27.4 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

அள்ள அள்ள குறையாத பண வரவிற்கு வெற்றிலை தீபம் எப்படி ஏற்ற வேண்டும்? யார் ஏற்ற வேண்டும்?

 

🌼மகாலட்சுமி பூஜை செய்யும் பொழுது வெற்றிலை தீபம் ஏற்றுவது மகத்தான பலன்களை கொடுக்கும். வெற்றிலையில் முப்பெரும் தேவியரும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அனைத்து சுபகாரியங்களுக்கும் பயன்படும் வெற்றிலை ஆன்மீகத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

🌼வெற்றிலையின் மேல் வைத்து ஏற்றப்படும் தீபம் ஆனது சிறப்பான பலன்களை கொடுக்க வல்லது.
வெற்றி தரும் வெற்றிலை தீபம் எப்படி ஏற்ற வேண்டும்? யார் ஏற்றினால் என்ன பலன்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

🌼பொதுவாக வெற்றிலை தீபம் ஏற்றும் பொழுது வெற்றிலையில் இருக்கும் காம்பை நீக்கி விட வேண்டும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. வெற்றிலையின் மேல் பகுதியில் அன்னை பார்வதி தேவியும், நடுப்பகுதியில் சரஸ்வதி தேவியும், நுனிப்பகுதியில் மகாலட்சுமியும் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. மங்கலப் பொருட்கள் ஆக இருக்கும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் வைத்து செய்யப்படும் பூஜைகள் தடையின்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை. எந்தவொரு காரியத்திலும் வெற்றி பெற விரும்புபவர்கள் வெற்றிலை தீபத்தை ஏற்றி வழிபடலாம்.(பக்தி Whatsapp Telegram 9442705560) வெற்றிலை எப்போதும் வெற்றியை மட்டுமே கொடுக்கும். தீராத கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்கள் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எந்த அளவிற்கு கடன்கள் இருந்தாலும் படிப்படியாக அவைகள் குறைந்து வந்துவிடும். வறுமை இன்றி உங்களுடைய அடுத்தடுத்த சந்ததியினரும் சிறப்புற்று வாழ வெள்ளிக்கிழமை தோறும் வெற்றிலை தீபம் ஏற்றுவது மகத்தான பலன்களை கொடுக்கும். பொதுவாக வெற்றிலை தீபத்தை குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள், திருமணமான பெண்கள் ஏற்றும் பொழுது சுபிட்சம் உண்டாகும். கன்னிப் பெண்கள் வெற்றிலை தீபம் ஏற்றும் பொழுது மனதில் இருக்கும் மணவாளனை மனம் முடியும் யோகம் உண்டாகும்.

🌼வீட்டிலேயே வெற்றிலை செடியை வளர்ப்பவர்கள் அதனை தனியாக வளர்க்கக் கூடாது. உடன் சேர்த்து ஏதாவது ஒரு செடியை வளர்த்தால் சந்ததி தழைக்கும் என்பார்கள். வெற்றிலையை ஒற்றைப்படை என்ற எண்ணிக்கையில் 3, 5, 7 ஆகிய எண்ணிக்கையில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துக் கொள்ளுங்கள். தீபம் ஏற்றப் பயன்படும் வெற்றிலை முழுமையாக பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். எனவே அதனை உறுதி செய்து கொள்ளுங்கள். வெற்றிலைகளை காம்புகளை நீக்கி தனியே வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையை சுத்தம் செய்து அதன் நுனிப்பகுதியில் சந்தனம் மற்றும் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். நுனிப்பகுதியில் வாசம் செய்யும் மகாலட்சுமி உங்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வத்தை வாரி வழங்க இருக்கிறார். ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் இந்த வெற்றிலைகளை வைத்துக் கொள்ளுங்கள். தீபம் ஏற்ற எவர்சில்வர் தட்டு பயன்படுத்தக் கூடாது. பித்தளை, செம்பு, வெள்ளி பாத்திரங்கள் உபயோகிக்கவும். எச்சில் படாத தாம்பூலத் தட்டில் இவற்றை வைத்து அதன் மீது ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள்.

🌼நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான வாசனை மிகுந்த மல்லி பூவை சுற்றிலும் வைத்து அலங்கரித்துக் கொண்டு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாழைத்தண்டு திரிபோட்டு வெற்றிலை தீபம் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். பஞ்சு திரி போட்டு வெற்றிலை தீபம் ஏற்றினால் வறுமை இன்றி அள்ள அள்ள குறையாத பணவரவு இருக்கும். தரித்திரம் நீங்க நீக்கிய காம்புகளை எண்ணெயில் போட்டு விடலாம். இதனை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் மாலை வேளையில் மகாலட்சுமிக்கு ஏற்றி வர அனைத்து நன்மைகளும் நடக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!