ரோகிணி நட்சத்திரத்தை பற்றிய பொதுவான பலன்
1. கிருஷ்ண பரமாத்மா பிறந்த நட்சத்திரம், தேவதை பிரம்மதேவர்.
2. ரோகிணி நட்சத்திர நாள் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது.
3. நல்ல காரியங்களுக்கு மற்றும் திருமணத்திற்கு சிறந்த உயர்ந்த நாளாகும்.
4. சிறந்ததொரு ஆத்ம ஞான நட்சத்திரம்,பிறப்பு வளர்ப்பு மரணம் இந்த மூன்று ரகசியங்களைப் பற்றி, அதிகமான சிந்தனை இருக்கும், மற்றும் தெய்வபக்தி, விரதங்கள், தவறாமல் கடைபிடிப்பவர்கள்.
5. சிறந்ததொரு புத்திமான். அனைவராலும் பாராட்டப்பட்டு போற்றப்படுபவளாக இருப்பார்.
6. எதையும் தனித்து இருந்து செயல்படக்கூடிய குணமுடையவர்கள் கூட்டு ஆகாது.
7. ரோகிணி நட்சத்திர பெண்கள் சிறந்ததொரு குடும்பத்தலைவியாக இருப்பார்கள்.
8. குடும்பத்தில் ரோகினி பெண்கள் நினைத்ததை எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் செயல்படுத்துவார்.
9.ரோகினி பெண்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவும் அரவணைப்பும் இருக்கும்.
10.ரோகிணி பெண்களை நம்பி ஒரு பொறுப்பை கொடுத்தால் மிகவும் திறம்பட செய்து முடிப்பார், ஆனால் வேற யாராவது தலையிட்டால், இவர்கள் பின்வாங்கி விடுவார்கள்.
11.இவர்கள் தவறை மிக எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் அதற்கு சிறப்பான ஒரு விளக்கத்தை கொடுப்பார்.
12. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்ததொரு குடும்பத்தலைவி, தலைவன்,சிறப்புமிக்க ஒரு மனைவி, கணவன், சிறந்ததொரு சகோதரி, சகோதரன்,
பொறுப்புள்ள தாய், தந்தை,
வஞ்சனையில்லாமல் பாசம் காட்டும் சிறந்த அன்புள்ளம் படைத்தவர்கள்.
13. மனவலிமை அதிகம் உடையவர்கள், சிலபேர் மனம் போகும் போக்கில் போகிறவர்கள்.
14. நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு நாள் முன்னாடி, திட்டமிட்டு விடுவார்கள்.
15. தரமுள்ள உணவைத் தயாரிப்பார், விருந்தோம்பலில் இவர்களை மிஞ்ச முடியாது.
16. இவர்களிடம் பழகுபவர்கள் மற்றும் உறவினர்களும் அல்லது நண்பர்களும் இவர்களைப் பார்க்க வரும் பொழுது, அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறிய பரிசு கொடுக்கும் வழக்கம் இவர்களுக்கு உண்டு.
17. பால் நெய் மோர், பாலினால் செய்த இனிப்பு, மற்றும் நீர் வகையான காய்கறிகள், விரும்பி சாப்பிடுவார்கள்.
18. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள், பேசும்பொழுது இனிமையாகப் பேசுவார்கள்,சற்று பிடித்துவிட்டால் உரிமையுடன் கண்டிப்பார்கள்.
19. நல்ல வாய்விட்டுச் சிரிப்பார், கையைப் பிடித்துக் கொண்டே பேசுவார், சிறந்த சமையல் குறிப்புகளை கொடுப்பார், அலுவலகத்தில் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாக கவனித்து பின்பு தன்னுடைய ஆலோசனையை ஆணித்தரமாக கூறுவார்.
