21.7 C
New York
Tuesday, July 23, 2024

Buy now

spot_img

2 பாவங்களின் காரகத்துவங்கள்..!

12 பாவங்களின் காரகத்துவங்கள்..!

சோதிடத்தில் 12 ராசி வீடுகள், இதனை 12 பாவங்கள் என்போம், ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இந்த 12 வீடுகளை சுற்றியே நகர்கிறது, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த 12 ராசி வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை பார்க்கலாம் வாங்க..!

1 ம் வீடு..!

ஜாதகத்தில் 1 ம் வீடு என்பது லக்ன பாவமாகும், 1 ம் வீடு புதிய துவக்கங்களை குறிக்கிறது, ஒருவர் தன் வாழ்க்கையை எவ்வாறு அணுகுகிறார் என்பதையும் அவரின் முந்தைய அனுபவங்கள் எத்தகைய பாதிப்புகளை அவருக்கு கொடுத்திருக்கிறது என்பதையும் 1 ம் வீட்டை கணித்து அறியலாம், அதே போல ஒருவர் உலகத்தை எவ்வாறு நோக்குகிறார் என்பதையும் லக்ன பாவமே கூறும்..!
ஜாதகத்தில் 1 ம் வீடு என்பது கடையில் இருக்கும் கண்ணாடியை போல, இங்கே மற்றவர் தன்னை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை ஜாதகர் தனக்கான பிம்பமாக உருவாக்குகிறார், உதாரணமாக நாம் அணியும் ஆடையை தேர்ந்தெடுப்பது, எவ்வாறு மற்றவருடன் உரையாடவேண்டும் என்று வரையறை செய்வது போன்ற விஷயங்களை அறிந்தும்/அறியாமலும் லக்ன பாவத்தின் நிலை பொருத்தே ஜாதகர் முடிவு செய்கிறார்..!
லக்னத்தில் நின்ற கிரகம் அந்த ஜாதகரின் மீது மிக வலுவான ஆளுமையை செலுத்தும் வல்லமை பெற்றது, ஜாதகத்தில் லக்னத்தில் கிரகம் அமைந்தவர் அங்கே நின்ற கிரகம் தன்னை ஆளுமை செய்கிறது என்பதை உணர்ந்தே செயல்படுவார்..!
சோதிடத்தில் லக்னம் உடல் வலு மற்றும் ஆரோகியத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டது, லக்ன பாவம் அதன் அதிபதியே ஒருவர் தன்னுடைய உடலை எவ்வாறு பேணி/பராமரிக்கிறார் என்பதை காட்டும், எவ்வாறு தன் உடலை பயன்படுத்துகிறார் என்பதையும் காண்பிக்கும்..!

2 ம் வீடு..!

ஜாதகத்தில் 2 ம் வீடு ஒருவரின் வருமானம், பொருளாதாரம், மற்றும் ஏனைய வருமானம் ஈட்டும் வழிகளை குறிக்கும், இந்த வீடு ஒருவர் பணத்தை நோக்கி எவ்வாறு செயல்படுகிறார், அந்த பணம் எவ்வாறான உணர்வுகளை கொடுக்கிறது என்பதை சுட்டிக்காட்டும், 2 ம் என்ன வேலை எவ்விதத்தில் பணம் ஈட்டுகிறார், அதனை எவ்விததில் செலவு செய்கிறார் என்பதை தெரிவிக்கும்..!
2 ம் வீட்டில் சேர்க்கும் செல்வம் உலகியல் பொருளாதாரத்தை மட்டும் அல்ல, மற்ற அனைத்து செல்வங்களையும் குறிக்கும், அதாவது குடும்பம், நட்பு போன்ற செல்வங்களை குறிக்கும், இந்த உலகத்தில் இருக்கும் பொருள் எல்லாம் மறைந்து விட்டால் என்ன செய்வீர்கள் எதை சம்பாதிப்பீர்கள்..!
நாம் எப்போதுமே பணத்தையே பெரும் செல்வமாக மதிப்பிடுகிறோம்/நினைக்கிறோம், இந்த கூற்றின் தன்மையை 2 ம் வீடு வெளிபடுத்தும், அதாவது 2 ம் வீடு நாம் பணத்தை பற்றி என்ன நினைக்கிறோம், எவ்வாறான முக்கியத்துவத்தை அதற்க்கு கொடுக்கிறோம், சுய மதிப்பீடு எதை வைத்து செய்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும்..!
2 ம் வீடு என்னுடையது எனும் பற்றையும் குறிக்கும், அதாவது எது என்னுடையது, எது எனக்கு சொந்தமானது, எதனை சொந்தமாக்க வேண்டும் என்பதை கணிக்க உதவும் வீடு, பாரம்பரியமாக கூறினால் ஒருவரின் வருமானம், பொருளாதாரம், மற்றும் வாழ்வில் ஒருவர் சேர்க்கும் அத்தனை பொருள் காரகங்களையும் குறிக்கும்..!

தொடரும், மீண்டும் சந்திப்போம்..!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!