17.8 C
New York
Monday, June 10, 2024

Buy now

spot_img

திருவாதிரை நட்சத்திரத்தை பற்றிய பொதுவான பலன்கள்

திருவாதிரை நட்சத்திரத்தை பற்றிய பொதுவான பலன்கள்.

1. சிவனுக்கு பிரியமான நட்சத்திரம்.

2. ரகசியமும் சூட்சுமமும் நிறைந்த நட்சத்திரம்.

3. இவர்கள் மனதில் எண்ண கணக்குப் போடுகிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

4. உயர்ந்த எண்ணம் உயர்ந்த சிந்தனை எல்லாவற்றிலும் பிரம்மாண்டம் எதிர்நோக்கு.

5. எல்லோரிடம் சகஜமாகவும் சிரித்து நன்றாக பேசுவார், பேசப்பேச வே அவரைப்பற்றி எடையும் போட்டுவிடுவார்.

6. மனதில் எப்பொழுதும் உயர்வை நினைத்து யோசித்துக் கொண்டே இருப்பார்.

7. குறுகிய காலத்தில் தனித்துவமான வித்தை மற்றும் செயல்பாடுகள் அடைந்து வெற்றி பெறும் நபர்கள்.

8. இவர்கள் இரண்டு சக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் எது வாங்கினாலும் அது வேகமாக செல்லும் திறன் இருக்கிறதா என்பதை கூர்ந்து கவனிப்பார்.

9. எந்த ஒரு பொருளை வாங்கினாலும் சற்று பெரிதாக இருக்க வேண்டும்.

10. இளகிய மனமும் முன்பு கழுத்தறுக்கும் சுபாவமும் உண்டு.

11. சற்று முறைதவறி இருந்தாலும் அந்தக் காரியம் வெற்றி பெற வேண்டும் என்கிற நினைப்பு இருக்கும்.

12. தன்னுடைய செயல்முறைகளை எவருக்கும் தெரியாமல், மனதிலேயே புதைத்து கொள்வார்.

13. இவர்களுக்கு சற்று அகங்கார செருக்கு இருந்தாலும், அதற்கு தகுதியானவர்களாக தன்னை வெளிப்படுத்துவார்.

14. குருமார்களிடம் பணிவாக நடந்து கொள்வார், அவர்கள் கூறும் அறிவுரைகளை யோசிக்காமல் செயல்படுத்துவார்.

15. புலால் உண்ணும் போஜன பிரியர்.

16. இவர்கள் பொய்யை உண்மை போல் பேசுவார்கள், எல்லோரும் நம்புவார்கள்.

17. வேதம் விழுந்திருக்கும் சற்று உயரமாக இருப்பார்.

18. பிற மதத்தினர் உடைய நட்பும் ஆதரவும் இவர்களுக்கு உண்டு.

19. ஆன்மீகம், தொழில், கணினி, எத்துறை ஆனாலும்,அதன் உச்சத்தை தொடுவது தான் இவர்களுடைய எண்ணமும் சிந்தனையும் ஆக இருக்கும்.

20. கொடுக்கின்ற பொறுப்பில் சிறப்பாக செய்து முடிப்பார், அதில் தன் முத்திரையைப் பதித்தார்.

21.ஒருவரது மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றால் போல் அவரை செயல்படுத்துவார்.

22. இந்த நட்சத்திரக்காரர்கள் பிற மனிதர்களை ஈர்த்து விடுவார்.

23.எல்லோரிடம் நன்றாகப் பேசுவார் சகஜமாக பேசுவார் ஆனால் திடீரென்று நன்றி மறந்தவர் ஆகிடுவார்.

24. ஒரு சிலர் தீய பழக்கம் இருக்கும், ஒரு காலகட்டத்தில் அதில் உச்சத்தை தொடவேண்டும் என்று அதற்கு அடிமையும் ஆகிவிடுவார்.

25. நல்லதும் ஆனாலும் கெட்டதா ஆனாலும், ரசித்து ருசித்து செய்வார்.

26.இவர்களிடம் நிரந்தரமான ஒரு குணங்களை, மற்றும் பழக்கவழக்கங்களை பார்க்க முடியாது.

27.குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகி உச்ச நிலையை அடைந்து பின்பு ஒரு சிலர் காணாமல் போய்விடுவார்.

28.எல்லா விஷயங்களிலும் தொழில்நுட்பங்களும் ஆர்வம் இருக்கும் அதை கற்றுக் கொள்வார்,ஆனால் அதை சில நேரங்களில் சரியாக பயன்படுத்த மாட்டார்.

29. இவர்கள் ஒரு தொழிலில் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள் பல தொழில்கள் பல வேலைகளை செய்யக் கூடிய திறமை இவர்களிடம் உண்டு.

30. இவர்கள் ஆராய்ச்சி வேலையை மேற்கொண்டால் சிறந்ததொரு நிலையை உச்ச நிலையை அடைவார்.

31.பொதுவாகவே இந்த நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டு யோகம் அதிகம் இருக்கும்.

32. இவர்களுக்கு தாமத திருமணம்தான் நடைபெறும், பெரும்பாலும் பல நிர்பந்தங்கள் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்வார்கள். இவர்களுக்கு தாமத திருமணம்தான் சிறந்தது.

33.இவர்கள் வியாதியில் படுத்துவிட்டால் அது தீராத வியாதி ஆக இருக்கும் சட்டென்று குணப்படுத்த முடியாது.

34. இந்த நட்சத்திரக்காரர்கள் ஒரு சில பேருக்கு, இரண்டு தாய் அல்லது தந்தை இருக்க வாய்ப்புள்ளது.

35. இந்த பெண் நட்சத்திரக்காரர்களுக்கு, ரத்தம் சம்பந்தப்பட்ட கர்ப்பப்பை, ஆத்மா, மென்சஸ், போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

36. பெண் நட்சத்திரக்காரர்கள் சற்று உயர்வான ஆடை அணிகலன்கள், மற்றும் வித்தியாசமாக, வண்ணம் இருக்கும் ஆடைகளை பளிச்சென்று இருக்குமாறு அணிவார்.

37. இவர்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு குட்டி கலாட்டா இருக்கும்.

38. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் இருக்கும் ஒற்றுமை இருக்காது, ஒரு சில பேருக்கு முறைதவறிய உறவு இருக்கும்.

39. திடீர் அதிர்ஷ்டம் ,திடீர் சரிவு, திடீர் வழக்கு, திடீர் விபத்து, திடீர் மரணம், மற்றும் ஒரு சில பேருக்கு குடும்பத்தின் மீது அதிகப் பற்று இருக்காது.

🙏🌹🙏🙏🌹🙏🌹🌹
ராமசுப்பிரமணியம் ஈரோடு
ஜோதிட மாணவன்.
🙏🌹🙏🙏🙏🌹🌹🌹
(மேலே சொல்லப்பட்ட அனைத்தும் பொதுவானவை)
🙏🌹🙏🌹🙏🌹🌹

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!