13.8 C
New York
Wednesday, April 10, 2024

Buy now

spot_img

🐍ராகு யாருக்கு ராஜயோகம் தரும்

🐍ராகு யாருக்கு ராஜயோகம் தரும்:

ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது.
சனியைப் போல் ராகு என்று கூறுவார்கள்.

ஏன் என்றால்

சனிக்கு தசா காலம் 19ஆண்டுகள் ராகுவிற்கு தசாகாலம்18ஆண்டுகள்

சனி இருட்டு கிரகம்
ராகுவும் நிழல் கிரகம்

சனி ஆயுள்காரன்
ராகு கூட்டு மரணத்திற்கு உரியவன்

சிறிய திருட்டுக்கு சனி
பெரிய திருட்டுக்கு ராகு

இதே போன்று சனியின் பெரும்பாலான காரகங்கள் ராகு கொண்டு இருப்பதால் சனியைப் போல் ராகு என்கிறோம்.

🐍ராகு எப்படி பலன் தரும்

ராகுவிற்கு சொந்த வீடு இல்லாததால்

🔔ராகு எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டின் பலனை செய்யும் (11வீட்டில் இருந்தால் 11ஆம் வீட்டிற்குரிய லாப பலனை வழங்கும்).

🔔ராகு தன்னுடைய இணைந்த கிரகத்தின் பலனை செய்யும்(லக்ன யோகருடன் ராகு இணைந்து இருந்தால் யோகப் பலன்)

🔔 ராகு தன்னை பார்த்த கிரகத்தின் பலனை கவர்ந்து பலனை வெளிபடுத்தும். ( குரு,லக்ன சுபர்கள் கெடாமல் ராகுவை பார்வை செய்வது நன்று).

🔔 ராகு தான் இருக்கும் வீட்டில் இருந்து 4,7,10இடங்களில் இருக்கும் கிரகத்தின் பலனை செய்யும்.( மேற்படி இடத்தில் லக்ன சுபர்,இயற்கை சுபர் இருந்தால் நன்மை)

🔔 ராகு எந்த சாரத்தில் உள்ளாரோ(நட்சத்திர பாதம்)அவரின் பலனை செய்யும்.

( ராகு தன்னுடைய சுயசாரத்தில் இருந்தால் சனி என்று எடுத்து கொள்ள வேண்டும்.)

( ராகு அமர்ந்த நட்சத்திர பாதம் லக்ன சுபராகவோ,இயற்கை சுபராகவோ இருந்தால் நன்மை)

இப்படி ராகுவுடன் சம்மந்தபடுகிற அனைத்து கிரகங்களின் கூட்டு கலவையாக ராகு தசா இருக்கும்.

🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

🌷ராகு எந்த இடத்தில் எப்படி இருக்க வேண்டும்:

சனிக்கு யோகம் செய்யும் ராசிகளான

மகரம்,கும்பம்,ரிஷபம்,துலாம், மிதுனம்
கன்னியை லக்னமாக
கொண்டவர்களுக்கு ராகு நல்ல பலன் வழங்குவார்.

இந்த லக்னங்கள் உங்களுடைய லக்னமாக இல்லாவிட்டால்

உங்கள் லக்ன சுபர் இல்லத்தில் ராகு அமர்ந்தும்

ராகு அமர்ந்த. அந்த இடம் மேஷம் ரிஷபம்,கடகம்,கன்னி,
மகர ராசியாக இருந்தும்

அந்த இடம் உங்கள் லக்னத்திற்கு 3,6,11 ஆம் இடமாக இருக்க வேண்டும்.

🌹 ராகுவுக்கு இடம் கொடுத்த கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று வலுவாக இருக்க வேண்டும்.

🌹சுபரான குருவின் பார்வை ராகுவின் மீது பட வேண்டும்.

(குரு கெடாமல் ராகுவை பார்வை செய்ய வேண்டும். )

🌹 அசுபர்களான செவ்வாய்,சனி பார்வை ராகுவுக்கு இருக்க கூடாது.

🌹அதுபோல் ராகுவுக்கு இடம் கொடுத்த கிரகம்

நீசம் பெறுதல்,
பாவருடன் இணைதல்,
பாதக ஸ்தானத்தில் அமர்தல்,
லக்னத்திற்கு 6,8,12ல் மறைதல்,
வக்ரம் பெறுதல்
போன்ற பலம் இழந்த நிலை பெறக்கூடாது.

🎁 லக்னத்துக்கு 3,11ஆம் இடத்தில் அமர்ந்த ராகு யோகம் தரும்.

6 ஆம் வீடு சுபர் வீடாக அமைந்து
அதில் அமர்ந்த ராகு பகை,கடனை,நோயயை உருவாக்கும்.

