்பாதித்து விடுவார்கள் ,எப்படிப்பட்ட சிக்கல் களையும் எளிதில் சமாளித்து வெற்றி கொள்ளவார்கள் -கோபத்தை வெளிக் காட்டாமல் சிரித்த முகத்தோடு சாமார்தியமாக செயல் படுவார்கள் –
ஆன்ம பலம் மிக்கவர்கள் , எந்த விஷயத்தையும் தீர்க்கமாக ஆராயும் தன்மை உண்டு -அரசியல் , பேச்சாளர் ஆவார்- நன்றாக ரசித்து , ருசித்து சாப்பிடும் பழக்கம் உண்டு -.இவர்கள் மனத்தில் என்ன நினைக்கிறார் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது ..
மொத்தத்தில் இவர்கள் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்ற கொள்கை உள்ளவர்கள் ஆனாலும் கர்வம் , பேச்சில்
அதிகாரம் , அதட்டல் தொனி மிகுந்து காணப்படும் — +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4 . ரோகினி
**********
ரோஹிணியில் ஆண் பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்ற பழமொழி உண்டு . —- அதாவது கம்சனை அழிக்க கிருஷ்ண பரமாத்மா
ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்ரதில் அவதரித்து
தன்னுடைய 8 அல்லது 12 – வது வயதில் கம்சனை அழித்தார் என்பது வரலாறு — தாய் மாமனோடு சண்டை உண்டு ..
ரோஹிணியில் பிறந்தவர்கள் பால் , தயிர் , விரும்பி சாப்பிடும் குணம்
உள்ளவர்கள் .——குளிந்த நீர் ,குளிர் பானம் சாபிடுவர்—–எதையும் முறையோடு செய்யக்கூடியவர்கள் , வரைமுறைகளை மீராதவர்கள் —
அடர்ந்த புருவம் ,விரிந்த கண்களை கொண்டவர்கள், —
ராஜ நடை கம்பிர தோற்றம் உள்ளவர்கள்—–சிறந்த புலமை, வாசனை திரவியம் பூசுவதில் , விருப்பம் உள்ளவர்கள் .—-தன்னுடைய எதிறியை
வளர விடாமல் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்—–இவர்களை
புகழ்ந்து பேசினால் உடனே கையில் உள்ளதை தூக்கி கொடுத்து விடுவார் . அழகிய பெண்கள் வசம் தன்னை இளப்பர்.
நில புலன் தோட்டம் , சொத்து வசதி உண்டு .ஒரு சமுதாயத்தை தன்
வசம் ஆக்கி கொள்வார் —-.தான தர்ம சிந்தனை கொண்டவர்கள்.. அரசியல், வியாபாரம் , விவசாயம் , கைத்தொழில் எதுவாக இருந்தாலும் திரம் பட
செய்து புகழ் பெறுவார்கள் ..–

உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.கட்டணம் உண்டு
5. மிருகசீரிடம் ;
****************
இது ஆதிக்க பலம் உள்ள நட்சத்ரம் ஆகும் . 27 நட்சற்றதில் விதி விலக்காக இருக்கும் 4 நட்ச்த்திரதில் இதுவும் ஒன்று
மிருகசீரிடம்1– 2 பாதங்கள் ரிஷப ராசியில் இருக்கும் .இவர்கள் 1——–. பணம் ஆசை மிகுந்து பிறர் பொருளை தெரிந்தே அபகரித்து பின் போலீஸ்
கோர்ட் , வம்பு , வழக்கு , என்றும் —– நிலம் , பங்காளி பகை , அண்ணன் , தம்பி ,- பாகப்பிரிவினை என்றும் அலைவார்கள் —– மொத்தத்தில் பொருட் பற்று மிக்கவர்கள் . பிறர் பொருளை அபகரிக்க வல்லவர்கள்.
மூக்கின் மேல் கோபம் வரும் ——-

மிருகசீரிடம் 3—4– பாதங்கள் மிதுன ராசியில் இருக்கும் .இவர்கள் அதிக
காமம் மிக்கவர்கள் .— சுய முயற்ச்சியால் முன்நேற்றம் உள்ளவர்கள் .—முயற்சி திரு வினையாக்கும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் —— தலைமுடியைக் கட்டி மலையை இழுக்கலாம் வந்தால் —- மலை போனால் தலைமுடி என்று தன்னம்பிக்கை கொண்டவர்கள் ——

தேக பலம் மிக்கவர்கள் ஆனால் மானோ ஒரு சில நேரங்களில் குறைவு உள்ளவர்கள் —-.ஜோதிடம் நன்கு வரும் —-ஞானமார்க்கம் தெரிந்தவர்கள் .—-இவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு கவலை மனத்தில்
இருந்து கொண்டே இருக்கும் ——ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் —–

உடம்பில் பச்சை ரேகை அல்லது பச்சை நரம்பு
இருக்கும் —–கலைத்துறையில் அதிக ஈடுபாடு உண்டுபண்ணும்—–எப்போதும் தாம்பூலம் போடுவது இவரின் தனி சிறபபு ஆகும் .—இவர்கள் வேதாந்தம் பேசுவார்கள் ஆனாலும் பேச்சு ஒரு பக்கம் கவனம் ஒரு பக்கம் என்று இருப்பார்கள் இது இவர்களின் இயர்கையானசுபாவம் ஆகும் —-
++++++++++++++++++++++++++++++++
6. திருவாதிரை
திருவாதிரையில் ஒரு குழந்தை பிறந்தால் தகப்பன் சாப்பாட்டிற்கே
தெருவில் அலைய்வான் என்கிறது —– ஜோதிட பழமொழி அனுபவத்தில் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் தந்தை துன்பம் படுவதையும் காண்கிரோம்———-

இன்னும் சிலர் சித்திரை மாதத்தில் சிவபெருமான் அப்பன் வீதிலே
என்பது இப்படி மருவி விட்டது என்று சொல்வோர் உண்டு —-
இது சிவனுக்கு உரிய நட்சத்ரம் ஆகும்—– .இது பூமியியை விட்டு வெகு தொலைவில் உள்ளது —மிகவும் ஒளி பிரகாசம் உள்ள நட்சத்ரம் ஆகும் ——
இவர்கள் சுகவாசியாக இருப்பார்கள். உழைப்பில் ஆர்வம் இல்லதவர் முன் கோபம் உண்டு .—-நல்ல மனம் படைத்தவர் 40 வயதுக்கு மேல் புகழ் பெறுவார்கள் .—–பயம் அறியாதவர்——-பிற காலத்தில் ஊரும் உறவினர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள் ——- தனது மனைவி மூலம் வருமானம் உள்ளவர்,.——தெய்வ பக்தி , சுய நலம் உள்ளவர் .——-நீண்ட தூரம் நடந்து செல்ல விரும்புவார்கள்.—-

