பரணி, பூரம், பூராடம் – இந்த மூன்றும் சுக்கிரனின் நட்சத்திரங்கள்.
ஒரு குழந்தை இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தால் அது தாய், தந்தை குடும்பத்திற்கு யோகம்.
குழந்தை பிறந்தவுடன் சுக்கிரன் திசை தொடங்கும்.
சுக்கிரன் திசை 20 வருடம்.
பரணி, பூரம்,பூராடத்தில் குழந்தை பிறந்தால் அது மேஷம், சிம்மம், தனுசு ராசியில் வரும்.
மேஷம் பரணி,
சிம்மம் பூரம்,
தனுசு பூராடம் இந்த மூன்றில் குழந்தை பிறந்தவுடன்
சுக்கிரன் திசை தொடங்கும்.
அது தாய், தந்தை, குழந்தை, குடும்பத்திற்கு யோகம்.
ஒரு சில அப்பாக்கள் சொல்லுவார்கள்.
என் குழந்தை பிறந்தவுடன் எனக்கு யோகம்,சொத்து சேர்ந்தது,தொழில் அமைந்தது என்று சொல்லுவார்கள்.
அதற்கு சுக்கிரன் திசையை காரணம்.
சுக்கிரன் மகாலட்சுமிக்கு உரிய கிரகம்.
மேலும் பெருமாளுக்கும் உரியது.