24.6 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

சித்திரை நட்சத்திர பொதுபலன்கள்

சித்திரை நட்சத்திர பொதுபலன்கள்

1. நல்ல உடல்வாகு, உயரம்.

2. மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்.

3. நல்ல ஆடைகளை அணிவார்கள்,சந்தோஷமாகவும் ஜாலியாகவும் இருக்க அதிகமாக விரும்புவார்கள்.

4. இவர்களுக்கு பெண் நண்பர்கள் அதிகம், ரகசியமுண்டு.

5. இவர்களுடைய நிலை நன்றாக இருந்தால், இவர்களுடைய பேச்சும் நடவடிக்கையும் கெத்தாக இருக்கும்.

6. இவர்களுடைய நிலை சற்று மோசமாக இருந்தால் பேச்சு நடவடிக்கை எல்லாம் அமைதியாக இருக்கும்.

7. நண்பர்களுடன் நன்றாக ஊரை சுற்றி பார்ப்பார்.

8. உல்லாச பயணம் போவது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

9. ஏதேனும் ஒரு தீய பழக்கம் இவர்களிடம் இருக்கும்.

10. சுறுசுறுப்பும் ஆளுமையும் சிறப்பாக இருக்கும்.

11. மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் இறங்கி வேலை செய்வார்.

12. ஆளுமை செய்வார், அதட்டி சொல்லுவார், கேட்கவில்லை என்றால் அந்த வேலையை இவர்கள் முடித்துவிடுவார்.

13. காம உணர்வுகள் சற்று அதிகமாக இருக்கும்.

14. மிகவும் கஷ்டமான நிலையில் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவார். கஷ்டம் தீர்ந்தபின் கோவில் பக்கம் செல்ல மாட்டார்.

15. இவர்களுடைய அந்தஸ்தையும், கௌரவம், பெயர் கெடாமல், பார்த்துக்கொள்வதில் சிந்தனை இருக்கும். அந்தப் பெயரைத் தக்க வைப்பதற்காக செலவும் செய்வார்.

16. இவர்கள் பிறந்த உடன் தந்தையைப் பிரிந்து வாழ நேரிடும், தந்தைக்கு ஒரு பெரிய பாதிப்பு இருக்கும்.

17. வாழ்நாளில் இவர்களுக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில், தலை சார்ந்த பிரச்சனை, அல்லது சர்ஜரி, அல்லது தலையில் காயம், ஏற்பட வாய்ப்பு உள்ளது.

18. வித்தியாசமான சிந்தனை வித்தியாசமான செயல் வித்தியாசமான போக்கு.

19. நாரதர் கலகம் செய்வது போல, இவர்களும் கலகம் செய்வார்கள். அது எப்படி என்றால் ஆளுக்கு தகுந்தாற்போல் பேசி தான் மிகவும் நல்லவனாக பிரதிபலித்துக் கொள்வார்.

20. குசலம் நிறைய விசாரிப்பார்.

21. தாயின் ஆதரவு இந்த நட்சத்திரக் காரர்களுக்கு உண்டு.

22.இவர்களிடம் நடிப்புத் தன்மை இடத்திற்கு ஏற்றால்போல் இருக்கும்.

23. நிறைய ஆளுமைத்திறன், வேகமாக செயல்படுதல், எல்லோரையும் திருப்திப்படுத்து மாறு பேசுதல், இதனால் இவர்களுக்கு சற்று கர்வம் அதிகம்.

24. கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்பட்டு பின்பு சேருவார்கள், ஒரு சில காலம் பிரிந்து வாழ்வார்கள்.

25. காரியவாதிகள், பிடிவாதக் காரர்கள்.

26. இவர்களுக்கு ஏதாவது ஒரு சொத்து பிரச்சனை இருக்கும் அல்லது முதல் சொத்தை வாங்கி கடனுக்காக விற்று இருப்பார்.

27. இவர்களுக்கு குடும்பம் சிறப்பாக அமைந்தால் தொழில் சிறப்பாக இருக்காது,தொழில் சிறப்பாக அமைந்து இருந்தால் குடும்பம் சிறப்பாக இருக்காது.

28. சித்திரைப் பெண் நட்சத்திரக்காரர்கள் எம்பிராய்டரி, அழகு சாதனம், தையல் தொழில், பெண்களை அழகுபடுத்தும் தொழில், பாடி மசாஜ், பள்ளிக்கூட மாணவர்களுக்கு, யூனிபார்ம் தைப்பது, உயர்தர நர்ஸ்,ஆப்பரேஷன் செய்யும் மருத்துவருக்கு உதவியாளராக இருப்பது, முருகன் வழிபாடு, அலகு குத்துதல், காவடி எடுத்தல், மொட்டை போட்டுக் கொள்ளுதல்,மற்றும் குலதெய்வ கோயில் உரிமை பிரச்சனைகளுக்கு வாக்குவாதம் செய்தல்.

29. ஆண் சித்திரை நட்சத்திரம், வலிமையான உடல் வாகு, மெக்கானிக்கல், இயந்திர சாதனங்களை கையாள்வது, பெரிய தொழிற்சாலையில் உயர் பதவியில் இருப்பது, தொழிற்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள், தீயணைப்பு துறையில், ஆப்பரேஷன் செய்யும் மருத்துவர், ஆம்புலன்ஸ் டிரைவர், பெரிய வாகன ஓட்டுநர், இயந்திர டிசைன் இன்ஜினியர்ஸ்,போன்ற பல துறைகளில் இவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்.

30.ஏழைக்கு மனம் இறங்கி உதவும் குணம் இவர்களிடம் அதிகம் உண்டு. அவர்களுக்காக வரிந்துகட்டி பேசுவார்.

31. சென்டிமென்ட், சகுனம் பார்ப்பது, பாரம்பரியத்தை கடைப்பிடிப்பது, போன்ற விஷயங்களில் இருந்து சற்று தள்ளி இருப்பார்.

32.விதவைப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்கணும் என்கிற சிந்தனை இவர்களிடம் உண்டு.

33. எப்பேர்பட்ட பிரச்சனைகள் வந்தாலும், எவ்வளவு பெரிய எதிரிகள் எதிர்த்து நின்றாலும், எல்லாவற்றையும் சமாளித்து வாழ்க்கையில் முன்னேற கூடிய திறமை இவர்களிடம் உண்டு.

34. சகோதரன் சகோதரிகளிடம் சிறப்பான ஒரு உறவு இருக்காது, ஆனால் குடும்பத்தை விட்டு வெளிவட்டாரத்தில் எல்லோரிடம் சிறந்த ஒரு உறவை வைத்துக் கொள்வார்.

35.யாரையும் இதைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தியும் நிற்பதும் படுத்தியும் செய்யமாட்டார், செஞ்சா செய்ய, செய்யாட்டி போ என்கிற மாதிரி பேசுவார்.

36. இவர்களுடைய திருமண வாழ்க்கை சற்றுக் சுகம் குறைவாக இருக்கும், ஆனால் குடும்பத்தை விட்டு வெளிவட்டாரத்தில் இவர்களுடைய வாழ்க்கை, சுகம், பேரின்பம், அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

🙏🌹🙏🌹🙏🌹🌹
ராமசுப்பிரமணியம் ஈரோடு ஜோதிட மாணவன்.

🙏🌹🙏🌹🙏🌹🌹🌹
(மேலே சொல்லப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் பொதுவானவை)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!