நல்ல புத்திரரர் மூலம் நன்மைகள் பெறுவாரகள்.—-பிற்காலத்தில் ஞான மார்க்கத்தில் ஈடுபடுவார்கள்.—-
இவர்களிடம் மற்ற்வர்கள் வேலை வாங்க முடியாது ——இவர்களாக வேலை செய்தால் தான் உண்டு .—–பெண்கள் மீது மோகம் அதிகம் உண்டு ——-உறவினர்களை கண்டால் பிடிக்காது ——உறவினர்களுக்கும் இவரைக் கண்டரல் பிடிக்காது——
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.புனர்பூசம்
புனர்பூசம் 1 ,2 , 3 , பாதங்கள் மிதுன ராசியில் இருக்கும் . 4—ஆம் பாதம் மட்டும் கடகத்தில் இருக்கும் –
.பொதுவாக 4—ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் பகவான் ராமர் போல இளமையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் நடுத்தர வயதில் துன்பம் ,, துயரம் அனுபவிக்க வேண்டி உள்ளது . பின் ராஜ வாழ்க்கை அனுபவிப்பார். —இது நடைமுறை வாழ்கையில் ஒத்து வருகிறது,
-.
தர்ம , தயாள ,பாசம் , பண்பு , வீரம் , தீரம் , கல்வி , கேள்வி,
உள்ளவர்கள் —–.எந்த கலை ஆனாலும் எளிதில் கற்று தேர்ந்து விடுவார்கள் ——-தாய் , தந்தை சொல் படி நடப்பார்கள் .—சகோதர , சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருப்பார்கள் .

பிற்காலத்தில் அரசு உதவி கிடைக்கும் .—-குழந்தைகள் ஆதரவு
அதிகமாக அமையாது —–வாகனத்தால் லாபம் உண்டுபண்ணும் . சிலருக்கு
சிறுவயதில் வாகனத்தில் விபத்து ஏற்பட்டு காலில் ஊணம் ஏற்பட
வாய்ப்பு உண்டு .—-வாழ்கையை சிக்கனமாக வாழ்வார்கள்

.—–தர்மம் தலை காக்கும் என்ற தத்துவத்தை உணர்ந்து வாழ்வார்கள்
—–6௦– வயதுக்கு மேல் நல்ல யோகம் உள்ளவர்கள் .—- ஆயுள் பாகம் 80—வயதுக்கு மேல் உண்டு —-மண சோர்வு இல்லாதவர்கள் .—–மானோ பலமும் , உடல் பலமும் , அந்திமக் காலம் வரை இருக்கும் .
செய்நன்றியை மறக்க மாட்டார்கள் — சமயம் வரும்போது இரண்டு மடங்க்காக திருப்பி உதவி செய்வார்கள்—
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8 – பூசம் –
பூசம் 1, 2 ,3 , 4 , பாதங்களும் கடகத்தில் தான் இருக்கும்— . இதில் எந்த பாதத்தில் ஆணோ அல்லது பெண்ணு குழந்தை பிறந்தால் அது சிறிது காலம் தாய் – தந்தையை விட்டு பிரிந்து அல்லது அம்மா பெற்ற தாய் அல்லது தாய் வழி பாட்டி அல்லது பாட்டனுடன்வாழ வேண்டி வருகிறது .—–இதற்கு பரிகாரம் ஆக அவரவர் குடும்ப ஜாதி வழக்கப்படி குழந்தையை தத்து கொடுத்து வாங்க வேண்டும்—
பூசத்தில் பிறந்தவர்கள் மூக்கும் , முழியுமாக அழகான
தோற்றம் உள்ளவர்கள் —-ஆனால் எப்போதும் ஜலதோஷம் இருக்கும்—

எதையும் பொடி வைத்து பேசுவதில் கில்லாடிகள் —–சிலர் கொடி
கட்டி வாழும் வாழ்க்கையைப் பெறுவார்கள் —-பசி பொறுக்க மாட்டார்கள்
எப்போதும் ருசியான உணவை விரும்பி சாப்பிடுவார்கள்—

வாசனை திரவியம் . வெற்றிலை , பாக்கு விரும்புவர்—
ஒரு சிலர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார்கள்—–மத்திய வயதில் பொருளாதாரம் பாதிப்பு ஏர்படும் ——40 வயதுக்கு மேல் நல்ல அனுபவசாலியாக இருப்பார்கள் —–அப்போது நல்ல நண்பர்கள் சேர்வர்
அவர்கள் மூலம் நல்ல உதவி கிடைக்கும் —–

நட்ப்புக்கு இலக்கினமாக வாழ்வார்கள் —–நண்பர்களின்
துன்பத்தை தன் துன்பமாக பாவித்து உடனே உதவி செய்வார்கள்——
காமம் மிக்கவர்கள் ——பிறரை நையாண்டி , கேலி பேசுவதில் கெட்டிக்காரர்கள். —பிறருடன் சண்டை போடுவது என்றால் பால் பாயாசம் சாப்பிடுவது போல இருப்பார்கள்—-

9.ஆயில்யம்
*********
ஆயில்யம் நட்சத்ரம் 1, 2 ,3 ,4 ஆகிய நான்கு பாதங்களும்
கடகத்தில் உள்ளன . பொதுவாக சளித் தொந்தரவுகள் உண்டு
ஆயில்யத்தில் பிறந்தவர்களை குழந்தைகள் நன்கு விரும்பும்.
பஸ் அல்லது ரயில்லில் செல்லும்போது பக்கத்தில் இருக்கும்
பிறர் குழந்தை ஆயில்யம நட்சத்ரகாரர்களை விரும்பி வரும்
வந்து நீண்டகால நட்பு போல் பேசுவார்கள்

பிறர் மனம் புண் படாமல் மெதுவாக பேசக்கூடியவர்கள்.ஆனால்
காரியவாதிகள்—சொத்து ,சுகம, அளவாகவே இருக்கும்வெளிநாடு
சென்று பொருள் சேர்ப்பார்கள் —ஒரு சிலருக்கு கண்நோய
உண்டு .—-இலக்கிய ,இதிகாசம் புராணங்களில் விருப்பம்
உள்ளவர்கள்.—இதன் மூலம் அனுபவக்கல்வி பெறுவார்கள்

