8.5 C
New York
Sunday, March 3, 2024

Buy now

spot_img

குழந்தை பாக்கியம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்

குழந்தை பாக்கியம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்

🌺“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்றார் நம் சைவ வள்ளுவப் பெருந்தகை.

🌺பணம், பொருள், சுற்றம் என எல்லாம் இருந்தாலும் மழலைக்காக வருத்தம் கொள்பவர்கள் ஏராளம்.

🌺அந்தக் குறையை நீக்க ஈசன் குடிகொண்டிருக்கும் அவதார ஊரைப் பற்றியும், புத்திரகாமேட்டிஸ்வரர் பற்றியும் படித்து அருள் பெருவோம்.

🌺குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர், #ஆரணியில் அருள் பாலிக்கிறார்.

🌺#தல_வரலாறு :

🌺தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு உண்டாக குல குரு வசிஷ்டரிடம்
ஆலோசனை கேட்டார்.

🌺“குருவே எனக்கு வாரிசு எதுவும் பிறக்கவில்லை. அதனால் பெருமாளிடம் வேண்டலாமென நினைக்கின்றேன். நீங்கள் ஆலோசனை சொல்ல வேண்டும்” என்றார் தசரதர்.

🌺குழந்தை பிறக்க வேண்டும் என்பது சாதாரண விஷயமா. . பக்தர்களுக்கு துன்பமென்றால் ஓடிவரும் ஈசனை வணங்கு. பாற்கடலில் பள்ளி்க் கொண்டிருக்கும் விஷ்ணுவையே உனக்கு சிவபெருமான் குழந்தையாக வரச் சொல்லிக் கட்டளையிடுவார்” என உலகை காத்தருளும் சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார்.

🌺அதன்படி தசரதர், மகா சக்திப் பொருந்திய சிவலிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்து, ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். தசரதனின் நான்கு மனைவிகளும், மக்களும் விரதமிருந்து புத்திர பாக்கியம் கிடைக்க சிவனிடம் வேண்டினார்கள்.

🌺பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றிடும் சிவன், தசரதனுனுக்கு அருள் செய்தார். அதுவும் தன்னுடைய படைகளின் தளபதியான விஷ்ணுவை ராமான பிறக்க கட்டளையிட்டார்.

🌺இதன் பின், அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார் தசரதன். சிவனுக்கு “#புத்திரகாமேட்டீஸ்வரர்’ என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

🌺#தசரதர்_சன்னதி:

🌺ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டிய தீர்த்தம் நதியாக பெருக்கெடுத்தது. கமண்டல நதி எனப்பட்ட, இத் தீர்த்தக் கரையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது.

🌺மழைக்காலங்களில் இந் நதியில் தண்ணீர் அதிகமாக ஓடும்.
புத்திரகாமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று, சுவாமி புறப்பாடும் உண்டு. அம்பாள் பெரிய நாயகிக்கு கொடி மரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.

🌺கோயிலுக்கு வெளியில் தசரதர் சன்னதி இருக்கிறது.
இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிப்பது வித்தியாசமான தரிசனம். கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார்.

#குழந்தைபாக்கியவழிபாடு:

🌺குழந்தை வேண்டி புத்திரகாமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஏழு திங்கள்கிழமைகள் விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறோ, தயிர்ச்சாதமோ, கறிவகைகளுடன் சாதமோ அவரவர் தகுதிக்கேற்ப கொடுத்து, பிறகு தாங்கள் சாப்பிட வேண்டும்.

🌺இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைகளுக்கு அன்னம் பரிமாற வேண்டும்.

🌺ஏழாவது திங்களில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவள மல்லி மாலை (கோயிலில் இந்த மாலை கிடைக்கும்) அணிவித்து, மிளகு சேர்த்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று கோயில் சார்பில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்து கொள்ளலாம்.

🌺புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி கொள்ளலாம்.

🌺கமண்டல நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். ஒரு செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கி துவங்குகின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு, சக்கரம் உள்ளது.

#திருவிழா:

☀️ஆடி சுவாதியில் லட்ச தீபம், நவராத்திரி, சிவராத்திரி.

#அமைவிடம்

☀️திருவண்ணாமலையில் இருந்து 58 கி.மீ., தூரத்தில் ஆரணி உள்ளது (வேலூரில் இருந்து 41 கி.மீ.,). பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.

☀️திருதலம் திறக்கும் நேரம்:
காலை 7- 11 மணி, மாலை 4.30- இரவு 7.30 மணி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!