28.7 C
New York
Friday, July 26, 2024

Buy now

spot_img

4 ம் பாவம்

4 ம் பாவம்

மனித முயற்சி என்பது
4 ம் பாவம்
தெய்வ அனுகிரகம் என்பது 9 ம் பாவம்

லக்னத்திற்கு திரிகோண பாவமான
இந்த 9 ம் பாவம்
அதிலிருந்து எண்ணி வரும்
8 ம் பாவமான
4 ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்

என்ற முன்னோர்களின் வாக்கு படி தன் முயற்சியால் வெற்றி பெறுவது
4 ம் பாவம்

ஏனெனில்

இயற்கை என்ற 5 ம் பாவத்திற்கு இந்த 4 ம் பாவம்
12 ம் பாவமாக வருவதால்

இயற்கையை தன் முயற்சியால் தனக்கு தகுந்த முறையில் மாற்றும் ஆற்றல் இந்த 4 ம் பாவத்திற்கு உண்டு

உதாரணமாக
மழை என்பது 5 ம் பாவம்
ஆனால்
அந்த மழை நீரை சேமித்து
தன் தேவைக்கேற்ப பயன் படுத்துவது 4 ம் பாவம்

ஓடும் நீர் என்பது 3 ம் பாவம்
அதை
அணை கட்டி , ஏரி அமைத்து
தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது 4 ம் பாவம்

மரங்கள் என்பது 5 ம் பாவம்
அந்த மரத்தை கொண்டு தனக்கு பயன்படும் பல பொருட்கள் செய்து பயன் படுத்துவது 4 ம் பாவம்

கிட்னி என்பது 7 ம் பாவம்
ஒருவருக்கு 2 கிட்னி பழுது அடைந்தாலும்
தனது மருத்துவ
முயற்சியால் கிட்னியை மாற்றி வைத்து பயன் அடைவது 4 ம் பாவம்

இயற்கை என்ற
தெய்வத்தால் உருவான பூமியை
தனக்கு சாதகமாக உணவுக்காக விவசாயம் ,
இருப்பிடம் , தன்னுடைய உடைகளுக்காகவும்
பயன்படுத்தி கொள்வது 4 ம் பாவம்

மனிதன் மனத்திருப்தி எனும் 11 ம் பாவத்தை அடைந்து விட்டால்
முயற்சி எனும் 4 ம் பாவத்தை கைவிட்டு விடுவான் மனிதன்

ஆம்
போதும் என்ற உணர்வு வந்துவிட்டால்
அடுத்தடுத்து
உழைப்பு குறையும்
ஏனெனில்
11 ம் பாவத்திற்கு அதிலிருந்து எண்ணி வரும் 4 ம் பாவம்
6 ம் பாவமாக அமைகிறது .

எதிலும் மனத்திருப்தி அடையாத போது அது பல பரிணாம வளர்ச்சி அடைகிறது

உதாரணமாக

🍙குகை வீடு
⛺️குடிசை ஆனது

⛺️குடிசை ஓட்டு வீடு ஆனது

🏠ஓட்டு வீடு
மாடி வீடு ஆனது

🏯மாடி வீடு
🏢பல அடுக்கு மாடி குடியிருப்பு
ஆனது

இன்னும் மனிதனின் முயற்சிகள் எனும் 4 ம் பாவம்

அதிலிருந்து எண்ணி வரும்
8 ம் பாவமான
11 ம் பாவம் எனும்
மன திருப்தி அடையாத வரை
இன்னும் பல மாற்றங்கள்
பூமியில் நடை
பெற்றுக் கொண்டே இருக்கும்

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை நன்றிகளுடன் உங்கள் தோழி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!