11.1 C
New York
Tuesday, April 16, 2024

Buy now

spot_img

பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா உங்களுக்கு

பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா உங்களுக்கு

✡️எதிரி நம் முன்னே மாட்டிக்கொண்டால், உண்மையிலேயே மனதுக்குள் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம். அப்படி உங்களுடைய எல்லா எதிரிகளையும் வீழ்த்த வேண்டுமா? அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமையில் விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியாக இருந்தாலும் சூரியனைப் போல நின்று அவர்களை காலி செய்து விடலாம்.

சூரியபகவான்

நீங்கள் எதிரியை வீழ்த்த நினைத்தால், சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள். சூரியன் தான் மிகப்பெரிய நட்சத்திரம். இந்த பிரபஞ்சத்துக்கே ஆற்றலைத் தரக்கூடியவர். இந்த சூரியனை வழிபட்டவர்களுக்கும் அவர் நிச்சயம் போதுமான ஆற்றலைத் தந்து வெற்றிபெறச் செய்வார் என்று நம்புங்கள்.

சூரிய விரத விதிமுறைகள்

✡️சூரிய விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தீர்களென்றால், காலையில் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் தலைமுழுகி குளிக்க வேண்டும்.

✡️நீங்கள் பூஜை செய்யப்போகிற இடத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அர்ச்சனை தட்டை தயார் செய்து கொள்ளுங்கள். அதில், கொஞ்சம் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆராதனை

✡️விளக்கை ஏற்றிக் கொண்டு, அதை சூரியன் உதிக்கும் திசை நோக்கி வைத்து, ஒரு சிறிய சொம்பில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து சூரிய பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, அந்த அர்ச்சனைத் தட்டின் மீது தீர்த்தம் போல தெளித்து விடுங்கள்.

விரத சாப்பாடு

✡️பூஜை முடிந்தவுடன் நீங்கள் சாப்பிட வேண்டியது ஏதேனும் இனிப்பு வகையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வெல்லம் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பை சாப்பிடலாம். அதன்பின் மாலை வரை தண்ணீர், பால் தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.

✡️காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருந்துவிட்டு, மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக, நன்கு சாப்பிட்டு விட வேண்டும். ஒருவேளை நீங்கள் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக சாப்பிடவில்லை என்றால், கட்டாயம் அன்றைய நாள் முழுக்க சாப்பிடக்கூடாது. அடுத்த நாள் காலை சூரிய உதயத்துக்குப் பின்னர் தான் சாப்பிட வேண்டும்.

✡️பசு சாணம் தங்கமான கதை
ஒரு ஊரில் மூதாட்டி ஒருவர் தினமும் அதிகாலை எழுந்து குளித்து சூரியனை வழிபடுவது வழக்கம். அப்போது தான் பூஜை செய்யும் இடத்தை பசுவின் சாணம் கொண்டு முழுகுவார். அவரிடம் சொந்தமாக பசு கிடையாது. பக்கத்து வீட்டின் பசுவிலிருந்து தான் சாணம் எடுத்து வருவார். இது தொடரவே, இதைப் பார்த்த பொறாமை கொண்ட பக்கத்து வீட்டுக்காரி, அன்றைக்கு இரவே தன்னுடைய பசு மாட்டை பிடித்து வீட்டுக்குள்ளே கட்டிப்போட்டு விட்டார்.

✡️அடுத்த நாள் அதிகாலை எழுந்து, சாணம் எடுக்கப்போன மூதாட்டிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பசுவை காணவில்லை. சாணம் கிடைக்காத கவலையில், சோகமாகத் திரும்பிய பாட்டி, அன்றைக்கு பூஜை செய்யவில்லை. அன்றிரவு அவருடைய கனவில் தோன்றி, சூரிய பகவான் ஏன் நீ எனக்கு பூஜை செய்யவில்லை என்று கேட்டாராம். அதற்கு அந்த பாட்டி நடந்த கதையை முழுக்க விவரித்தாராம்.

✡️அதன்பின், சூரியன் அந்த பாட்டிக்கு ஒரு பசு மாட்டை கொடுத்தாராம். அது முழுக்க தங்கமாக சாணத்தை போடும் மாடு. இது அந்த பாட்டிக்குத் தெரியாது. வெளியில் பசு மாட்டைக் கட்டியிருந்தார். அதை எப்படியுா அந்த பக்கத்துவீட்டு பெண் கண்டுபிடித்து விட்டாள். எப்படியாவது இன்று பசுவை மாற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள். ஆனால் அதற்குள் மழை வருவது போல் இருக்கவே, பாட்டி பசுவை தன்னுடைய வீட்டுக்குள் கட்டிவிட்டார். அன்றிரவு வீட்டுக்கள்ளு பசு சாணம் போட்டது. அப்போதான் அந்த பாட்டிக்கு இந்த பசு சாணத்தை தங்கமாகப் பொடுகிறது என்பது தெரிய வந்தது.

✡️அதற்கு இதைக்கண்டு எரிச்சலடைந்த பக்கத்து வீட்டுப்பெண், தன்னுடைய கணவனை அழைத்து உடனடியாக, அரசனிடம் போய் அந்த பாட்டியின் பசுவை பற்றி சொல்லிவிட்டு வா எனறு கட்டளையிட்டாள். அதேபோலவே அவரும் செய்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அரசன் உடனே அந்த பசுவையும் பாட்டியையும் அழைத்து வரும்படி காவலர்களுக்கு ஆணையிட்டார். அவர்களும் அழைத்து வரவே, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அபபோது நடந்த கதையை பாட்டி சொன்னார். ஆனால் அரசன் நம்பவில்லை. யாரிடம் கதை சொல்லுகிறாய் என்று சொல்லி அந்த மாட்டை பிடிங்கிக் கொண்டார்.

✡️அன்றிரவு அந்த அரசனின் கனவில் சூரியபகவான் தோன்றி, நாளை காலையில், அந்த பசுவை பாட்டியிடம் கொடுத்துவிடு, இல்லையேல் உன்னுடைய சாம்ராஜ்ஜியத்தையே அழித்து விடுவேன் என்று கூறினாராம். உடனே பயந்து போன ராஜா பாட்டியின் வீட்டுக்கு தானே நேரில் சென்று பசு மாட்டைக் கொடுத்துவிட்டு தானும் ஆசி பெற்று வந்தாராம்.

விரத மகிமை

✡️இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?… தன்னை எதிர்க்கும் எதிராளி அரசனாகவே இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் வீழ்ந்து போவார்கள். அத்தகைய மகத்துவம் வாய்ந்ததுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை சூரிய விரதம்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!