30.6 C
New York
Sunday, July 21, 2024

Buy now

spot_img

ஆண்,பெண் கற்பு ஒழுக்கத்தை குறிக்கும் பாவகங்கள் என்னென்ன? ஒழுக்கம் கெட்டிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

ஆண்,பெண் கற்பு ஒழுக்கத்தை குறிக்கும் பாவகங்கள் என்னென்ன?
ஒழுக்கம் கெட்டிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

ஒரு சொல், ஒரு வில் ஒருத்தனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவன் எம்பெருமான் ஸ்ரீராமன்.

கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது

ஒரு ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானமாக குறிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் 3,7,12 இடங்களும் காமத்தை குறிக்கும் இடமாக குறிக்கப்படுகிறது.

8ம் இடம் என்பது ரகசிய உறவை குறிக்கும் இடமாகும்.

நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக கெடாமல் இருந்தால், ஒழுக்கம் தவறாத காதலும், நெறி தவறாத வாழ்வு அமையும்.

ஜாதகத்தில் நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச கிரகங்கள் இருந்து, 4ம் அதிபதி கெட்டு, சுக்ரன், ராகு அல்லது சனியோடு நெருக்கமாக இணைந்து, சுக்ரதிசை நடந்து கோட்சாரத்தில் ஏழரைச் சனி அஷ்டமச் சனி நடந்தால் கற்புக்கு கேரண்டி இல்லை.

சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் ,துலாத்தில் சுக்கிரன் ராகு அல்லது சனி இணைந்து சுக்கிர தசை நடந்தாலும் காம எண்ணங்கள் ஊற்றெடுக்கும்.

7-ஆம் இடம் என்பது ஒரு ஜாதகத்தில் காம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக 7ம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கு காம எண்ணங்கள் மேலோங்கும்.

ஏழில் சுக்கிரன் சனி இணைந்து, பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டு, முப்பதிலிருந்து ஐம்பது வயது வரை சுக்கிர தசை நடைபெற்று கோட்சாரம் கெட்டு சுபகிரக பார்வை இல்லையென்றால் கண்டிப்பாக கற்புக்கு களங்கம் நேரும்.

எட்டாம் இடத்தில் அ 12ம் இடத்தில் சுக்கிரன் சனி சேர்ந்து இருந்து அல்லது சுக்கிரன் ராகு சேர்ந்திருந்து அந்த வீடு சுக்கிரனுடைய வீடாக அமைந்து, பாவ கிரகங்களின் தொடர்பை பெற்று, சுப கிரக தொடர்பு இல்லை என்றால்

மேற்சொன்ன திசைகள் 30 லிருந்து 50 வரை நடைபெறுமானால் , வெளியே யாருக்கும் தெரியாத ரகசிய உறவாக அந்த உறவு இருக்கும்.

சுக்கிரன் சனியின் நெருக்கமான இணைவு ,தன்னைவிட மூத்த பெண்ணையோ அல்லது கீழ்நிலை பெண்களையோ அடையும் அமைப்பை கொடுக்கும்.

ஜாதகத்தில் 4ஆம் இடத்திற்கு பல காரகத்துவங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் ஆண் ,பெண் இருவரின் கற்பு சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும் இடமாக நாலாம் இடம் உள்ளது.

நாலாம் அதிபதி நீசம் ஆகி பாவ கிரகங்களுடன் (சனி,ராகு) சேர்ந்திருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .(குறிப்பாக 71/2 சனியில்)

பருவ வயதில் இருக்கும் பெண்கள் மேற்சொன்ன அமைப்போடு ராகு ,சனி, சுக்கிர திசை நடந்தால் காதல் என்ற பெயரில் காமுகனிடம் ஏமாறும் நிலை ஏற்படும்.

நாலாம் இடம் சுக ஸ்தானம் என்பதால் நாலாம் அதிபதி நீசமாகியிருந்தால், தவறான வழியில் சுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

காதலால் களங்கமுண்டு.

காதலனிடம் அல்லது காதலியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

7/12 யிலும் ,அட்டம சனியிலும் தேவையற்ற பெண்கள் சகவாசம் தானாக தேடி வரும்.

விதி வசத்தால் பெண் பாவம் செய்தவர்கள் ராமநாமம் உச்சரித்தால் தீயிலிட்ட பஞ்சு போல் தீவினைகள் தீரும்.

அஜாமிளன் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடமிது.

