23.7 C
New York
Monday, June 10, 2024

Buy now

spot_img

கிருத்திகை நட்சத்திரம் பொதுவான பலன்கள்

கிருத்திகை நட்சத்திரம் பொதுவான பலன்கள்

1. கந்த பெருமான் அவதரித்த நட்சத்திரம்.

2. உஷ்ண உடம்பை உடையவர்கள். நல்ல கட்டு மஸ்தான உடம்பு உடையவர்கள்.

3. இவர்கள் போஜனப் பிரியர்கள் உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.

4.சமுதாயத்தில் நல்ல பெயர் புகழ் அந்தஸ்து உடன் வலம் வருவார்.

5. நல்ல குணமும் கோபமும் உண்டு, வேகமும், விவேகமும் உண்டு.

6.உறவு முறைகள் இடம் மற்றும் சகோதர சகோதரிகளிடம் ஒரு எல்லைக்குள் இருப்பார்.

7. தலைமைப் பண்புகளும் எதையும் துணிந்து செய்யக் கூடிய திறமை இவர்களிடம் உண்டு.

8. எடுத்த காரியத்தை திறம்பட செய்வதில் வல்லவர்,இவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்பவர்களும் உண்டு.

9. அதிகமாக வெள்ளை ஆடையை விரும்பி அணிவார்,பளிச்சென்று பிரகாசமாக இருக்கும் பொருட்கள் அனைத்தும் மீதும் விருப்பம் அதிகம்.

10.இவர்கள் உடம்பில் தீக்காயங்கள் தென்படும், உடம்பு உஷ்ணத்தினால் அவதிப்படும்.

11. கேஸ் வெல்டிங், ஆர்க் வெல்டிங், சீரியல் லைட் பல்ப் செட்டிங், அலங்கார விளக்குகள், மின்சாரம் உற்பத்தி, வெடிபொருட்கள், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பட்டாசு தொழிற்சாலை, ராணுவம், காவல்துறை, போன்ற துறையில் அதிக ஈடுபாடு.

12. கோதுமை, மாமிச உணவு, மசாலா காரம் அதிகம் உள்ள உணவு, என்னைப் அண்டத்தில் செய்த அனைத்து உணவுகள், விரும்பி உண்ணுவர்.

13.அடுத்த வருடம் வேலை வாங்குவதில் வல்லவர் ஆக இருப்பதால் இவர்கள் அதிகமாக சொந்த தொழிலை தான் விரும்புவார்.

14. இவர்களது கோபத்தை தன் கண் பார்வையாலேயே காண்பித்து, மிகவும் உக்கிரமாக பார்ப்பார்கள்.

15. இவர்களிடம் வேலை செய்யும் ஆட்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை அதிகமாக விரும்புவர்.

16. அடிக்கடி தலைவலியால் அவதிப்படுவோர், பித்தம் தலைக்கு ஏறும்.

17. கிழக்கை நோக்கி பயணிப்பார் கிழக்கு திசை இவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

18. சட்டத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை, நன்றாக புரிந்து கொண்டு, அதன்படி சட்டரீதியாக எதிர்கொள்வார்.

19. ஆன்மீகத்திலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபாடு இருக்கும், கோயில்களுக்கு தர்மகர்த்தாவாக இருக்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். சிவனையும் முருகனையும் அதிகமாக வழிபடுவார்.

20. ஆளுமைத்திறன் உழைப்பு, நேர்மை, அதிகாரம்,தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் இது அனைத்தும் பாதிக்கப்படாமல் இயங்குவார்.

21.இவர்கள் பேசும் பொழுது நியாயத்தை அதிகமாக எடுத்து கூறுவதால், மற்றும் சட்டங்கள் நன்றாக தெரிந்திருப்பதால், இவர்களுடன் பேசி ஜெயிக்க முடியாது.

22.ஒரு இடத்தில் அமர்ந்து பல விதமான வேலைகளை செய்வதில் வல்லவர்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு உண்டு.

23. எதிரிகளை தக்க சமயம் பார்த்து விழுத்தி விடுவார், ஞாபகசக்தி அதிகம், எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம்.

24. ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம், படிப்பு ஆராய்ச்சித் துறைக்கு உதவுவது, வறுமையில் இருப்பவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல எண்ணங்கள் இவர்களிடம் உண்டு.

25. பல ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்வார், பல தொழில்கள் செய்வதில் ஆர்வம் இருக்கும், இவர்கள் ஒரு இடத்தில் வேலையில் இருந்தாலும், பலதரப்பட்ட வேலைகளை செய்வார்.

26.இளமையில் வறுமை இருந்தாலும் தனது உழைப்பால் முன்னேறி நடுத்தர வயதில் ஒரு கௌரவம் மிக்க பதவியை அடைவார்.

27. பறவைகள் வளர்ப்பது, மற்றும் முருகன் வாகனம் மயில் மீது ஈர்ப்பு இருக்கும்.

28. உறவினர்கள் சொந்த பந்தங்கள், சகோதரன் சகோதரி, தாய் தந்தை, இவர்களைவிட,வெளி மனிதர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்.
29.வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கோயில் கும்பாபிஷேகம், பாழடைந்த கோயிலைப் புதுப்பித்து, பொதுசேவை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.

30. எந்த சூழ்நிலையிலும் தன் கவுரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டார், இவரை வேதனைப் படுத்தியவர்கள் அவமானப்படுத்தி அவர்களை, எழுதல் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்.

🙏🌹🙏🌹🙏🌹🌹🌹
ராமசுப்பிரமணியம். ஈரோடு
ஜோதிட மாணவன்.
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹
(மேலே சொல்லப்பட்ட அனைத்தும் பொதுவான பலன்களே).

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!