26.2 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

ஷட் பலம் ஒரு தெளிவு..

ஷட் பலம் ஒரு தெளிவு..!
ஒரு கிரகம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை கணிக்க முன்னோர்களால் கண்டறிந்ததே ஷட் பலம் கணிதம், ஷட் பலம் என்பது 6 வகை பலத்தை ஒன்றாக கூட்டி வரும் மதிப்பீடு, அது என்ன 6 வகை பலம், ஷட் பலத்தின் குறைந்த பட்ச/அதிக பட்ச ரூப பலம் என்ன?, அதிக ரூப பலம் பெற்றால் அந்த கிரகம் எவ்வாறு வேலை செய்யும் பார்க்கலாம்..!
ஷட் பலம் என்பது 6 வகை பலத்தை ஒன்றாக கூட்டி வரும் மதிப்பீடு என்றேன் அல்லவா அவை: ஸ்தான பலம், திக் பலம், கால பலம், சேஷ்ட பலம், நைசார்கிக பலம், த்ருக் பலம், இவைகள் ஒரு கணித முறை இதனை வைத்தே ஷட் பலத்தை கணிக்கிறார்கள்..!
ஷட் பலத்தில் 7 கிரகங்களை மட்டுமே கணிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, ஏனெனில் ராகு/கேதுவுக்கு சொந்த வீடில்லை, 7 கிரகங்களின் பூரண பலம் மற்றும் குறைந்த பட்ச பலத்தை கீழே கொடுக்கிறேன், இவை ஜாதக பாரிஜாதம் எனும் மூல நூலில் கூறப்பட்டது..!
சூரியன், குரு: 6 1/2 ரூபம் பூரணபலம், குறைந்தபட்சம் 5 1/2 ரூபம் இருக்க வேண்டும்..!
சுக்கிரன்: 5 1/2 ரூபம் பூரண பலம் குறைந்த பட்சம் 5 ரூபம் இருக்க வேண்டும்..!
புதன்: 7 ரூபம் பூரண பலம், குறைந்த பட்சம் 5 1/2 ரூபம் இருக்க வேண்டும்..!
சந்திரன்: 6 ரூபம் பூரண பலம், குறைந்த பட்சம் 5 ரூபம் இருக்க வேண்டும்..!
சனி, செவ்வாய்: 5 ரூபம் பூரண பலம் குறைந்த பட்சம் 4 ரூபம் இருக்க வேண்டும்..!
இப்போது மேலே கொடுத்தவை குறைந்தபட்சம் மற்றும் முழுமையான பூரண பலம் ஆகும், குறைந்த பட்ச ரூபத்துக்கு கீழே இருந்தால் அந்த கிரகம் வலுவிழந்ததாகிறது, பூரண பலத்திற்கு மேல் 1 ரூபம் வரை அந்த கிரகம் முழு வலுவுடன் இருக்கும், அதற்கு மேல் அந்த கிரகம் வலுவிழந்து அல்லது செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் போகும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல, இதில் லக்ன/ராசிக்கு அசுபர் பூரண பலத்தை விட அதிக வலுப்பெற்றால் ஜாதகருக்கு வாழ்வில் அந்த கிரக ஆதிபதியம்/காரகம் இவைகளால் எதிர்பாராத நேரங்களில் பிரச்சனை/சிக்கல் எழும், இதுவே சுபர் பூரண வலுவை விட அதிக வலு பெற்றால் ஜாதகருக்கு காலம் கடந்து அந்த கிரகத்தின் ஆதிபதியம்/காரகம் சார்ந்த நன்மைகள் கிடைக்கும், ஷட் வலுவில் பூரண வலுவிற்கு நெருக்கத்தில் நின்ற கிரகமே உண்மையில் பூரண வலுப்பெற்ற கிரகமாகும், மீண்டும் சந்திப்போம்..!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!