9.7 C
New York
Monday, March 25, 2024

Buy now

spot_img

கடவுளின் பார்வை யார் மீது படும்

கடவுளின் பார்வை யார் மீது படும்

1) யார் கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் படைத்தவரோ அவர் மீது
2) சத்தியத்தின்படி நடப்பவர் மீது
3) உள்ளொன்று புறமொன்று இல்லாதவர் மீது
4) சுயநலமற்ற அன்புள்ளவர் மீது
5) யார் மனதையும் புண்படுத்தாதவர் மீது
6) நேர்மையானவர் மீது நிலை தவறாதவர் மீது
7) விருப்பு வெறுப்பின்றி பிறருக்கு உதவுபவர் மீது
8) எந்த சூழ்நிலையிலும் யாரையும் ஏமாற்றாதவர் மீது
9) அனைவரும் நம்மைப் போன்ற உயிர்கள் என்று உணர்பவர் மீது
10) எதற்கும் கவலைப்படாமல் நன்னெறியில் மகிழ்ச்சியாக நடப்பவர் மீது
11) கோபம் வெறுப்பு ஆவேசம் பொறாமை இல்லாதவர் மீது
12) தீய உள்நோக்கம் கொண்ட பார்வை இல்லாதவர் மீது
13) பிறரை மதிப்பவர் மீது
14) பணிவுடன் நடந்து கொள்பவர் மீது
15) இனிமையான வார்த்தைகளை நெஞ்சில் நஞ்சில்லாமல் பேசுபவர் மீது
16) மரியாதையின் படி நடப்பவர்கள் மீது மரியாதை கொடுப்பவர்கள் மீது
17) உழைப்பின் உண்மையை உணர்ந்து உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மீது
18) பிறரை மனம் சொல் செயலால் துக்கப்படுத்தாதவர்கள் மீது
19) ஏழ்மையிலும் தர்மத்தை மீறாதவர்கள் மீது
20) பொய்யுரைக்காதவர்கள் மீது
21) பிறர் மீது பழி சுமத்தாதவர்கள் மீது
21) பிறரை மன்னிப்பவர்கள்மீது
22) நேரத்தை வீணடிக்காதவர்கள் மீது
23) சுறுசுறுப்பாக தன் கடமையை தர்மத்தின்படி செய்பவர்கள் மீது
24) எந்த நிலையிலும் பிறரை ஏளனம் செய்யாதவர்கள் மீது
25) கருணை மனம் கொண்டவர் மீது
26) சத்தியத்திற்காக அச்சப்படாமல் வாழ்பவர் மீது
27) நன்மை செய்வதற்காக சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்பவர் மீது
28) நடந்த முடிந்த தவறுக்கு வினாடியில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஏன் எதற்கு என்ற குழப்பத்தில் வராமல் மீண்டும் நாணயமாக முன்னேறி செல்லக்கூடிய முயற்சி செய்பவர் மீது
29) எப்படிப்பட்டவரையும் உயர்ந்த கண்ணோட்டத்தில் பார்ப்பவர் மீது
30) எந்த சூழ்நிலையிலும் கடும் வார்த்தை பேசாதவர் மீது
31) மூடநம்பிக்கைகளை புறந்தள்ளி எப்பொழுதும் எனக்கு இறைவன் உதவுவார் என்று பரிபூரணமாக நம்புபவர் மீது
32) பாவம் செய்யாதவர் மீது பிறரை பாவம் செய்ய தூண்டாதவர் மீது
33) எல்லாம் இறைவன் கொடுத்தது என்று வாழ்பவர் மீது
34) நான் எனது என்று சொல்லாதவர் மீது யாவும் நன்மைக்கே நடக்கின்றது என நினைப்பவர் மீது
35) விரோதிகளையும் மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளவர் மீது
36) வித்தியாசம் வேறுபாடு இல்லாத சமநோக்கு பார்வை உடையவர் மீது