தெய்வ பக்தி மிகுந்தவர்கள் —தெய்வ அருளலால் சகல் சித்தி
பெறுவார்கள் —எதிரி கண்டு பயப்பட மாட்டார்கள் .
மனைவி வழியில் சஞ்சலம் எப்போதும் உண்டு .நீண்ட தூரம்
நடந்து செல்வதில் விருப்பம் உள்ளவர்கள் .நல்ல யோகமான
குழந்தையைப் பெறுவார்கள் .—பிற்காலத்தில் ஞான மாக்கத்தில்
ஈடுபடுவார்கள்.—எடுத்துக் கொண்ட பொறுப்பை திரம்பட
செய்வார்கள்—

பணத்தை விட குணத்துக்கு அதிக மதிப்பு கொடுப்பர்—நிதானம்
ஆக சிந்தித்து பொறுப்புடன் காரியங்களை சாதிப்பார்கள்.நல்ல
குணம் , நல்ல நடத்தை தான் இவர்களின் குண இயல்பு ஆகும்
********************************
1௦. மகம்
மகம் நட்சத்ரம் 1—2—3—4 பாதங்கலும் சிம்ம ராசியில் உள்ளன
‘மகத்திலே ஒரு மங்கை ‘ ‘பூரத்திலே ஒரு புருஷன் ‘’ என்ற
பழமொழி உண்டு . பிராமண ஜாதியில் மகத்து பெண்
கிடைத்தால் விரும்பி திருமணம் செய்து கொள்கின்றனர்

ஈனெனில் மகத்து பெண் குடும்ப பொறுப்புகளை நன்கு
கவனித்து கொள்வால் என்பதாம்—‘ மகத்தில் பிறந்த மங்கை
ஜகத்தை ஆள்வாள் ‘— என்பது பழமொழி .—
மிகப்பெரிய சாமார்த்திய சாலிகள் .பிறர் மனம் புண்படுமே
என்று கவலைப்படாமல் , படபட என்று பேசுவார்கள்.—எந்த
காரியத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு விடுவார்.

தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் வெற்றி கொள்வர்.
பலவகையில் சொத்து சேரும் . வீடு ,தோப்பு , துறவு உண்டு
யாருக்கும் தலை வணங்குவது கிடையாது.—
இவர்கள். யரையாவது புகழ்ந்து பேசினால் அவருக்குபின்னால்
ஆபத்து காத்த உள்ளது என்று அர்த்தம்.—உடல் கட்டு அழகிய
தோற்றம் .உண்டு .–
=
-சங்கீதம் , சினிமா நல்ல ஆர்வம் உண்டு —
பின் வயதில் பொருள் ஈட்டுவதில் வல்லவர்கள்— இவர்கள்
வீற்றிருக்கும் இடத்தை ப்ரோக்கர் இல்லமால் தானே விலை
பேசி கிரயத்தை முடிப்பார்கள் —
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11 .பூரம்
பூரத்தின் நான்கு பாதங்களும் சிம்மராசியில் உள்ளது—–‘
‘மகத்திலே ஒரு மங்கை பூரத்திலே ஒரு புருஷன் ‘ என்பது
பழமொழி – கல்வி , ஞானம் அறிவு மிக்கவர்கள் —இனிமையாக
பேசுவார்கள் .. ஆனால் எதிறிகளிடம் பேசும்போது ஒரவார்தை
சொன்னாலும் நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் பேசுவர்—-
பைனான்ஸ் தொழில் அரசு பனி ஆசிரியா ,தொழில் அமையும்
சிலர் கட்ட பஞ்சாயத்து ஒரு சிலர் அடி தடி தாதா வாக
இருப்பார்கள் .பக்திமான் பெரியோர்களை மதிப்பார்கள் ..—
அரசு விருது பட்டங்கள் பிற்காலத்தில் கௌரவ விருது
இவர்களை கேட்காமல் தானே வந்து சேரும் .—
கடவுள் தொண்டு ஆன்மிக விசயங்களில் ஆர்வம் உண்டு
மெதுவாக நடந்து வேகமாக நடந்து செல்லும் குணம் உண்டு
நல்ல மனைவி , நல்ல குழந்தைகள் என்று சீரும் சிறப்புமாக
வாழ்வார்கள் இயல் இசை நாடகம் , பாட்டு பாடுவது உண்டு
பலருக்கு தெரிந்தவராக இருப்பார்கள்—யோக்கியம் ஒழுக்கம்
சாஸ்திர, ஜோதிடத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் .பெண்ணாக
இருந்தால் ஆண் போல் செயல் படுவார்கள்