அன்னியக்குச்சம் என்ற ஊரில் வசித்தவன் அஜாமிளன் என்ற அந்தணன். அவனுக்கு அழகான மனைவி இருந்தாள். ஆனாலும், அவன் விதியின் பிடியில் சிக்கி தாசிகளின் இல்லத்திற்கு சென்றான். இத்தனைக்கும் அவன் மனைவியும் அவனுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தனர். எவ்வளவோ முயன்றும், அஜாமிளனின் மனைவியால் அவனைத் திருத்தவே முடியவில்லை. அவனது கடைசி காலகட்டமும் வந்து விட்டது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த அவன் சாகும் தருணத் தில், தன் மூத்த மகன் நாராயணனை அழைத்தான். நாராயணா, நாராயணா, என அழைக்கவும், அவன் உயிர் பிரிவதற்கும் சரியாக இருந்தது. எமதூதர்கள் வந்தனர். அவனைக் கட்டியிழுத்து எமதர்மனிடம் கொண்டு சென்று, அவன் செய்த பாவத் திற்கு தண்டனை வாங்கிக் கொடுக்க எண்ணினர். இதற்குள் வைகுண்டத்தில் இருந்து தேவலோக விமானம் வந்தது. அவர்கள் எமதூதர்களிடம் வாதிட்டனர். எமதூதர்களே! நீங்கள் அஜாமிளனை விட்டு விடுங்கள். அவன் சாகும் நேரத்தில் நாராயணனின்
நாமத்தைச் சொன்னான். எனவே அவனை வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்கிறோம், என்றனர். அதற்கு தூதர்கள், ஐயன்மீர்! தாங்கள் செய்வது முறையாகுமா? அவன் பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணனையா அழைத்தான். தன் மகன் நாராயணனை அல்லவா அழைத்தான்! அது மட்டுமல்ல. அவன் தாசிகளோடு கூடிக்களித்து குடும்பச் சொத்தை அழித்தான். மனைவி, குழந்தைகளின் மனதைப் புண்படுத்தினான். இந்தக் கொடியவனை வைகுண்டம் கொண்டு செல்வதில் அர்த்தமே இல்லை என்றனர். விஷ்ணு தூதர்களோ இதற்கு சம்மதிக்கவில்லை. நாராயணா என ஒருமுறை சொன்னால் போதும். அவன் அதுவரையில் செய்த பாவங்கள் தொலைந்து விடுகின்றன. இது விஷ்ணுவின் உத்தரவு. நாங்கள் அவனை வைகுண்டம் கொண்டு செல்கிறோம், என்று கூறி விமானத்தில் ஏற்றிச் சென்று விட்டனர். விஷ்ணு தூதர்களை எதிர்க்க முடியாத காலதூதர்கள், பயந்தபடியே எமனிடம் சென்றனர். அடேய், மடையர்களே, அஜாமிளனை ஏனடா விட்டு
வந்தீர்கள்? என்று எமன் கேட்பான் என நினைத்தனர். எமதர்மராஜனோ அவர்களிடம், தூதர்களே கலங்க வேண்டாம். விஷ்ணு தூதர்கள் சொன்ன அனைத்தும் உண்மையே. சாகும் நேரத்தில் நாராயண நாமம் சொல்பவர்களை நான் தண்டிப்பதில்லை. அஜாமிளன் தவறு செய்தது கூட சூழ்நிலையின் காரணமாகத்தான். அவன் ஒரு காலத்தில் அந்தணருக்குரிய அனைத்து கர்மநெறிகளையும் தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தான். ஒருமுறை காட்டு வழியே நடந்து வரும் போது காமுகன் ஒருவன், ஒரு தாசியுடன் இணைந்திருந்ததைப் பார்த்து விட்டான். அதன் பின் அவனும் கெட்டுப் போனான். தாசிகளோடு உள்ள பழக்கத்தை அவனால் தவிர்க்க இயலவில்லை. ஆனால், கடைசி நேரத்தில் எப்படியோ நாராயண நாமம் சொல்லி விட்டான். நான் நாராயணனுக்கு கட்டுப்பட்டவன் தான். அவரே சர்வலோக வியாபி. அனைவரையும் காக்கும் பொறுப்பு அவருடையது. நாராயண நாமமே உலகில் உயர்ந்தது. அந்த நாமத்தை உச்சரிக்கும் ஒருவன் மாசு மருவற்ற பரிசுத்தனாகி விடுகிறான். விஷ்ணுவை ஆராதிப்பவர்களுக்கு துன்பம் என்பது எள்ளளவும் இல்லை. நீங்களும் இனி நாராயண நாமம் சொல்லுங்கள், என்றான். எமலோகத்தை நாராயண நாம கோஷம் வியாபித்தது.

ஓம நமசிவாய

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!