1) ஒன்று, லக்னம் கெட்டால் உன் பெயரை உடம்பெல்லாம் பச்சை குத்தி வைத்தாலும் பேரும்புகழும் பரவாது.
2) இரண்டு கெட்டால் பேச்சு போட்டியில் முன்னே நின்று பேசினாலும் கை தட்ட ஆள் இருக்காது.
3) மூன்று கெட்டால், மூன்று நாள் சம்பளம் மொத்தமாக ஒரு நாளைக்கு கொடுத்தாலும் அடியாள் வேலையாள் அமைய மாட்டார்கள்.
4) நான்கு கெட்டால் நம்ம கூட அரட்டை அடிக்க சொந்த பந்தம் இல்லையே என்று ஏங்க வேண்டியிருக்கும்.
பேருக்கு தாயிருந்தாலும் சோறு போட கூலி கேட்பாள்.
5) ஐந்துகெட்டால் தந்தையை பிஞ்சு குழந்தை கூட பேர் சொல்லி கூப்பிடும்.
6)ஆறு கெட்டால் போருக்கு எதிரிகள் வரமாட்டார்கள்
7)ஏழு கெட்டால் ஏறெடுத்து பார்க்க பொண்ஜாதியும் பூச்சரம் கேட்பாள்.
8)எட்டு கெட்டால் துட்டுக்கு கூட வைத்தியம் செய்த பலன் இருக்காது.
ஆயுள் அம்பேல்.
9) ஒன்பது கெட்டால் பார் முழுதும் சொத்து இருந்தாலும் பாத்தி அளவு குறுகி விடும்.
பேருக்கு விபூதி பூசி புராணம் படித்தாலும் நாத்திகமாக ஒரு வார்த்தையாவது பேசா விட்டால் தூக்கம் வராது.
10) பத்து கெட்டால் பத்து ரூபாய் கடனுக்கு சொத்து பூராவும் அடமானம் வைக்க வேண்டி வரும்.
11)பதிணொண்று கெட்டால் பிணை கைதியாக கூட துணைக்கு ஆள் இருக்க மாட்டார்கள்.
12)பணிரெண்டு கெட்டால் பல கனவுகள் வந்து நொண்டி அடித்து தூக்கத்தை கெடுக்கும்.*