20.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

திருவாதிரை நட்சத்திர பரிகாரம்

திருவாதிரை நட்சத்திர பரிகாரம்..!

திருவாதிரை நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர், அல்லது ஜாதகத்தில் திருவாதிரை நட்சத்திர சாரத்தில் லக்ன அசுபர் அல்லது கர்ம கிரகங்கள் ராகு/கேது/சனி போன்றவை நின்றவர்கள் கீழ் காணும் பரிகாரங்கள் செய்ய நேர்மறை ஆற்றலை பெறலாம்..!

திருவாதிரை நட்சத்திரம் ராகு+புதன் சேர்க்கைக்கான பலனை தரும், நாய்களுக்கு உணவிடுங்கள், பொதுவாக எந்த மிருகங்களையும் துன்புறுத்தலாகாது..!
அசைவ உணவுகள் உட்கொள்ளுவதை தவிர்க்கவும், முழுதாக முடியாவிட்டாலும் திருவாதிரை நட்சத்திர நாளில் தவிர்க்கவும், சாத்வீக வாழ்க்கை முறைகளை பின்பற்றி வாழ பழக்கிக்கொள்ளுங்கள், பழிவாங்குதல், சண்டை போன்ற எண்ணங்களை உதாசீனம் செய்யுங்கள்..!
காலபைரவர் கோயிலில் பச்சை பயறு அல்லது கருப்பு பசுமாடு தானம் செய்யுங்கள்..!
ஞாயிற்றுகிழமை மாலை வேளையில் முழு தேங்காய், நிலக்கரி, பார்லி இம் மூன்றையும் ஓடும் நீரில் விடுங்கள்..!
திருவாதிரை நட்சத்திர நாயகன் ருத்திரன், திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீ ருத்திரம் அல்லது ருத்திர சமக்கம் படித்து வழிபட வெற்றிகளை ஈர்க்கலாம்..!
திருவாதிரை நட்சத்திரகாரர்கள் அல்லது திருவாதிரை நட்சத்திரத்தில் கர்ம கிரகங்கள் அல்லது லக்ன அசுபர் நின்றால் 8 முக ருத்திராட்சம் அணிய அசுப ஆற்றலை எதிர்கொள்ளும் வலிமையை பெறலாம், இந்த ருத்திராட்சம் மூலாதார சக்கரத்தை தூண்டி அதில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து உடல் நலத்தை சீர்சேயும்..!
சிகப்பு, பச்சை, சாம்பல், கருப்பு நிறங்களை உபயோகிக்கலாம்..!
திருவாதிரை நட்சத்திரகாரர்கள் அல்லது திருவாதிரையில் அசுபர் கர்ம கிரகங்கள் நின்றவர், ஹேரம்ப கணபதி வழிபாடு செய்ய அசுப ஆற்றலை எதிர்கொள்ளும் வலிமையை தரும், நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்..!

மீண்டும் சந்திப்போம்..!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!