20. ரோகிணி நட்சத்திர ஆண்களிடம் ஒரு சில பெண் குணங்கள் இருக்கும், குறிப்பாக கையில் மருதாணி போட்டுக் கொள்வார், ஒரு சிலருக்கு சிரிப்பும் நடையும் பெண்களைப் போலவே இருக்கும்.
21. குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், காதல் பிரச்சனைகள், கணவன்-மனைவி அந்தரங்க பிரச்சனைகள்,
கள்ளக்காதல் பிரச்சனை, இவை அனைத்துக்கும் சிறந்த ஆலோசனை கொடுப்பார்.
22. கலை ஆர்வம், கற்பனைத்திறன், இயல் இசை நாடகம், எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்.
23. நேர்த்தியான ஆடை அணிவார், ஆடைகளில் சற்று தனி கவனம் செலுத்துவார்.
24. இந்த நட்சத்திரக்காரர்கள் பிறந்தவுடன் தகப்பனார் வீடு கட்டுவார், எப்பொழுதும் தகப்பனார் ஆதரவு உண்டு.
25.எதை வெளிப்படையாக பேச நமோ அதை வெளிப்படையாக பேசுவார்கள், எதை யாரிடம் சொல்ல நமோ அதை மட்டும் சொல்வார்கள்.
26. வைராக்கியம் குணம் அதிகம் சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவார்.
27. இவர்கள் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும், ஏதாவது ஒரு ஸ்லோகம் பாட்டு முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்.
28. பாசம் உள்ளவர்கள், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் உண்டு, இவர்களை ஆளுமை செய்வது இவர்களுக்கு பிடிக்காது.
29. இந்த நட்சத்திரத்தில் உதித்த பெண்கள் குணம் காக்கும் குலம் காக்கும் பெண் வர்க்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார், மிகவும் செல்லப்பிள்ளையாக வளர்க்க படுவார்கள்.
30. ரோகிணி நட்சத்திர பெண்கள் சற்று பெருத்த தேகம் உடையவர்கள், ஆனால் அழகாக இருப்பார்கள்.
31. இந்த நட்சத்திரத்தில் ருதுவான பெண்கள், கஜானாவை நிரப்பி வழியும் அளவிற்கு பணம் உள்ளவராகவும், செல்வ செழிப்புடன், எந்த ஒரு குறைவில்லாமல், சிறப்புமிகு கணவனை திருமணம் செய்து கொள்வாள்.
32. அதிகமான அன்பும் பாசமும் வைப்பதாலும்,அதனால் இவர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படும்.
33. இவர்கள் எதிர்பார்த்து சில விஷயங்கள் ஏமாற்றம் அடைந்தாள், மனம் உடைந்து போய் விடுவார்கள், சற்று மன நிலையும் பாதிப்படையும்.
34.இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப் படுபவர்களாக இருப்பார்கள், சினிமா படங்கள் சோக காட்சி வரும்பொழுது, இவர்களை அறியாமல் கண்ணில் தண்ணி வந்து விடும்.
35.இந்த நட்சத்திரக்காரர்கள் தாத்தா பாட்டி வீட்டில் தான் அதிகமாக வளர்வார்கள் சிறுவயதில்.
36. ஆணுக்குப்பெண் நண்பர்களும் பெண்ணுக்கு ஆண் நண்பர்களும் சற்று அதிகம். சற்று ஈர்ப்பு அதிகம்.
37. நேர்மையானவர்கள், அமைதியானவர்கள், தூது செல்வார்கள், பசுமாட்டை தெய்வமாக வணங்குவார்கள், பொறுப்புள்ளவர்கள், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கிற வார்த்தையில் நம்பிக்கை.
🙏🌹🙏🙏🌹🙏🌹
ராமசுப்பிரமணியம் ஈரோடு
ஜோதிட மாணவன்.
🙏🌹🙏🙏🌹🙏🙏🙏🙏
(மேலே சொல்லப்பட்ட அனைத்து பலன்களும் பொதுவானவை).
🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🙏