13.8 C
New York
Wednesday, April 10, 2024

Buy now

spot_img

நவகிரகங்கள் பற்றிய பதிவுகள் :

நவகிரகங்கள் பற்றிய பதிவுகள் :
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌺

1.சூரியன்.

காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.

திக்கு – கிழக்கு
அதிதேவதை – அக்னி
ப்ரத்யதி தேவதை – ருத்திரன்
தலம் – சூரியனார் கோவில்
நிறம் – சிவப்பு
வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் – கோதுமை
மலர் – செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் – சிவப்பு
ரத்தினம் – மாணிக்கம்
அன்னம் – கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

2.சந்திரன்.

பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.

கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை – ஜலம்
ப்ரத்யதி தேவதை – கௌரி
தலம் – திருப்பதி
நிறம் – வெள்ளை
வாகனம் – வெள்ளைக் குதிரை
தானியம் – நெல்
மலர் – வெள்ளை அரளி
வஸ்திரம் – வெள்ளாடை
ரத்தினம் – முத்து
அன்னம் – தயிர் சாதம்

3 . அங்காரகன் (செவ்வாய்)

இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.

திக்கு -தெற்கு
அதிதேவதை – நிலமகள்
ப்ரத்யதி தேவதை – க்ஷேத்திரபாலகர்
தலம் – வைத்தீசுவரன் கோவில்
நிறம் – சிவப்பு
வாகனம் – ஆட்டுக்கிடா
தானியம் – துவரை
மலர் – செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் – சிவப்பு ஆடை
ரத்தினம் – பவளம்
அன்னம் – துவரம் பருப்பு பொடி சாதம்

4.புதன்.

இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி

திக்கு – வட கிழக்கு
அதிதேவதை – விஷ்ணு
ப்ரத்யதி தேவதை – நாராயணன்
தலம் – மதுரை
நிறம் – வெளிர் பச்சை
வாகனம் – குதிரை
தானியம் – பச்சைப் பயறு
மலர் – வெண்காந்தள்
வஸ்திரம் – வெண்ணிற ஆடை
ரத்தினம் – மரகதம்
அன்னம் – பாசிப்பருப்பு பொடி சாதம்

5.குரு.

இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர். தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.

திக்கு – வடக்கு
அதிதேவதை – பிரம்மா
ப்ரத்யதி தேவதை – இந்திரன்
தலம் – திருச்செந்தூர்
நிறம் – மஞ்சள்
வாகனம் – மீனம்
தானியம் – கடலை
வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் – புஷ்பராகம்
அன்னம் – கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

6.சுக்கிரன்.

இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதி.

திக்கு – கிழக்கு
அதிதேவதை – இந்திராணி
ப்ரத்யதி தேவதை – இந்திர மருத்துவன்
தலம் – ஸ்ரீரங்கம்
வாகனம் – முதலை
தானியம் – மொச்சை
மலர் – வெண் தாமரை
வஸ்திரம் – வெள்ளாடை
ரத்தினம் – வைரம்
அன்னம் – மொச்சைப் பொடி சாதம் .

7.சனி

இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும். மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.

திக்கு – மேற்கு
அதிதேவதை – யமன்
ப்ரத்யதி தேவதை – பிரஜாபதி
தலம் – திருநள்ளாறு
நிறம் – கருமை
வாகனம் – காகம்
தானியம் – எள்
மலர் – கருங்குவளை, வன்னி
வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
ரத்தினம் – நீலம்
அன்னம் – எள்ளுப்பொடி சாதம்

8.ராகு

இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.

திக்கு – தென் மேற்கு
அதிதேவதை – பசு
ப்ரத்யதி தேவதை – பாம்பு
தலம் – காளத்தி
நிறம் – கருமை
வாகனம் – நீல சிம்மம்
தானியம் – உளுந்து
மலர் – மந்தாரை
வஸ்திரம் – கருப்பு நிற ஆடை
ரத்தினம் – கோமேதகம்
அன்னம் – உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

9.கேது

இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

திக்கு – வட மேற்கு
அதிதேவதை – சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை – பிரமன்
தலம் – காளத்தி
நிறம் – செம்மை
வாகனம் – கழுகு
தானியம் – கொள்ளு
மலர் – செவ்வல்லி
வஸ்திரம் – பல நிற ஆடை
ரத்தினம் – வைடூரியம்
அன்னம் – கொள்ளுப்பொடி சாதம்

நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.

ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-

ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:-

ஓம் பத்ம த்வஜாய வித்மஹே:
ஹேம ரூபாய தீமஹி
தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:-

ஓம் வீர த்வஜாய வித்மஹே:
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரயோதயாத்.

ஸ்ரீ புதன் காயத்ரீ:-

ஓம் கஜ த்வஜாய வித்மஹே:
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத ப்ரயோதயாத்.

ஸ்ரீ குரு காயத்ரீ:-

ஓம் விருஷப த்வஜாய வித்மஹே:
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரயோதயாத்.

ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:-

ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:
தநுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:-

ஓம் காக த்வஜாய வித்மஹே:
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரயோதயாத்.

ஸ்ரீ ராகு காயத்ரீ:-

ஓம் நாக த்வஜாய வித்மஹே:
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரயோதயாத்.

ஸ்ரீ கேது காயத்ரீ:-

ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரயோதயாத்.

நன்றி. 🙏

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!