13.8 C
New York
Wednesday, April 10, 2024

Buy now

spot_img

புனர்பூசம் நட்சத்திரம் பற்றிய பொதுவான பலன்கள்

புனர்பூசம் நட்சத்திரம் பற்றிய பொதுவான பலன்கள்

1. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இந்த நட்சத்திரத்தில் அவதரித்தார்.

2. சத்வ, ரஜ, தமோ, என்ற முக்குணங்களின் முதன்மையான குணம் சத்வ குணத்தை உடையவர்களாக இருப்பார் இந்த நட்சத்திரக்காரர்கள்.

3. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தில் முதன்மையானவர்கள்.

4. பிறரிடம் நல் மதிப்புடன் மரியாதையுடன் திகழ்பவர்கள்.

5.ஆன்மீகம் தெய்வீக விஷயங்களில் ஞானமும் பற்றும் உண்டு.

6. பல சோதனைகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைவார்.

7. எண்ணம் செயல் சிந்தனை போராட்டம் எல்லாம் ஒரு லட்சிய நோக்குடன் இருக்கும்.

8. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார் சற்று உயரமாக இருப்பார், முகம் சற்று நீளமாக இருக்கும். முகத்தில் ஏதாவது ஒரு வடு இருக்கும் அல்லது பின் மண்டையில் இருக்கும்.

9. பிறவியிலிருந்து இவர்கள் ஒரு குணத்துடன், பழக்கவழக்கங்கள் உடன் செயல்பட்டாலும் சந்தர்ப்பம் சூழ்நிலை இவர்களுடைய பழக்க வழக்கங்களை மாற்றி விடுகிறது.

10. பாரம்பரியத்தையும் கடைப்பிடிப்பதும், அதை வலியுறுத்துபவர்கள் ஆக இருப்பார்.

11. பொதுவாக அமைதியாக இருப்பார் ஆனால் கோபம் வந்துவிட்டால் இவர்கள் செயல்கள் ஒரு தீர்வு இல்லாமல் அந்த கோபம் அடங்காது.

12. சட்டவிரோதமான காரியங்களில் இறங்க மாட்டார், மற்றவர்களையும் இறங்க வேண்டாம் என்று அறிவுரை கூறுவார்.

13. கூட்டுத் தொழிலை தவிர மற்ற எல்லா தொழில்களும், வேலைகளிலும் சிறந்து விளங்குவார்.

14. இவர்களுக்கு அதிகமாக பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் கிடைக்கப் பெறுவது, ஆசிரியர் தொழில், ஆலோசனை, அறிவுரை,PRO, PHYSICIAN, பொதுநலத் நிர்வாகத் தலைவர், மடத் தலைவர், பொது மேலாளர், எழுத்தாளர்.

15. 32 வயது வரையில் பணம் பெரிதாக சம்பாதிக்கவில்லை என்றாலும் பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் சம்பாதித்து விடுவார்.

16. இவர்களுக்கு சூது வாது தெரியாது.

17. இவர்கள் சொந்தமாக தொழிலில் ஜெயிப்பது சற்று கடினம், இவர்களிடம் வியாபார அணுகுமுறை இருக்காது.

18. இவர்கள் வாயில் அடிக்கடி வரும் பேச்சுக்கள்,

நேர்மையாக இருங்கள், உங்கள் கடமையை தவறாமல் செய்யுங்கள், எல்லோருக்கும் நல்லதே செய், பொறுப்புடன் செயல்பட, உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்,எல்லோருக்கும் கஷ்டம் இருக்கும் அதை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளாது, மனைவியை மதித்து நட, பெற்றோர்களுக்கு மதிப்பு மரியாதை கொடு அவர்கள் தான் நமக்குமுதல் இறைவன், ஏதாவது ஒரு லட்சிய நோக்கத்துடன் பயணி, இறைவனை பரிபூரணமாக நம்பு, கூட பிறந்த சகோதர சகோதரிகளை உதவி செய், நல்லதையே பிறருக்கு எடுத்து உரை

19.இவர்கள் திருமண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

20. தாய் தந்தையர்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுப்பதால் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் பிரிவினையும் ஏற்படும்.

21.கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்கிற சிந்தனை இவர்களிடம் அதிகமாக உண்டு.

22.மனதில் எல்லா விஷயங்களையும் புதைத்து வைத்திருப்பதால் சில நேரங்களில் மனச்சோர்வும் ஏற்படும்.

23. இவர்களிடம் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டு. அதனால் அஜீரணக் கோளாறு இவர்களிடம் தென்படாது.

24. புனர்பூச பெண்கள் மிகவும் அமைதியாகவும் இருப்பார்கள், புத்திக்கூர்மை அதிகம்.

25.புனர்பூச பெண்கள் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் அதிகமாகவும் இருக்கும்.

26.புனர்பூசம் பெண்கள் செல்லப்பிராணிகளை விரும்பி வளர்ப்பார்கள்.

27. இந்தப் பெண்களும் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், இவர்களுக்கு அமையும் கணவனும் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள்.

28. இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பாட்டு மிகவும் பிடிக்கும். மந்திரங்கள் ஸ்லோகங்கள் சிறப்பாக உச்சரிப்பார்.

29.இந்த நட்சத்திரக்காரர்கள் ஆடை உடுத்துவது ஒரு சிறந்த நாகரிகம் இருக்கும்.

30. வீட்டில் உள்ள பெரியோர்கள் ஆசைகளை நிறைவேற்றியே ஒரு சில காலக்கட்டத்தில் இவர்கள் ஆசை நிறைவேறாது.

31.வெளி உலகில் நல்ல பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் மதிப்பு மிக்க மனிதராக திகழ்வார், இவர் கவலை இவர் மனதில் மட்டும் இருக்கும். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்.

32.இவர்களுடைய நல்ல பழக்க வழக்கங்களால் எல்லோரும் இவர்களுக்கு உதவி செய்வார்கள்.

33.சுயநலமில்லாமல் பொது நலமாக சிந்தித்து செயல்படும் இவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு அதை வெற்றிபெற்று படிப்படியாக ஒரு நல்ல நிலையை அடைவார்.
🙏🌹🙏🌹🙏🌹🌹🌹
ராமசுப்பிரமணியம் ஈரோடு.
ஜோதிட மாணவன்.
🙏🌹🙏🌹🌹🌹🌹🌹
(மேலே சொல்லப்பட்ட அனைத்தும் பொதுவான பலன்கள்)
🙏🌹🙏🌹🙏🌹🌹🌹🌹

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!