12. உத்திரம்
உத்திரம் நட்சத்ரம் 1—வது பாதம் சிம்ம ராசியிலும்
2 ,3 ,4 பாதங்கள் கன்னி ராசியிலும் இருக்கும்-
இந்த நட்சத்ரதில பிறந்தவர்கள் பிறரை நோனி
நையாண்டி , கேலி செய்வதில் கெட்டிக்காரர்கள் ஆக
இருப்பார்கள் .
ஆனாலும் பிறர் மனம் புண்படும்படி
பேச மாட்டார்கள்.—சாதிக்க முடியாத காரியங்கலயும் இவர்கள் தன் சொந்த முயற்சியால்
குறுக்கு வழியில் சென்று சாதிப்பார்கள்.—-தனது சொந்த
முயற்சியால் வீடு , நிலம் ,கார், சொத்து வசதியை
ஏற்படுத்திக் கொள்வார்கள் .—இவர்கள் ஏகலைவன் போல
வித்தைகளை குரு இல்லாமல் தானே கற்று கொள்வர்—
ருசி இல்லாத உணவை சாப்பிட மாட்டார்கள்—பெரிய
செல்வந்தர்கள் இவருக்கு நண்பர்கள் ஆக இருப்பார்கள்
இவர்கள் பிறந்த 2௦ வது வயதிலே இந்த பிறவியின் பயனை அடைந்து விடுவார்கள்==சித்திரம் , சிற்ப கலைகளை
எளிதில் கற்றுக் கொள்வார்கள் —அடிக்கடி ஆறு , ஏறி நீர்
நிலைகளில் நீராடுவதில் பிரியம் உள்ளவர்கள் .—தெய்வபக்தி தரும சிந்தனை கொண்டவர்கள் .—பிரதி பலன்
கருதாமல் பிறருக்கு உதவும் நல்ல பண்பாளர்கள்.—பெண்களின் ஆதரவு நிறைய உண்டு .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
13 . அஸ்தம்
அஸ்தம் நட்சற்றதின் நான்கு பாதங்களும் கன்னி ராசியில் உள்ளன.— சொந்தம் ,பந்தம் , நட்பு என்று
அனைவருக்கும் பணம் உதவி மற்றும் பல உதவிகள்
செய்து ஏமாந்துதான் போவார்கள்
நீண்ட , உயர்ந்த உருவ அமைப்பு கொண்டவர்கள் .—
சத்தியம் , தருமம் , நீதி என்று வாழ்வார்கள் —–மிகவும்
கஷ்டப்பட்டுக் கொண்டு பணம் சேர்ப்பார்கள் —-நமக்கு
நேரும் துன்பங்களையும் தானே தீர்த்து கொள்வார்—-
தைரியம் , தன்னம்பிக்கை உள்ளவர்கள் —–
சில சமங்களில் பொய் பேசுவார்கள் —- அரசு உதவி
கொண்டு தொழில் வளத்தை பெருக்குவார்கள் —–சொத்து
சுகம் இருந்தாலும் வாகன சுகம் குறைப்பாடு இருக்கும்
வாகனம் அடிக்கடி பழுது படும் —-குருவின் சொல்ல்படி
நடந்தால் குறைவில்லாத வாழ்க்கை அமையும் எதையும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
14. சித்திரை
சித்திரை 1—2—பாதங்கள் கன்னி ராசியிலும் 3—4==
பாதங்கள் துலாம் ராசியிலும் அமர்ந்து இருக்கும் ===
பொதுவாக சித்திரையில் பிறந்தால் குடும்பம் சீரழியும்
என்றும் ======இன்னும் சிலர் சித்திரை மாதத்து பையன் வீட்டிலே==
அப்பன் தெருவிலே ==== இன்னும் சிலர் சித்திரை மாதத்தில்
சிவபெருமான் தேரில் நகரில் ஊர்வலம் வருவதையை தான் இப்படி
சொல்லி இருக்கிரார்கள் என்று சொல்வோரும் உண்டு=======
இன்னும் சிலர் சித்திரை மாதம்=== சித்திரை நட்சத்ரம் ==
செவ்வாய்க்கிழமை களில் ஒரு குழந்தை பிறந்தால் அது
இராஜயோகம் என்று சொல்ல்வோரும் உண்டு=====

கோபம் அதிகமாக வரும் யாரையும் சட் என பேசி
விடுவார்கள் ====தனக்கும் செலவு செய்யாமல் பிறருக்கு
கொடுக்காமல் பணத்தை அல்லது சொத்தை பூமியில்
புதைத்து வைத்து விட்டு யாரிடமும் சொள்ளம்மல் இரண்டு
விடுவர்====பிறருக்கு செய்யும் வேலை களுக்கு பிரதிபலனை
உடனே எதிர் பார்ப்பார்கள் ==== கல்வி கேள்வி ஞானம்
ஓரளவு தான் உண்டு ====

மனைவி , மக்கள் மீது கடுமையாக
கோபம் கொள்வார்கள் ====பிரர் மனம் கவலைப்படுமே
என்று நினைக்க மாட்டார்கள் ===பிறருடைய காரியங்கள்
எல்லாம் தன்னால் ஆகிறது என்று நிணைப்பார்கள் –நல்ல
சகோதர ,சகோதரிகள் உண்டு ===பசி பொறுக்க மாட்டார்கள்
அழகான குடும்பம் உண்டு ===அடிக்கடி தொழில் மாறுதல் உண்டு
+++++++++++++++++++++++
15 .சுவாதி
சுவாதியின் நான்கு பாதங்களும் துலாம் ராசியில் அமையும் ==== ஆதிக்க பலம் உள்ள நான்கு நட்சற்றங்களில் இதுவும் ஒன்று -=== மிருகசீரிடம் , மகம் == சுவாதி , அனுஷம் ஆகியவை ஆகும் ===சுவாதியை சிப்பிக்குள் பிறந்த முத்து என்றே கூறலாம் , ஏன் எனில்

ஐப்பசி மாதத்தில் ,சுவாதி அன்று மழை பெய்து இருக்கும் போது கடலின் அடியில் உள்ள சிப்பி கடல்
மட்டத்க்கு மேல் வந்து தனது வாயைத்திறந்து கொண்டு
இருக்கும் போது ஒரு சொட்டு மழைத்துளி விழுந்தவுடன்
சிப்பி கடலின் அடியில் சென்று விடும் == அந்த மலைத்]துளி முத்தாக மாறுகிறது=====

அழகிய தோற்றம் உடையவர்கள் ==தாய்
தந்தை மீது அதிக பாசம் உள்ளவர்கள் ===தனது கல்விக்கு
ஏர்ப வேலை கிடைக்கும் ===பிறர் பொருள் மீது ஆசை
இல்லாதவர்கள் ===தன் கையே தனக்கு உதவி என்ற
தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ===பெண் மோக
வலையில் சிக்கி கைப் பொருளையும் இழப்பார்கள்
சமயம் அறிந்து சரியான உதவி செய்யக்கூடியவர்கள்==

இடுப்புக்கு கீழ் மச்சம் உள்ளவர்கள் ===
நல்ல நண்பர்கள் == சிரித்த முகத்தோடு இருப்பார்கள் ==
புத்திர சந்தானங்கள் உண்டு ===விபாரத்தில் ஈடுபாடு
உண்டு ===குரு விசுவாசம் உண்டு ====

உங்கள் நட்சத்ர பொதுப் பலன் –
******************
16 . விசாகம்
*********
விசாகத்தின் 1-2-3- பாதங்கள் துலாம் ராசியில் இருக்கும் -4
ஆம் பாதம் மட்டும் விருசிகத்தில் இருக்கும் . விசாகத்தில்
ஒரு பெண் பிறந்தால் திருமணம் ஆகும் வரை பிறந்த
வீட்டிக்கு நல்ல வசதியான பலன் நடைபெறுகிறது –
அனுபவத்தில் சரி என்று படுகிறது-

