
கால புருஷன் ராசி என்பது மேஷ ராசியாகும். அந்த மேஷத்தையும் உங்கள் லக்கினத்தையும் வைத்து பரிகாரங்கள் கூறினால் மிகவும் அற்புதமாக வேலை செய்யும். இதில் திசா புத்திகளையும் பிரச்சினைக்குரிய பாவகத்தையும் அறிந்து பரிகாரம் கூறினால் மிக எளிதாக வெற்றி பெறலாம்.
உதாரணமாக
தனுசு லக்கினத்தில் பிறந்தவருக்கு சரியான வேலை அமையவில்லை என்று வைத்துக் கொள்வோம். பொதுவாக வேலை என்று வந்துவிட்டாலே 6-ம் அதிபதி மற்றும் 10 மிடத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
தனுசு லக்கினத்திற்கு 6-மிடம் ரிஷபம். அது காலபுருஷனுக்கு(மேஷத்துக்கு)2-ம் வீடு.
இந்த ஜாதகர் தான் சரியான வேலை கிடைக்காத சூழ்நிலையில் தான் விரும்பி உண்ணும் உணவை நிறுத்திவிட்டால் வேலையில் மாற்றங்கள் உருவாகும்.முகத் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றினாலும் பலன் உண்டு. குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்து இருந்தாலும் ,கண் கண்ணாடி அணிவது அல்லது மாற்றி கொள்வதாலும்,புதிய கல்வி ஒன்றை (குறைந்த நேர படிப்பு)எடுத்துக் கொண்டாலும் மாற்றங்கள் நிகழும். அடுத்து வாய் பேச முடியாதவர்களுக்கு உதவி, கண் பார்வை அற்றவர்களுக்கு உதவி, தான் நிறுத்திய உணவை தானே செய்து இயலாத ஏழைகளுக்கு தானம் வழங்குவதாலும், கண் கண்ணாடி தானம் செய்வதாலும் நிச்சயம் வேலை கிடைக்கும். இதில் ஏதாவது ஒன்று உங்களுக்கு பலனைக் கொடுக்கும்.இதை செய்வது கடினம் இல்லை.
மேலும் திசா புத்தியை இணைத்து பரிகாரம் செய்தால் இன்னும் எளிமையாகும்.
தனுசு லக்கினத்திற்கு குரு திசை என்று வைத்துக் கொள்வோம். குரு பகவான் 9-ல்(சிம்மத்தில்) இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
9-மிடம் என்பது ஆசிரியர்கள்,பிராமணர்கள்,நீண்ட தூர பயணம்,தந்தை, தெய்வ வழிபாடு,தான தர்மங்கள் இவற்றை குறிக்கும் உன்னத ஸ்தானமாகும்.
சிம்ம ராசி என்பது கால புருஷனுக்கு 5-ம் ராசி.
5-மிடம் குழந்தைகள்,புத்தி,பூர்வ புண்ணியம்,குலதெய்வம்,எண்ணங்கள், திட்டங்கள்,கேளிக்கைகள் இவற்றை குறிப்பிடும் பாவகமாகும்.
எனவே 9-தான தர்மம், 5- குழந்தைகள் என்பதால் அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு உணவு, உடை தானம் கொடுப்பதன் மூலமாக தோஷங்கள் குறையும். வசதி இல்லையெனில் அருகில் உள்ள ஏழைக்குழந்தைகளுக்கு உங்களால் முடிந்ததை வாங்கி கொடுங்கள். குல தெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து ஏழைகளுக்கு மனதார தானம் செய்யுங்கள்.
மேலும் 5-மிடம் புத்தி என்பதால் மனநிலை குன்றியவர்களுக்கு உங்களால் முடிந்த தானத்தை செய்யுங்கள். சாலையில் மனநிலை சரியில்லாமல் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் நபருக்கு உணவு வாங்கி கொடுப்பதும்தான் உங்கள் பிரச்சினைகளை விலக்கும்.
நீங்கள் உங்கள் நடவடிக்கைகளை மாற்றுங்கள்.
தீர்வு வரவில்லையெனில் அந்த பாவகத்திற்குரிய தானத்தை செய்யுங்கள் வெற்றி உறுதி.
கால புருஷன் அனைத்து பிரச்சினைக்களுக்கும் தீர்வு தருகிறார்.
கால புருஷனின் அனுமதியோடு….
மேலும் விபரங்களுக்கு
ஸ்ரீ ஈசன் ஜோதிட ஆராய்ச்சி மையம் நிறுவனர் : –
திரு.பண்டிட் குரு.பாலசுப்பிரமணி
தமிழ் வழி எண் கணித பாரம்பரிய ஜோதிடர்
ஸ்ரீ ஈசன் ஜோதிடநிலையம் கோடம்பாக்கம்.
Ph&whatsapp-8508593442
ஆன்லைன் ஆலோசனை உண்டு.