12.9 C
New York
Friday, March 17, 2023

Buy now

spot_img

பூரட்டாதி நட்சத்திரத்தின் பொது பலன்

பூரட்டாதி நட்சத்திரத்தின் பொது பலன்

பூரட்டாதி பிறவியை பொன் பிறவி என்பார்கள் இது ஜோதிட பழமொழி.

2. சிறந்த அறிவையும் சிறப்புமிகு திறமையும் உடையவர்கள்.

3. அறிவுரை கேட்பதைவிட அறிவுரை கூறுவது தான் இவர்களுக்கு விருப்பம்.

4. இவர்கள் மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை கணிக்க முடியாது யூகிக்கவும் முடியாது.

5. பூரட்டாதி நட்சத்திர ஆண்கள் பெண்களால் ஈர்க்கபடுவார் அதேபோல் பூரட்டாதி நட்சத்திர பெண்களை ஆண்களால் ஈர்க்கத் படுவார்.

6. அறிவை வளர்த்துக் கொள், நிறைய புத்தகம் படிப்பார்.

7. சேமிப்பதில் அதிக சிந்தனை உண்டு.

8. பாத்திரம் அறிந்து பிச்சை இடுவார் அதுவும் மிகவும் யோசித்து செய்வார்.

9. இவர்கள் இடத்திலிருந்து ஒரு விஷயத்தை வாங்குவது மிகவும் கடினம், அவர்களால் விருப்பப்பட்டு சொன்னால்தான் உண்டு.

10. எடுத்த காரியத்தை திறம்பட முடிப்பதில் வல்லவர்.

11. இவர்களுக்கு டென்ஷன் ஆகாது. பதட்டப்பட ஆரம்பித்துவிடுவார்.

12. ஆடம்பர செலவு, செய்ய மாட்டார்கள்.

13. இவர்களிடம் எல்லா செயல்களுக்கும் திட்டம் இருக்கும்.

14. எதிலும் எச்சரிக்கையாக இருப்பார் ,ரிஸ்க் எடுக்க மாட்டார்.

15. இவர்களால் தந்தை வழி சொத்தை அனுபவிக்க முடியாது.

16. சில நேரங்களில் இவர்கள் சொல் வேறு செயல் வேறாக இருக்கும்.

17. பெண்களால், இவர்களுக்கு அமையும் மனைவியால், சிறந்த பாக்கியத்தை அடைவார்கள்.

18. திடமான சரீரம் உண்டு, ஆனால் சற்று சோம்பேறித்தனமும் உண்டு.

19. இவர்கள் பெயர் என்றும் கெடாமல் பார்த்துக் கொள்வார்.

20. இவர்கள் தவறை சற்று ஏற்க மறுப்பர், அதற்கு நிறைய விளக்கம் கொடுப்பார்.

21. படிக்கும் காலத்தில் கண்ணாடி அணிவார்.

22. சனி தசை காலங்களில் உத்தியோகத்தில் படிப்படியாக முன்னேறி குறுகிய காலத்தில் உயர்ந்த நிலையை அடைவார்.

23. சில நேரங்களில் இவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல், நல்ல வாய்ப்புகளையும் இழப்பார்.

24. இவர்களுக்கு தனம் நிரந்தரமாக வரும், உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கும்.

25. கத்தி பேசமாட்டார், ஆனால் அமைதியாக இருந்து காரியத்தை சாதிப்பான்.

26. இவர்கள் ஏதாவது ஒன்றை முயற்சித்துக் கொண்டே இருப்பார், அதற்கு இவர்கள் மனைவி உறுதுணையாக இருப்பார்.

27. இவர்களிடம் சேமிப்பு குணம் அதிகமாக இருப்பதால்,வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்காமல் இருப்பாள்.

28. மனைவி மீதும் குழந்தையின் மீதும் அதிக பாசம் உடையவர், குழந்தைகள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவார்.

29. இவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் சேமிப்பு இலாப நோக்கு அதிகமிருக்கும்.

30. ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும் தெய்வ நம்பிக்கை இருக்கும்,இவர்கள் இருக்கும் வீட்டு அருகில் ஏதாவது கோயில் அல்லது பள்ளிக்கூடம் இருக்கும்.

31. தாயிடம் அன்பும் பாசமும் அதிகம் தந்தையிடம் இருந்து விலகி இருப்பார்.

32. இவர்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் குறைவு, ஏனென்றால் சிக்கனத்தை கையாளுவதால், வீண் செலவு செய்யமாட்டார்.

33. இவர்களுக்கு ஆராய்ச்சி குணம் அதிகம் இருக்கும்.

34.தான் பட்ட கஷ்டங்கள் தன் மனைவி தன் குடும்பம் அனுபவிக்கக் கூடாது என்கிற சிந்தனை எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.

35. சற்று சுயநலம் உண்டு, சுய கௌரவம், விட்டுக்கொடுக்க மாட்டார்.

36. இவர்கள் ஒவ்வொரு நிலையிலும் போராடித்தான் முன்னேறுவார்கள், சற்று அதிர்ஷ்டம் குறைவு.

🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
ராமசுப்பிரமணியம், ஈரோடு
ஜோதிட மாணவன்.
🙏🌹🙏🌹🙏🌹🌹
(மேலே சொல்லப்பட்ட அனைத்து பலன்களும் பொதுவானவை)
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,744FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!