20.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

முக்தி மற்றும் மோக்ஷத்தில் கேதுவின் பங்கு

முக்தி மற்றும் மோக்ஷத்தில் கேதுவின் பங்கு
ஜோதிட நூல்களில் – கேதுவிற்கே மோக்ஷம் அளிக்கும் தன்மை என்றும் இவர் ஒரு சந்நியாசி கிரகம் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

மோக்ஷம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். ஒரு நெருக்கடியில் இருந்து விடுபடுவதே மோக்ஷம் , இது ஒரு சிந்தனையாக இருக்கலாம் , வாழ்வியல் சூழ்நிலையாகஉம் இருக்கலாம்.

ஆனால் நிறைய பேர் புரிந்து வைத்து உள்ள மோக்ஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன வென்றால் – இதற்கு பிறகு பிறவி இல்லை – உண்மை தான் மறுப்பதற்கு இல்லை , ஆனால் ஏன் பிறவி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது ?

3/7/11 – காம த்ரிகோணத்தின் மூலம் முதலில் ஒரு எண்ணம் / ஆசை தோன்றுகிரது – அதை அடைய உழைப்பை தூண்டுகிறது – 2/6/10 , அடைந்ததை அனுபவிப்பது ஜாதகர் – 1/5/9 , அடைந்துவிட்டோம் என்ற திருப்தி 4/812 – மோக்ஷ திரிகோணமாக செயல் படுகிறது. எண்ணம் தோன்றியதில் இருந்து அதை அடையும் வரை ஏற்பட்ட நெருக்கடி – இருந்து விடுபட்ட தன்மை – இதுவே மோக்ஷம் – இது பிறவி பெருங்கடல் எண்ணம் மிக பெரிய cycle ஆகவும் இருக்கலாம் , அல்லது அன்றாடம் தோன்றுகின்ற சிறு சிறு விருப்பமாக கூட இருக்கலாம்

நன்றாக வாழ்க்கையை கவனித்தீர்கல் என்றால் – ஒரு ஆசையில் இருந்து இனொரு ஆசைக்கு தாவுவதாகவே இருக்கும் – என்னுடைய சிறு வயதில் ஒரு பொம்மை மீது ஆசை இருந்தது – அதே பொம்மையை இப்பொழுது காட்டினாள் ஆசை வருவது இல்லையே – ஏன் ? அந்த ஆசை / எண்ணத்தில் இருந்து நான் விடு பட்டு – விட்டேன் அதை சார்ந்த ஞாபகம் மட்டுமே என்னுள் இருக்கும் – இதுவும் மோக்ஷம் தான்.

ஒவொரு ஆசையின் மூலம் சந்தோஷமும் வரும் தூக்கமும் வரும் – Basically – துன்பம் இன்பம் இரண்டுக்கும் காரணமே ஆசை தான். இதை போல் பல்வேறு ஆசை / என்ன தூண்டுதல் நமக்குள் உண்டு – இவை அனைத்தும் இன்பம் துன்பம் என்று இரு நிலைகளை – Define செய்து வைக்கிறது நம் மனதுள் – இதன் ஊடே நாம் பயணிப்பதே வாழ்க்கை என்ற புரிதலில் இருக்கிறோம் – இதையெ நாம் அனுபவம் என்று சொல்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட ஆசை / எண்ண தூண்டுதல் காரணமாக – கிடைக்கும் அனுபவமானது – நமக்கு அதன் மூலம் கிடைக்க வேண்டிய விஷயங்கள் கிடைக்காதவரை – அனுபவம் பெருகி கொண்டே போகும் – இந்த அனுபவம் முற்று பெரும் இடமே – மோக்ஷம் – இது ஒரு தனிப்பட்ட விஷேஷ நிலை அல்ல – இது ஒரு புரிதல் சார்ந்த அனுபவம் .

சரி கேதுவிற்கும் மோக்ஷத்திற்கும் என்ன சம்பந்தம்-

ஆசையின் தூண்டுதலால் – இன்பம் துன்பம் என்ற இரு நிலைகளில் மேலும் கீழும் அலை கழிப்பதினால் ஏற்படும் அனுபவம் – நிலையற்ற தன்மை தான் – நிலையான விஷயம் என்பதை ஒருவரை புரிய வைப்பதே கேது – அதனால் பற்றற்ற நிலை உண்டாகிறது – ஒரு ஆசை / ஒரு விஷயத்தில் (என்ன குவியலில்) இருந்து விடு படும் பொழுது – அந்த அனுபவம் நமக்கு அறிவாக மாறுகிறது – அதனால் தான் அவர் ஞானகாரகன்.

இப்படி விடுவிப்பு தன்மையை தனது இயற்கை குணமாக கேது கொண்டு இருப்பதால் அவர் மோக்ஷகாரகன் , ஒரு என்ன குவியலில் இருந்து – விடுபடும் பொழுது – அது நமக்கு அனுபவ அறிவாக மாறுவதால் – அவர் ஞானகாரகன்.

12ஆம் பாவத்தில் கேது இருக்க பிறந்தவர் அனைவரும் – பிறவி முக்தர்களா கண்டிப்பாக இல்லை ,
கேது என்றாலே வெறுப்பும் / வெறுமையும் தானா – அதுவும் இல்லை.

கேது அந்த ஜாதகத்தில் என்ன நிலைபாட்டை எடுத்து உள்ளாரோ அதை சார்ந்த அனுபவ அறிவு மிகுதியாக கொடுப்பார் .சில விஷயங்களில் இருந்து விடுவிக்கவும் செய்யவார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!