ஆனால் கணவன்
வீட்டை துடைக்கிறது ==ஏனெனில் விசாகம் கணவன் வீட்டை
துடைக்கும் =விசாகம் – 4—ஆம் பாதம் மட்டும் இலைய
மைத்துனருக்கு ஆகாது என்பது பழமொழி – ஆனால்
இலைய மைத்துனர் ஜாதகத்தில் ஆயுள் பலம் நன்றக
இருந்தால் தோஷம் ஒன்றும் செய்யாது –
ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் –
=
சத்யம்
நீதி ., நேர்மை என்று வாழ்வார்கள்-உற்றார் , உறவினர்
பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள்==குறைந்த கல்வி
கற்றாலும் அனுபவக்கல்வி பெறுவார்கள்-செல்வம் .செல்வாக்கு
வண்டி வாகனம் வசதி உண்டு ==பொது மக்கள் பாராட்டும்
வகையில் இவரது செய்கை அமையும் –

தனது குறிக்கோள்களை வெற்றி பெற செய்வர்
ஒரு சிலரது பேச்சில் சிற்றின்பம் இரட்டை அர்த்தம் கலந்து
இருக்கும் ===தனது சுய நலதிற்காக ஒரு சில நண்பர்களை
பகைத்து கொள்வார்கள் -இள வயதில் பல கஷ்டங்கள்
சிரமங்களையும் அனுபவித்து நடுத்தர வையதில் நன்றாகவே இருப்பார்கள்-

கோவில் குருக்கள் , தெய்வீக பனி செய்வார்கள் ==ஒரு
சிலருக்கு பிள்ளைகளே எதிரி ஆக இருப்பார்கள்-ஆனால்
இதை எல்லாம் ஈசன் செயல் என்று எடுத்து கொள்வார்கள் =
நவரத்தினம் அணிவதை விரும்புவார்கள் – ஒரு சிலர் நவரத்னா
வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்-
++++++++++++++++++=============================================

