13.7 C
New York
Saturday, November 26, 2022

Buy now

spot_img

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் சில
கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாகக் காண்போம்.

1. கடகம், சிம்மம் இந்த இரண்டு லக்கினகாரர்களுக்கும், செவ்வாய் யோக காரகர் ஆவதால், செவ்வாய் தோஷம் இல்லை.

2. மேஷம் மற்றும் விருச்சிகம் நான்காம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

3. கடகம் மற்றும் மகரம் ஏழாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

4. தனுசு மற்றும் மீனம் எட்டாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

5. ரிஷபம் மற்றும் துலாம்  பன்னிரெண்டாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

6. மிதுனம் மற்றும் கன்னி இரண்டாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

7. செவ்வாய் தனது நண்பர்களான சூரியன், சந்திரன் மற்றும் குரு வீடுகளான கடகம், சிம்மம், தனுசு மற்றும் மீனத்தில் இருப்பின், செவ்வாய் தோஷம் இல்லை.

8. செவ்வாய், தனது சொந்த வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிகத்தில் இருப்பின், செவ்வாய் தோஷம் இல்லை.

9. செவ்வாய் வக்கிரம் அடைந்திருப்பின் தோஷம் இல்லை.

10. செவ்வாய் அமர்ந்துள்ள வீட்டு அதிபதி கேந்திர (1, 4, 7, 10) வீடுகளிலும் மற்றும் திரிகோண (1, 5, 9) வீடுகளிலும் அமர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை. இவை ஒரு சிலவே, மேலும் திருமணப் பொருத்தத்தின் போது நன்கு ஆராய்ந்து திருமணம் செய்விப்பதால், திருமணப் பந்தம் நீண்டு நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் தேவை இல்லை.

11. குரு பார்வை பெற்ற செவ்வாய்க்கு
செவ்வாய் தோஷம் இல்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,589FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!