24.7 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

* ராகு அல்லது கேது தசை நடப்பவர்கள் வழிபட வேண்டிய தெய்வமும்! செய்ய வேண்டிய பரிகாரமும்*

* ராகு அல்லது கேது தசை நடப்பவர்கள் வழிபட வேண்டிய தெய்வமும்! செய்ய வேண்டிய பரிகாரமும்*

✡️ஒரு மனிதன் பிறந்த நேரத்தில் இருந்து அவன் இறுதி காலம் வரை ஜோதிடத்தைப் பொறுத்தவரை 120 வருடங்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் பிறந்த நேரத்தில் நடக்கும் தசை என்ன? என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து சுழற்சியாக 120 வருடங்கள் வரை ஒவ்வொரு தசையாக வந்து செல்லும். ஒவ்வொரு தசை தொடங்கும் பொழுதும் அந்தக் கிரகங்கள் ஆட்சி செலுத்தி கொண்டிருக்கும் பொழுது மீதமுள்ள 8 கிரகங்களும் அந்த தசை முடிவதற்குள் குறிப்பிட்ட காலம் வரை ஆட்சி செலுத்தி விட்டு செல்லும். இதைத்தான் புத்தி என்பார்கள். அவ்வகையில் ராகு தசை, கேது தசை நடப்பவர்கள் பூர்வ, புண்ணிய அடிப்படையில் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களும், வழிபட வேண்டிய தெய்வங்களும் என்ன? என்பதைத்தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.

ஒவ்வொரு தசைகள் நடைபெறும் காலங்கள் எவ்வளவு?

கேது – 7 வருடங்கள்
சுக்கிரன் – 20 வருடங்கள்
சூரியன் – 6 வருடங்கள்
சந்திரன் – 10 வருடங்கள்
செவ்வாய் – 7 வருடங்கள்
ராகு – 18 வருடங்கள்
குரு – 16 வருடங்கள்
சனி – 19 வருடங்கள்
புதன் – 17 வருடங்கள்

✡️ராகு தசை நடப்பவர்களுக்கு:
உங்களுடைய ஜாதகத்தின் படி நீங்கள் ராகு தசையில் இருந்தால் உங்களுக்கு நீங்கள் செய்த பாவ, புண்ணிய அடிப்படையில் நல்லது, தீயது என்று மாறி மாறி நடந்து கொண்டிருக்கும். ராகு தசை நடப்பவர்கள் நாகராஜர் மற்றும் துர்கை அம்மனை வழிபட வேண்டும். துர்கை அம்மனுக்கும், நாகராஜர் சிலைக்கும் நீல வர்ண வஸ்திரத்தை சாற்றி வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். நீங்கள் இவ்வாறு செய்வதால் உங்களுக்கு புண்ணியத்தின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கின்ற நல்லவைகள் அதிகமாகவும், பாவத்தின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கின்ற தீயவைகள் குறைவாகவும் மாறும்.

✡️ராகு திசை நடப்பவர்கள் கோமேதகம் அணியலாம். சனிக்கிழமையில் பாலும், மஞ்சள் பொடியும் கலந்து கொண்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம். பால் பாயசம் நிவேதனம் வைக்கலாம். அர்ச்சனை செய்ய மந்தாரை மலரை பயன்படுத்த வேண்டும். சனிக்கிழமைகளில் தோலுடன் இழுக்கும் உளுத்தம் பருப்பை தானம் செய்ய வருமானம் பெருகும். பூனைகளுக்கு உணவளித்து வாருங்கள் செல்வ செழிப்பு உண்டாகும். தடைபட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் உடனே நிறைவேறும்.

✡️கேது தசை நடப்பவர்களுக்கு:
உங்கள் ஜாதகத்தின் படி நீங்கள் இருக்கும் தசை கேதுவாக இருந்தால் விநாயகர், சாமுண்டி, நாகராஜர் ஆகிய தெய்வங்களை கட்டாயம் வழிபட வேண்டும். நாகர் சிலைக்கும், சாமுண்டி தேவி சன்னிதியிலும் சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி செவ்வாய்க் கிழமையில் சிவப்பு நிற மலர்களால் குறிப்பாக செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய நடக்க இருக்கும் நல்லவைகள் அதிகரிக்கும், தீயவைகள் குறையும் என்பது ஐதீகம். விநாயகர் சிலைக்கு அருகம்புல் மாலை சாற்றி, பாலபிஷேகம் செய்து வர நல்லது நடக்கும்.

✡️கேது தசை நடப்பவர்கள் செவ்வாய்க் கிழமையில் பரிகாரங்கள் செய்வது நல்லது. நீங்கள் வைடூரியம் அணிந்து கொண்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும். கேது தசை நடப்பவர்கள் நாய்களுக்கு உணவளிக்க நன்மைகள் உண்டாகும். மேலும் கொள்ளு தானம் செய்து வந்தால் அற்புதமான யோகங்கள் உண்டாகும். சிவப்புநிற வஸ்திரத்தை இயலாதவர்களுக்கு தானமாக வழங்குவதன் மூலம் கேதுவினால் ஏற்பட இருக்கும் தீமைகள் குறையும்.

✡️ஒளிர்விடும் சூரியனையும், ஒளிபொருந்திய சந்திரனையும் மறைக்கும் ஆற்றல் நிழல் கிரகங்களான ராகு, கேதுவிற்கு உண்டு. ராகுவை போல கொடுப்பாரும் இல்லை, கேதுவை போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். ராகு தசை நடப்பவர்களுக்கு புண்ணியத்தின் அடிப்படையில் திடீர் ராஜ யோகம் உண்டாகும். கேது தசை நடப்பவர்களுக்கு பாவத்தின் அடிப்படையில் தீராத கஷ்டங்களும் உண்டாகும். இவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மேற்கூறிய பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!