16 . விசாகம்
*********
விசாகத்தின் 1-2-3- பாதங்கள் துலாம் ராசியில் இருக்கும் -4
ஆம் பாதம் மட்டும் விருசிகத்தில் இருக்கும் . விசாகத்தில்
ஒரு பெண் பிறந்தால் திருமணம் ஆகும் வரை பிறந்த
வீட்டிக்கு நல்ல வசதியான பலன் நடைபெறுகிறது –
அனுபவத்தில் சரி என்று படுகிறது-ஆனால் கணவன்
வீட்டை துடைக்கிறது ==ஏனெனில் விசாகம் கணவன் வீட்டை
துடைக்கும் =விசாகம் – 4—ஆம் பாதம் மட்டும் இலைய
மைத்துனருக்கு ஆகாது என்பது பழமொழி – ஆனால்
இலைய மைத்துனர் ஜாதகத்தில் ஆயுள் பலம் நன்றக
இருந்தால் தோஷம் ஒன்றும் செய்யாது –
ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் -சத்யம்
நீதி ., நேர்மை என்று வாழ்வார்கள்-உற்றார் , உறவினர்
பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள்==குறைந்த கல்வி
கற்றாலும் அனுபவக்கல்வி பெறுவார்கள்-செல்வம் .செல்வாக்கு
வண்டி வாகனம் வசதி உண்டு ==பொது மக்கள் பாராட்டும்
வகையில் இவரது செய்கை அமையும் –
தனது குறிக்கோள்களை வெற்றி பெற செய்வர்
ஒரு சிலரது பேச்சில் சிற்றின்பம் இரட்டை அர்த்தம் கலந்து
இருக்கும் ===தனது சுய நலதிற்காக ஒரு சில நண்பர்களை
பகைத்து கொள்வார்கள் -இள வயதில் பல கஷ்டங்கள்
சிரமங்களையும் அனுபவித்து நடுத்தர வையதில் நன்றாகவே
இருப்பார்கள்-
கோவில் குருக்கள் , தெய்வீக பனி செய்வார்கள் ==ஒரு
சிலருக்கு பிள்ளைகளே எதிரி ஆக இருப்பார்கள்-ஆனால்
இதை எல்லாம் ஈசன் செயல் என்று எடுத்து கொள்வார்கள் =
நவரத்தினம் அணிவதை விரும்புவார்கள் – ஒரு சிலர் நவரத்னா
வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்-
++++++++++++++++++=============================================
17. அனுஷம்
அனுஷம் நட்சத்ரதின் நான்கு பாதங்களும்
விருசிகத்தில் உள்ளன== பொதுவாக சனியின் நட்சத்ரம்
3 ஆகும் ==இதில் 1=பூசம் 2= -உத்திரட்டாதி = 3 = அனுஷம்
இதில் அனுஷம் பொருத்தம் பார்க்கமலே திருமணம் செய்யும்
ஆதிக்க பலம் உள்ள நட்சத்ரம் ஆனாலும் அனுசத்தில் சந்திரன்
நீசம் பெறுவதால் இவர்களின் வாழ்க்கை தரத்தில் மற்ற
பூசம் = உத்திரட்டாதி நட்சத்ரம் விட குறைவாக உள்ளது
திருமண வாழ்கையில் குறைபாடுகள் நிறைய உள்ளது
அன்னை பராசக்தியின் அருளை பெற்றவர்கள்=
பிறந்தோம் வளர்ந்தோம் என்று இல்லாமல் வாழ்கையில்
சாதனைகள் படைக்கும் சாதனையாளர்கள்==புதிய
கண்டு பிடிப்புகள் மூலம் அரசாங்க சகாயம் பெறுவார்கள்-
தனது குலந்தைதை கலுக்கு செல்வம் சேர்த்து வைப்பார-
சூதும் வாதும் நிறைந்த இவ் உலகில் எந்த விதமான
அச்சம் இன்றி வாழுவார்கள் –
அழகிய முகம் , அழகிய மனம் , மெல்லிய
குரலில் பேசுவார்கள் =பெற்றோர்கள் மீது பிரியம்கொள்வர்=
எந்த காரியத்திலும் சிந்தித்து செயல் படுவார்கள் –
போக பாக்கியங்கள் நிறைய பெறுவார்கள்==யார் எதை
சொன்னாலும் நம்ப மாட்டார்கள் தன் மனதிர்க்கு இது சரி
என பட்டால் மட்டுமே அதை செய்வார்கள்-அழகிய
மனைவி அன்பான குழந்தைகள் என்று வாழ்வார்கள்=
எந்நன்றி கொள்வாருக்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய் நன்றி கொன்ற மகருக்கு என்ற
திருக்குறள் படிவாழ்வார்கள்-சிலர் கட்டிடபொறியாளர்கள்
ஆக சுருசுருப்பாக வாழ்வார்கள் –
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
18 . கேட்டை
**********
கேட்டை நட்சற்றதின் நான்கு பாதங்களும் விருசிகத்தில அமர்ந்து இருக்கும்
==பொதுவாக கேட்டைஎன்றால் அதிக பிரசங்கி குடும்பத்துக்கு
ஆகாது ===கெட்ட கேட்டுக்கு ஒரு கேட்டை வேறயாம் ===
கேட்டையாம் கோட்டை மூட்டையாம் வேட்டை ===கேட்டை=1
மூத்த மைத்துனருக்கு ஆகாது என்றும் === கேட்டை -2 ஆம் பாதம்
கோட்டை கட்டி கோட்டையை அழிக்கும்== கேட்டை -3ஆம் பாதம்
கோட்டையில் பிறந்து கோட்டையை அழிக்கும் கேட்டை -4 -ஆம்
பாதம் அழிக்கும் === போன்ற பலவேறு பழமொழிகள் உண்டு
இதை அனுபவத்தில் அவவர்கள் உணர வேண்டும் ,சில
ஜாதகங்களில் உண்மையும் கூட உண்டு –
சிரித்து பேசி வியாபாரம் செய்வதில்
கெட்டிக்காரர்கள்==இவர்களுக்கு நல்ல புத்திரர் , புத்ரி
கிடைக்கும் ==தாய் தந்தை சகோதர சகோதரி மீது மிகுந்தே
மிகுந்த பாசம் கொண்டவர்கள் === பூமி சொத்து இவற்றின்
மூலம் வருமானம் உண்டு ==யாரிடத்தில் எப்படி பேசினால்
எப்படி லாபம் கிடைக்கும் என்று யோசித்து அதற்கு ஏற்ப
பேசி காரியம் சாதிப்பார்கள்-
‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு ‘ என்ற
தத்துவத்தை கடை பிடித்து வாழ்வார்கள் ==ஒரு சிலருக்கு
கெட்ட நண்பர்கள் உண்டு அவர்களை தவிர்ப்பது நல்லது ==
இவர்களுக்கு உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவு ஆக இருக்கும்
இவர்கள் சமயோசிதமாக செயல் பட மாட்டார்கள் ==
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
19. மூலம்
***************
மூலத்தின் நான்கு பாதங்களும் தனுசு ராசியில் உள்ளன =
THE CENTRE OF THE GRAVITY OF THE GALAXY IS IN
MOOLAM PAADAM -1 பூமியின் மைய புள்ளி மூலத்தின்
1- ஆம் பாதத்தில் விழுகிறது == அகவே மூலம் 1 –
இல் பிறந்த பெண் கோபக்காரியாகவும் பிறரை மதிக்க
மாட்டார்கள் == மேலும் இது மாமனார்களும் ஆகாது
என்றும் சொல்லபடுகின்றது ===மேலும் தகப்பனுக்கு அரிஷ்டம்
என்றும் சொள்ளபடுகிறது ==
மூலம் -2- ஆம் பாதத்தில் ஒரு குழந்தை பிறந்தால்
அம்மாவுக்கு நோய் ஏறபடும் என்றும்===
மூலம் -3 ஆம் பாதத்தில் ஒரு குழந்தை பிறந்தால் தான நாசம்
