20.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

ஜோதிடம் பார்க்க வேண்டுமா ? ஏன்?

ஜோதிடம் பார்க்க வேண்டுமா ? ஏன்?
ஜோதிடம் பார்ப்பதன் அவசியம் என்ன ?

எல்லாம் விதிப்பயன்படி தான் நடக்க போகிறது என்றால், ஏன் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்

விதிக்கப்பட்டது தானே நடக்கப்போகிறது பின் எதற்கு பணம் செலவழித்து ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நியாயமானதுதான்

உண்மைதான் .நமக்கு விதிக்கப்பட்டதை நம்மைத் தவிர யாராலும் மாற்ற முடியாது அதை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

ஆனால் அதை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை இறைவன் நம் கையில் கொடுத்துள்ளான்.

உதாரணமாக ஒருவருக்கு 25 கிலோ இரும்பை தூக்கி சுமக்க வேண்டும் என்பது விதி 25 கிலோ இரும்பு என்பது மிகவும் கடினமான ஒரு பொருள் .

இது விதிப்பயன் .

அந்த இரும்பை பஞ்சாக மாற்றி சுமப்பதனால் விதியின் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.
அந்த சூட்சமத்தை அறிய முடிவது ஜோதிடம் மட்டுமே……

ஜோதிடமும் மருத்துவமும் ஏறக்குறைய ஒன்றே. நன்கு ஆராய்ந்து பார்த்தோமானால் மருத்துவத்தைவிட ஜோதிடம் ஒரு படி உயர்ந்தே நிற்கும்.

ஏனென்றால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு நோயை துல்லியமாக ஜோதிடத்தில் கணக்கிட முடியும்.

மருத்துவ ஜோதிடத்தில் இதற்கு வழிமுறைகள் நிறைய உண்டு .

உடல் நன்றாக இருப்பவர் யாரும் டாக்டரிடம் சென்று முழு பரிசோதனை செய்துகொள்வது கிடையாது.நூற்றில் ஒன்றோ, இரண்டோ மட்டுமே டாக்டரிடம் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்வர்.

டாக்டரிடமும் ஜோதிடரிடமும் பிரச்சனை பெரியதாகி பிரச்சனையின் உச்சக்கட்டத்தில் வருவோர் தான் பலர்.

எப்படி முழுமையாக உடல் பரிசோதனை செய்யும்போது நோயின் அறிகுறி தென்படுகிறதோ அதுபோல் ஒருவருடைய எதிர்காலத்தில் நடக்கும் நல்லது ,கெட்டதை அறிந்து குறிப்பாக கெட்டவற்றை ஓரளவு ஜோதிடத்தின் மூலம் தடுக்க முடியும்.

ஜோதிடத்தில் ஒருபோதும் விதியை மாற்றவே முடியாது .உனக்கு விதிக்கப்பட்டது விதிக்கப்பட்டதே. அதே நேரத்தில் பிரச்சினையின் கடுமையை ஓரளவு குறைக்க முடியும் .

உதாரணமாக குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒருவருக்கு ஏழரைச் சனியில் விரய சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அல்லது நடைபெறப்போவதாக வைத்து கொள்வோம்.

12ல் சனி வரும்போது விரையமாக வேண்டும் என்பது விதி .

அதை முழு சுப விரயமாக மாற்றுவதும் ,அசுப விரயம் ஆக்குவதும் அவரவர் தனிப்பட்ட வினைப்பயனே .

ஏழரை சனி ஆரம்பிப்பதற்கு முன்பே லாபஸ்தானத்தை விட்டு சனி விலகும்போது கையில் இருக்கும் பணத்தை சுபவிரயம் ஆகிவிட்டால் பிரச்சனை பெரிதாக இருக்காது .

அதாவது ஏழரை சனியில் நீ கஷ்டப்பட வேண்டும் .அதே நேரத்தில் உன்னுடைய சொத்தோ, பணமோ மறைமுகமாக உன்னிடம் இருக்க வேண்டும்.