37) சுயம், தொழில், குடும்பம்,சம்பந்தம் இவற்றில் தர்மத்தை மீறாதவர் மீது
38) நல்ல சகவாசத்துடன் இருப்பவர் மீது
39) பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் மீது
40)நல்லதை பேசி பிறரது மனதை அமைதிப்படுத்துபவர் மீது
41) நன்றி மறவாதவர்கள் மீது
42) மலர்முகம் மாறாதவர்கள் மீது
43) பசியாற்றுபவர் மீது
44) நம்பிக்கை துரோகம் செய்யாதவர் மீது
45) சந்தேக புத்தி இல்லாமல் இறைவனான தன்னை பரிபூரணமாக நம்புபவர்கள் மீது
46) மங்களமான எண்ணம் சுபமான வார்த்தைகள் உற்சாகம் கொடுக்கக் கூடிய செயல்கள் இம்மூன்றும் உள்ளவர் மீது
47) இறைவனான தன்னையே நினைத்து தன் நினைவை பிறருக்கும் ஏற்படுத்துபவர் மீது
48) பிறரது தவறுகளை தனது தவறுகளாக எண்ணி மறப்பவர் மன்னிப்பவர் மீது
49) சலிப்பின்றி உற்சாகத்துடன் பிறருக்கு உதவி செய்பவர் மீது
50) நிலையற்ற இந்த வாழ்க்கையில் நிலையானது அன்புதான் என்றெண்ணி வாழ்பவர் மீது
51) தினசரி இறைவனுக்கு செய்யும் கடமைகளில் தவறாதவர் மீது
52) மகிழ்ச்சியுடன் உணவு உபசரிப்பவர் மீது
53) உணவை பிரசாதம் என்றும் நீரை தீர்த்தம் என்றும் அருந்தி மகிழ்ந்து தனது வாழ்வு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று வாழ்பவர் மீது
54) இறை நெறியிலும் இறைவனிடத்திலும் மாறாத அன்புள்ளவர் மீது
55) இறைவனின் புகழையே சதாகாலமும் பாடிக்கொண்டே இருப்பவர் மீது
56) இறை போதனைகளின் வழிப்படி நடந்து பிறருக்கு அதை போதிப்பவர் மீது
57)இது இறைவனின் விருப்பம் என்றெண்ணி அமைதியாக அவரது நினைவில் இருப்பவர் மீது
58) மௌனத்தில் தியானமும் சப்தத்தில் ஞானமும் மட்டுமே வெளிப்படுபவர் மீது
59) தெய்வீக தேஜஸால் தனது தோற்றத்தின் மூலம் இறைவனை வெளிப்படுத்துபவர் மீது
60) இறைவன் கொடுத்த செல்வத்தை தவறான வழிகளில் செலவு செய்யாதவர் மீது
61) தகுதியறிந்து தானம் கொடுப்பவர் மீது
62) தனது அன்றாட கணக்கு வழக்குகளை இறைவனிடம் ஒப்படைப்பவர்மீது
63) ஒவ்வொரு விசயத்திற்கும் இறைவனுக்கு மனதார நன்றி செலுத்துபவர் மீது
64) அனைவரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒருவர் மீது
65) சமாதானம் செய்து மனதை ஆற்றுப்படுத்துபவர் மீது
66) எளிமையாகவும் உதாரணமாகவும் வாழ்பவர் மீது
67) அனைவரையும் உளமார வாழ்த்துபவர்கள் மீது
68) உணவு,உடல், உடை,இருப்பிடம்,செயல் யாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்பவர் மீது
69)நிதானமாக இருப்பவர் மீது பிறருக்கு நிம்மதியை தருபவர் மீது
70)குணங்கள் நிறைந்த குணவான் மீது
71) அறியாமையில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் மீது