என்றும் == மூலம் -4- ஆம் பாதத்தில் ஒரு குழந்தை பிறந்தால்
நல்லது என்றும் சொள்ளபடுகிறது ==
நல்ல தூக்கம் உள்ளவர்கள் ===தாய் – தந்தையை
விட்டு பிரிந்து சிலர் தனித்து வாழுவார்கள்== தவசிகள்
ஆன்மிகவாதிகள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்
தொழிலால் நல்ல முன்நேற்றம் உண்டு===இவர்களுக்கு
சொந்தம் பந்தம் ஆதரவு கிடைக்கும் ==ஞாபக்ம் மறதி
அதனால் பல பிரச்சினைகளை சந்திப்பார் ==சாப்பாட்டு
பிரியர்கள்=== பசி பொறுக்க மாட்டார்கள் ===
இசை ஆர்வம் உண்டு ===முன் – பின் –யோசனை
செய்யாமல் பல காரியங்களை செய்து பின்னால் வருந்துவார்
ஆண் மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம் என்பது
பழமொழி ஆகும் –
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் நட்சத்ர பொதுப் பலன்கள்-
******************
20- பூராடம்
*******
உயர்ந்த உருவமும் குறுகிய நெற்றியும்
உள்ளவர்கள்===பெண்களின் மனதை கவரும் தன்மை
உண்டு==எப்போதும் வாசனை திரவியம் பூசிக் கொள்வார்கள்=
வெளி நாட்டில் வாழும் எண்ணம் கொண்டவர்கள்==
அழகிய கண்கள் உண்டு ==தாய் மாமன் மீது
விசுவாசம் உண்டுபண்ணும் ===
இதில் பெண்கள் பிறந்தால் “ பூராடம் நூல் ஆடாது”
என்று பழமொழி சொல்வார்கள் ==பொதுவாக 27
நட்சற்றங்களில் ஆண்களுக்கு தோஷம் இல்லை
இல்லை என்றும் பெண்கலுக்கு மட்டும் தோஷம்தான்
என்று 1௦௦ வருட வாசன் திருக்கணித பஞ்சாங்கம்
சொல்கிறது===ஆனால் வாக்கிய பஞ்சாங்கம்
ஆண் , பெண் இருவருக்கும் தோஷம் உண்டு என்று
சொல்ல படுகிறது== இதை அனுசரிப்பது அவரவரர்
விருப்பம் ஆகும் –
விரிவான . விசாலமான எண்ணம்
கொண்டவர்கள் -பிறர் பொருளை தன் வசம் படுத்தும்
ஆற்றல் உள்ளவர்கள் -அடுத்தவருக்கு உதவி செய்வதில்
மிகுந்த எச்சரிக்கை உடையவர்கள்===உணவு வகையில்
சிற்றுண்டி விரும்பி சாப்பிடுவார்கள்===நல்ல நண்பர்கள்
உண்டு == கூட்டு தொழில் சிறப்பாக அமையும்-
மனைவியின் ஆலோசனை கேட்டு நடப்பது
நல்லது ===தாயின் அன்பும் அரவனைப்பும் கடைசி
வரை உண்டு ==வாகனத்தால் யோகம் உண்டு ==சிலர்
டிராவல் ஏஜென்சி நடத்துவார்கள்===பொய் பேச விரும்ப
மாட்டார்கள் ===தான தருமம் செய்யக் கூடியவர்கள் ===
பிறரரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம்
உள்ளவர்கள் –
தன்னை நம்பி வருவோர்க்கு நல்ல ஆதரவு
கொடுத்து உதவுகின்ற மனப்பக்குவம் உண்டு -பொதுவாக
எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருப்பான்==இதில்
பிறந்த ஆண் பெண் இருவரும் மற்றவர்கள் தனக்கு கீழ்
படிந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை கை
விட்டால் வாழ்கையில் பேரும் புகழும் பெற்று
வாழ்வார்கள் –
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
21, உத்திராடம்
**********
உத்திறாடத்தில் பிறந்தால் “ ஊர் கோடியில்
ஒரு காணி நிலம் ‘” உண்டு என்ற பழமொழி உண்டு ==
உருண்ட கண்கள் , கனிவான பார்வை , அழகிய
தோற்றம்தான் உள்ளவர்கள் ===” என் வழி தனி வழி
என்று வாழுவார்கள் ===நீரில் விளையாட அதிக
விருப்பம் உள்ளவர்கள் —
இவர்கள் நண்பர்களிடம் “ நல்லவனுக்கு
நல்லவன் , கெட்டவனுக்கு கெட்டவன் “ என்று பெயர்
பெறுவார்கள் ==பெண்கள் விரும்பும் அளவுக்கு கவர்ச்சி
உள்ளவர்கள் ===ஆன்மிக ஈடுபாடு உண்டு == நல்ல
நண்பர்கள் == மனைவி == குழந்தை ==தாய் =தந்தை
என்று மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவார் ==
நீதி ,நெறி தவாறத உத்தமர்கள் ===அரசு
ஆதரவு கிடைக்கும்== இவர்கள் எந்த துறையில் வேலை
செய்தாலும் அந்த துறைக்கு இவாரல் நல்ல பெயர்
ஏற்படும் –
+++++++++++++++++++
உங்கள் நட்சத்ர பொதுப் பலன்கள் –
*******************
22- திருவோணம்
**********
வசிகர தோற்றம் , கனிவான பார்வை , அழகிய
வீடு , என்று தனித்து வாழுகின்றான்= இவர்கள் வழி
நேர் வழி நியாயம் என்று இருப்பார்கள் == கோபத்தில்
கூட இவர்கள் முகம் அழகாகவும் இருக்கும் ===
உத்யோகம் , தொழில் , பட்டம் , பதவி , எதுவானாலும்
இவர்கள் நினைத்தபடியே நடக்கும் ===
இவர்கள் ஊருக்கு உபகாரி==
இவர்கள் சாதிக்க முடியாத விசியங்கள் கூட இவர்கள்
நேரில் சென்றால் அதை வெற்றியில் முடித்துக்
கொடுக்கும் வல்லமை பெற்றவர்கள் ===ஆனால் தனக்கு
செய்தால் அது தோல்வியில் முடியும் ===சுறுசுறுப்பு
உற்சாகம் , வேகமாக செயல்படுவார்கள்===
உதவி கேட்டு வருபவருக்கு தன்னிடம்
இல்லா விட்டாலும் ,பிர்ரர் இடம் சென்று உதவி கேட்டு
உதவி செய்வார்கள் ===வளர்பிரை சந்திரனுக்கு மேல
சொன்னவைகள் பொருந்தும் == ஆனால் தேய்பிறை சந்திரனுக்கு
பலன்கள் மாறுபட்டு இருக்கும் ===கஞ்சத்தனம் , தர்ம சிந்தனை
இல்லதவர்கள் ===தேவை இல்லாத கோபத்தால் பொருள்
இழப்பு , நஷ்டம் ஏற்படும் ===எப்படியும் பெரியோர்கள் ஆசியால்
சமயத்தில் ஆதரவு கிடைக்கும் ==
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
23 . அவிட்டம்
********
“அவிட்டம் நட்சற்றதில் பிறந்தால் தவிட்டுப் பானை
எல்லாம் தனம் – என்பது பழமொழி -இவர்கள் பிறந்த பின்
குடும்ப மேன்மை , நிலத்தில் லாபம் உண்டாகும் என்பதாம் ===
முறையான தொழில் கல்வி , அழகிய முகம்
உறுதியான கால்கள் உள்ளவர்கள் ==கொடுத்த வாக்கை
காப்பாற்ற கடுமையாக உழைப்பார்கள்==அதிகம் பேச
மாட்டார்கள் -எதையும் செயல்முறையில் காட்டுவார்கள்-
மனைவி சொல்லே மந்திரம் என்று வாழுவார்கள் –