அப்பொழுது அக்காலம் உனக்கு கடுமையாகவே செல்ல வேண்டும் .இந்த மாதிரி வினைப்பயனை ஓரளவு மாற்றி விட்டால், தீய பலனின் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்.

மற்றொரு உதாரணமாக ரோட்டில் செல்லும் போது ,ஒரு இடத்தில் சகதி உள்ளது அதைத் தாண்டி அந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்பது விதி .

உதாரணமாக கோட்சாரத்தில் 11-ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் சனி இருக்கிறதென்று இங்கே வைத்துக் கொள்வோம் .

11ல் சனி இருக்கும் போது லாபஸ்தானத்தில் கிடைத்த லாபம், நமக்கு வாழ்நாள் முழுதும் தொடரும் என்று தப்புக்கணக்கு போட்டு 12ம் இடத்தில் விரையத்தில் சனி வரும்போது தனியாக சொந்த தொழில் ஆரம்பிக்கிறேன் என்று பணத்தை இழந்தோர் பலர்.

இங்கு சேற்றில் கால் வைத்து நடக்க வேண்டும் என்பது விதி .ஜாதகம் பார்க்காமல் இருந்தால் 11 இல் ஏற்பட்ட லாபத்தின் ஆணவம் காரணமாக வேகமாக ஓடிச்சென்று காலிலும் சகதி ஒட்டி ,வேகமாக சென்றதால் உடம்பிலும் ,முகத்திலும் சேறு பூசும் நிலையை தவிர்க்கவே ஜோதிடம் பார்க்க வேண்டும்.

காலில் சேறு பட வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் அது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது ஓரளவு நம் கையில் உள்ளது.

ஒவ்வொருவரும் அவருடைய சுய ஜாதகத்தை அந்தந்த காலகட்டத்திற்கு போல், ஆராய்ந்து,இயற்கையோடு ஒன்றி வாழப் பழகினால் வாழ்வில் பெரும் துன்பம் நிகழாது .

பள்ளியில் படிக்கும் மாணவர் மற்றும் அவர்களின் பெற்றோரின் கனவு டாக்டராக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும். இதுதான் கனவு.

ஒருவருடைய பிராப்தப்படி அவர் டாக்டராக கூடாது என்பது விதி.

ஆனால் அதீத எதிர்பார்ப்பினால் ஐந்து மார்க் 10 மார்க்களில் டாக்டர் சீட் கையை விட்டுப் போய்விடும்.

இது வாழ்க்கையே இருண்டது போல, தன்னம்பிக்கை அற்று ,எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் தன்னுடைய கனவு கலைந்து விட்டதாக எண்ணி தன்னம்பிக்கை அற்று வாழ்வர்.

ஜோதிடம் பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் இதற்கான பலனை ஓரளவு துல்லியமாக கண்டறிய முடியும் என்பதால் ,அதற்கு ஏற்றபடி நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள ஜோதிடத்தால் மட்டுமே முடியும்.

பெற்றோர்களின் கனவுகளை பிள்ளைகள் மீது திணிப்பது மாபெறும் குற்றமாகும்.

தனக்கு கிடைக்காத ஒன்று ,தன் மகனுக்கு ,மகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது நியாயமான ஆசையாக இருந்தாலும் விதிப்படிதான் எல்லாம் நடக்கும்.

அதிக எதிர்பார்ப்பு சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தில் முடிந்துவிடும்.

படிப்பு மட்டுமல்ல மற்ற விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

இதைத் தவிர்க்கவே ஜோதிடம் பார்க்க வேண்டும்.

உண்மை நிலையை தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் ஒளி பிறக்கும்.

இதை உணர்ந்து கொண்டால் வாழ்வில் என்றும் ஏமாற்றம் இருக்காது.

இறை நம்பிக்கை என்றும் நல்லோர்க்கு துணையிருக்கும் .

எல்லாம் இறைவன் செயலே

இறையருள் இன்றி ஒரு அணுவும் அசையாது

என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி
9894770473

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!