72) சர்வ சம்பந்தங்களையும் இறைவன் மீது வைத்துள்ளவர் மீது
73) இந்த உடலில் இருந்து ஆன்மா தான் அனைத்தும் செய்கின்றது என்று கவனம் வைத்திருப்பவர் மீது
74)அனைவரும் அழிவற்ற ஆத்மாக்கள் என்று உணர்ந்து நடப்பவர் மீது
75)சகித்துக்கொண்டு பொறுமை காப்பவர் மீது
76)மனதாலும் செயலாலும் யாருக்கும் ஹிம்சை கொடுக்காத அஹிம்சாவாதி மீது
77) எப்பொழுதும் திருப்தியாக இருப்பவர் மீது
78) மனிதாபிமானத்துடன் நடப்பவர் மீது
79) செயலின் விளைவை அறிந்து காரியம் செய்பவர் மீது
80) பாவம் செய்வதற்கு அஞ்சி நடப்பவர் மீது
81)ஆசிகள் கொடுப்பவர் ஆசிகள் அடையப் பெற்றவர் மீது
82) சொல்லும் செயலும் சமநிலையில் இருப்பவர் மீது
83)உலக நன்மைக்கான காரியத்தில் காரணம் சொல்லாதவர் மீது
84) வாயால் சொல்லாமல் அனுபவப்பூர்வமாக இறைவனை வெளிப்படுத்துபவர் மீது
85) ஒவ்வொரு நிமிடமும் இறைவன் தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்று வாழ்பவர் மீது
86) சம்பந்தம் தொடர்பில் வருபவருக்கு ஏதாவது ஒரு நற்குணம் என்ற பரிசை அளிப்பவர் மீது
87) இறை நியமத்தின் பூர்வமாக பிறருக்கு மகிழ்ச்சி அளிப்பவர் மீது
88)தான் வாழ்க்கையில் அடைந்த அனுபவங்களை பிறருக்கு கூறி நல்வழிப்படுத்துபவர் மீது
89)எப்பொழுதும் இறைவனின் தொடர்பில் இருந்து தன்னை இவ்வுலகில் பாதுகாத்துக் கொள்பவர் மீது
90) தீயதை பார்க்காமல் கேட்காமல் சொல்லாமல் நினைக்காமல் இருப்பவர் மீது
91) சோதனைகளில் எடுத்துக்காட்டாக வாழ்பவர் மீது
92) புண்ணிய காரியங்களை மட்டுமே செய்பவர் மீது
93) ஆன்மாவின் ஆனந்த நிலையில் நிலைத்து இருந்து பரமாத்மாவின் பேரானந்த நிலையில் மூழ்கி இருப்பவர் மீது
94) உடல் ஒரு ஆலயம் எனப் புரிந்து அதை ஆரோக்கியமாக வைத்திருப்பவர் மீது
95) தினசரி சுயமுன்னேற்ற பயிற்சியில் காலம் தவறாமல் ஈடுபடுபவர் மீது
96)தன்னை தாயாய் கவனிக்கும் பஞ்ச தத்துவங்களுக்கு இறைவனிடமிருந்து சக்தியை வாங்கி வழங்குபவர் மீது
97)அன்பாகவும் விலகியும் தாமரை மலர் போல் பற்றற்று வாழ்பவர் மீது
98)தவசீலராகவும் குணசீலராகவும் இருந்து பிறருக்கு நன்மை செய்பவர் மீது
99) மனமுடைந்து போனவருக்கும் நம்பிக்கையை வழங்கி அவரை வலிமை உடையவராக மாற்றுபவர் மீது
100) செய்பவரும் செய்விப்பவரும் அவரே
101) என்றுணர்ந்து அவரே உலகம் என்று சிவனே என்றிருப்பவர் மீது
இப்படிப்பட்டவர்கள் மீது தந்தை ஈசனின்
அருள் கூர்ந்த பார்வையானது நிச்சயமாக ஏற்படுகின்றது. இது ஒவ்வொன்றும் ஒரு சதவிகிதம் என்று வைத்துக்கொண்டாலும்
நாம் எத்தனை சதவிகிதம் அவரது தயை நிறைந்த பார்வைக்கு பாத்திரமாகி இருக்கின்றோம் என சோதித்து கொள்வோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!