சிலருக்கு தாய் , தந்தையை விட்டு பிரிந்து
தனித்து வாழும் நிலை எற்படும் ==ஆச்சாரம் தவறக்கூடாது
என்ற கொள்கை உடையவன் -கம்ப்யூட்டர் , இரும்பு , நெருப்பு
தொழில் செய்வார்கள் -திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
என்ற பழமொழிக்கு ஏர்ப வாழுவார்கள் –
தன் கையே தனக்கு உதவி என்ற கொள்கை
உடையவர்கள் -தன்னம்பிக்கை , விடாமுயற்சி , தைரியம் ,
இவர்களுடன் கூடப் பிறந்த குணம் ஆகும்- பிரர் பொருளையும்
அடுத்தவர் கையையும் எப்போதும் நம்ப மாட்டார்கள்-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் நட்சத்ர பொதுப் பலன்கள் –
*****************
24- சதயம்
*******
சதயம் என்பது நூறு நட்சத்ரங்களின் தொகுப்பு
என்று சொல்லப்படுகிறது -சதயம் நட்சத்ர நாளில்
தஞ்சையில் ராஜராஜசோழன் முடி சூடிக் கொண்டான் –
சதயம் என்றாலே மிகவும் பெரிய மனித தோரனை-
ஆணவம் , கர்வம் , பிடிவாத குணம் நிறைந்து இருக்கும் –
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் == டேக் இட்
ஈஸி பாலிசி கொண்டவர்கள் -எதிரிகளை வெல்லுவார்கள் =
நீரில் நீந்துவதில் மிகுந்த விருப்பம் உண்டு -நீதி நூல்களை
விரும்பி படிப்பார்- “ யாதும் ஊரே யாவரும் கேளீர் “
என்று நட்புடன் வாழுவார்கள் –
அழகான உதடுகளும் . உறுதியான கால்களும்
உள்ளவர்கள் – தெய்வபக்தி , மனித நேயம் கொண்டவர்கள் ==
வீரம் , விவேகம் உண்டு – அடிக்கடி பயணம் செய்வதால்
உடல் நலம் பாதிக்கும்- பெற்றோருக்கு இறுதி காலம்
வரை உதவியாக இருப்பார்கள் = இரகசியங்களை பாதுகாப்பார்
ஒரு சிலர் ரகசிய துறையில் பனி புரிவார்கள்-
பொறாமை குணம் இல்லாதவர்கள் -தீர்த்த யாத்திரை
புண்ணிய யாத்திரை பிற்காலத்தில் மேற் கொள்ளுவார்கள் –
மோட்ச பாக்கியம் நிலைக்கும் பொருட்டு வேத ஆகமங்களில்
ஈடுபடுவார்கள்-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
25.- பூரட்டாதி
***********
இந்த நட்சற்றடின் அதி தேவதை குபேரன்
ஆவார் – இவரை வழிபட இவர்களுக்கு நன்மை கிடைக்கும்-
முக்காலமும் அறிந்த ஞானிகள் போல் இருப்பார்-எல்லோருக்கும்
உதவ வேண்டும் என்ற நல்ல குணம் உள்ளவர் ==அழகிய
தோற்றம் அடிக்கடி நோய் வாய் படுவர்=== நெய் , பால் ,
தயிர் , வெண்ணை , உண்பதில் அதிக விருப்பம் உள்ளவர் ==
தவசிகள் , சிவனடியார்களை போற்றி வனங்குவர்
சொந்த பந்தங்களில் ஏர்படும் பிரச்சனையை நியாயமான
முறையில் தீர்த்து வைப்பார் ==சிலர் வக்கில் நீதிபதியாக
பணி புரிவார்கள் -உலைப்பில் உயர வேண்டும் என்ற
நம்பிக்கை உள்ளவர் -பிற்காலத்தில் சகோதிரிகள்
சகோதரர்கள் பகை ஆவார்கள் ==மனைவி மக்கள் மூலம்
அமைதியும் ஆனந்தமும் அடைவார்கள்=
உலகை அல்லது ஊர் சுற்றி பணி
புரிவதில் விருப்பம் உள்ளவர்கள் -பெண்களை தாயாக
சகோதரியாக பாவித்து பழகுவார்கள் -முன்னோர்கள்
காட்டிய வழியில் தனது வாழ்க்கையை நடத்துவார்கள்-
குல வழக்கத்தை பின் பற்றுவார்-சிறந்த கலா ரசிகர் ==
எளியோருக்கும் , இயலாதவறுக்கும் தன்னால் முடிந்த
உதவியை தவறாமல் செய்வார்கள் –
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் நட்சத்ர பொதுப் பலன்கள்-
******************
26 – உத்திரட்டாதி
***********
சின்ன விசயத்தை கூட பெரிய பூதாகரமாக கிளப்பி
விடுவார்கள்-நல்லவனுக்கு நல்லவன் கெட்டவணுக்கு
கெட்டவன் – பட்டிமன்ற பேச்சாளர் -வழக்கறிஞர்-
நீதியை காப்போம் என்று சத்யம் செய்து
வாழுவார்கள் ==ஒரு சிலர் பொய் வழக்குகளில் வாதாடி
வழக்குகளை வெற்றி பெற செய்வார் –
அகன்ற மார்பு பரந்த முகம் கொண்டவர்கள் –
த்யானம் , ஆன்மீகம் , ஈடுபாடு உண்டு -எதிர்காலத்தில்
நடப்பதை தனது த்யான ஆற்றல் மூலம் அறிந்து
கொள்வர் == அதற்கு ஏர்ப வாழ்கையை மாற்றி
அமைத்துக் கொள்வார்கள் -பிறர் வளர்வதை கண்டு
பொறுக்க மாட்டார்கள்-
பெண்களால் லாபம் உண்டு -இவருக்கு வரும்
மனைவி இவருக்கு அறிவுறை சொல்லுவார்கள்
ஆனால் இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ==
நொறுக்கு தீனி சாப்பிடுவார்கள் == சிக்கனமாக
வாழுவார்கள் ==அரசாங்கம் அல்லது அலுவலகத்தில்
நல்ல பேரும் புகழும் உண்டு –
பிற்காலத்தில் தீர்த்த யாத்திரை கொள்வார்கள்=
ஒரு சிலர் மகனை இழந்த பின்னும் நீண்ட காலம்
வாழுவார்கள் -பிற மதத்தை சார்ந்தவர்கள் இவருக்கு
உதவி செய்வார்கள்-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
27- ரேவதி-
*********
இவர்கள் எவ்வளவு நல்லவர்கள் ஆக இருந்தாலும்
சமுதாயத்தில் கிரிமினல்கள் என்று கெட்ட பெயர்
வாங்குவார்கள் -பனை மரத்தின் அடியில் அமர்ந்து
பாலை குடித்தாலும் கள்ளை குடித்தான் என்ற அவ
பெயர் ஏற்படும் -சிலர் இவர்களை குசும்ஸ புத்தி
உடையவன் என்று இகல்வார்கள் –
வந்தோரை வரவேற்று அவர்களுக்கு அவரது
தேவையை பூர்த்தி செய்வர்-
ஆன்மீகம் , கல்விமான் , பெரியோர்களிடம்
பக்தி விசுவாசம் உள்ளவர்கள்=இவர்கள் எங்கு தொழில்
செய்தாலும் அந்த இடம் முன்னேற பாடு படுவார்கள் =
வாக்கு சாமரியத்தால் பிறரை மடக்கி விடுவார்கள் –
ஆசிரியர்கள் அர்ச்சகரகள் , கணக்கு , வழக்கு =
தெரிந்து இருப்பான் – நல்ல விஷயத்தை யார்
சொன்னாலும் கேட்டு அதை அனுபவத்தில் கடை
பிடிப்பார் == அழகான மனைவி அன்பான குழந்தைகள்
பெற்று சமுதாயத்தில் புகழ் பெர்று வாழுவார்கள் –
27 – வது நட்சத்ரம் கடைசியாக இருப்பதால் அன்பு ,பண்பு
பாசம் ,கொண்டு வாழுவார்கள் என்பதாம் –
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!