6 ஆம் வீடு சனி, செவ்வாய் போன்ற பாவரின் வீடாக அமைந்து அதில் ராகு இருந்தால்

பாவகிரகங்கள் இருக்கும் வீட்டை கெடுக்கும் என்பதன் அடிப்படையில் ஆறாம் இடத்து கெடு பலனான கடன்,பகை,நோயை அழித்து சுப பலனை ராகு வழங்குவார்.

6 ல் ராகு அமர்ந்து ராகு தசா நடை பெறும் ஒருவருக்கு

அவரின் ராகு தசா காலம் முடியும் வரை அவரை அவரின் எதிராளி வெல்ல முடியாது.

☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎☎

🐍ராகுவின் காரகத்துவங்கள்:

👉வெளிநாடு அல்லது வெளியூர்

👉சட்ட விரோத செயல்

👉போதை

👉பிரமாண்டம்

👉அமானுஷ்யம்

👉மலட்டு தன்மை

👉சிறை

👉தந்தை வழி பாட்டன்

👉குரூர எண்ணம்

👉விதவை

👉அன்னிய மொழி

👉உபாசனை

📡📡📡📡📡📡📡📡📡📡📡📡📡📡📡

💢ராகு தரும் யோகம்

ஒளிக்கோளான சூரியனையே செயல்பட விடாமல் செய்யும் வல்லமை கொண்ட ராகு

18 ஆண்டுகள் தன் தசாவை சனியைப் போல் உங்கள் முன் ஜன்ம கர்ம வினைக்கு ஏற்ப

🌷 ராகு நல்ல அமைப்பில் இருந்தால்

நினைத்து பார்க்க முடியாத அளவு அதாவது பணத்தை மெஷின் கொண்டு எண்ண நேரம் இல்லாமல்

எடை வைத்து பார்த்து எவ்வளவு பணம் உள்ளது என்று அறியும் வண்ணம் மிக அதிக அளவு பணத்தை

எப்படி வந்த பணம் என்று சொல்ல முடியாத வகையில் திடீர் கோடீஸ்வரராகவும் ஊர் அறிந்த பிரபலமாக ராகு தன் திசையில் உருவாக்குவார்.

🌷 ராகு சம அமைப்பில் இருந்தால்

ராகு தசாவில் பங்கு கொள்ளும் கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப நன்மையும்,தீமையும் கலந்த பலனை ராகு வழங்குவார்.

🌷ராகு தீமையான கிரககூட்டணி
மற்றும் லக்ன பாதக ஸ்தானத்தில் இருந்தால்

கோபுரத்தில் இருப்பவரை மிக மிக அடிமட்டத்திற்கு அதாவது சாமானியராக மாற்றி விடும் வல்லமை ராகுவிற்கு உண்டு.

✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு
பிறக்கும் போதே ராகு தசா நடை பெறும்.

ரோகிணி,அஸ்தம்,திருவோணம்,
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்ட நட்சத்திர காரர்களுக்கு படிக்கும் காலத்தில்( வாலிப காலத்தில்) ராகு தசா வரும்.

ராகு நல்ல நிலையில் இல்லை என்றால் படிப்பில் தடை,காதல்,போதை பழக்கம் போன்ற நிகழ்வை உண்டு செய்வார்.

நல்ல நிலையில் ராகு இருந்தால் வெளியூர் அல்லது வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பை வழங்கும்.

.
📺📺📺📺📺📺📺📺📺📺📺📺📺📺📺

திருமண பெருத்தம் பார்க்கும் போது மணமக்களுக்கு சமராகு தசா நடைபெறக் கூடாது.

திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது

லக்னத்திற்கு 2 அல்லது 7 ல் ராகு இருந்து
ராகு தசா நடை பெற்றால் மனைவி பிரிவு குடும்பத்தில் கலகம் நிம்மதி இன்மை நடைபெறும் என்பதால் தகுந்த தோஷ சமான்யம் உள்ள ஜாதகத்தை இணைத்து திருமணம் செய்ய வேண்டும்.

📷📷📷📷📷📷📷📷📷📷📷📷📷📷📷

🔱ராகு நல்ல நிலையில் இல்லாமல் ராகு தசா நடக்கும் போது கோச்சாரத்தில் ஏழரை சனி நடை பெற கூடாது. அப்படி நடைபெற்றால் மிக கடுமையான பலன் நடைபெறும்.

🔱 ராகு நல்ல முறையில் இருந்து ராகு தசா நடைபெற்று கோச்சாரத்தில் 71/2 சனி நடைபெற்றால் வேகத்தடைப் போல் நல்ல பலனை தடுத்து வருமானம் மற்றும் புகழை கெடுக்கும்.

🔱ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு ராகு தசா ஒரே நோரத்தில் நடை பெறக் கூடாது.

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ராகு தசாவால் பாதிக்கப்பட்டோர்

☀ சித்தர் வழிபாடு.

☀காளி அல்லது துர்கை வழிபாடு.

☀காளகஸ்தி , திருப்பாம்புரம் ஆகிய கோவிலில் வழிபாடு செய்தல் நன்று.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!