20.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

ஆடி அமாவாசை தர்ப்பணம் அன்னதானம்

08/08/2021 ஞாயிற்றுக்கிழமை
ஆடி அமாவாசை
தர்ப்பணம் அன்னதானம்
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦

வாழ்க்கையில், யாரேனும் நமக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்தால், அவர்களுக்கு நன்றி சொல்லுவோம். ‘அவராலதான் இன்று நான் நல்லாருக்கேன். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்’ என்று சொல்லாதவர்கள் என்று எவருமில்லை.

ஆக, வாழ்வில் நன்றியுணர்வு மிக மிக முக்கியம். வாழ்க்கையில் ஒரு வேலையோ, பணமோ தந்து ஆபத்து சமயத்தில் பக்கத்துணையாக இருந்து நமக்கு உதவியவர்களை நன்றியுடன் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அப்படியெனில், இந்த உலகுக்கு நாம் வருவதற்குக் காரணமாக இருந்தவர்களை நாம் நன்றியுடன் நினைக்கவேண்டாமா?

நாம் இந்த உலகில் வருவதற்கு நம் தாய் தந்தை காரணம். அவர்களின் தாய் தந்தை காரணம். அவர்களுக்கும் முன்னே உள்ள தாய் தந்தை காரணம். இப்படி மூன்று தலைமுறை, மூன்று வம்சங்களின் தாய் தந்தையரை வணங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

அப்பேர்ப்பட்ட முன்னோர்கள், நம் வாழ்வின் ஏணிகள். விதைகள். அவர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்கக்கூடாது. அப்படி நன்றி சொல்லும் விஷயம்தான் தர்ப்பணம் அன்னதானம் வழிபாடு என்பதெல்லாம்!
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌

நம்மை இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்த முன்னோர் வழிபாட்டை வருடத்திற்கு 96 முறை தர்ப்பணம் செய்யவேண்டும், எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம். தர்ப்பணம் குடுக்க முடியாத பட்சத்திற்கு இந்த நாட்களில் அன்னதானமாவது செய்ய வேண்டும்

வருடத்தில் 96 நாட்கள்
💐💐💐💐💐💐💐💐

மன்வாதி 14
யுகாதி 4
மாதப் பிறப்பு 12 அமாவாசை 12 மஹாளய பட்சம் 16 வியதீபாதம் 12 வைத்ருதி 12
அஷ்டகா 4 அன்வஷ்டகா 4 பூர்வேத்யு 4
இறந்த நாளின் திதி 1
இறந்த நாள் 1 ஆக
மொத்தம் 96 நாட்கள்
தர்ப்பணம் அன்னதானம் வழிபாடு செய்யவேண்டும்

தாயும் தந்தையும் இல்லை என்றிருப்பவர்கள் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். நம் தாய் தந்தையரைத் தவிர, முந்தைய முன்னோர்களை நமக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை மனதால் நினைத்து, அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை தினங்கள். முக்கியமாக… ஆடி அமாவாசையில் வணங்கவேண்டும்.

ஆகவே, ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்
அன்று முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள்

ஆடி அமாவாசை அன்று உங்களிடம் யார் வந்து என்ன உணவுப் பொருள் கேட்டாலும் கண்டிப்பாக வாங்கி மனதார கொடுங்கள் ஏனென்றால் வந்திருப்பது எதோ ஒரு உருவில் உங்கள் முன்னோர்கள்…………….

என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி
9894770473

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!