அசைவ உணவும் கர்மப்பதிவும்
—————————————-
அசைவ உணவில் இவ்வளவு
தோஷம் வருமா????
நாம் உண்ணும் உணவிற்கும் கர்மாவிற்கும் நிறைய சம்பந்தம் உண்டு. எறும்புகளுக்கு சர்க்கரை போட்டால், 1000 பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் வரும் என்பதை எவ்வாறு நம்புகிறோமோ, அவ்வாறே நாம் உண்ணும் அசைவ உணவிற்கும் தீயபலன் உள்ளது என உணர வேண்டும்.
*நாம் உண்ணும் சைவ உணவிற்கும் கர்மபதிவு உண்டு.
பசிப்பிணியை வென்று பிரபஞ்ச ஆற்றலை மட்டுமே பெற்று வாழ முடியும். அதுவே உயர்ந்த நிலை……
அசைவ உணவும் – கிரக தோஷங்களும்
—————————————-
ஆடு
———
ஆட்டின் காரகர் செவ்வாய். ஆடுகளை வெட்டி உண்பதால் செவ்வாயின் தோஷம் நிச்சயம் ஏற்படும். ஆடுகளை துண்டு போட்டு கொல்கிறோம். துண்டுபோடுவது என்பது கேது.
செவ்வாய் – இரத்தக்குழாய்
கேது – சுருக்கம்.. இதனால்
இரத்தக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு (இரத்தம் தடை) ஆகிறது
அதாவது, ஆட்டிறைச்சி உண்ணும் மனிதனுக்கு நிச்சயம் கர்மரீதியாக இருதய அடைப்பு, இருதய நோய், இரத்த அழுத்தம், இரத்த சோகை, படபடப்பு என பாதிப்பு நிச்சயம் வரும்
பஞ்சபூதத்தில் நிலத்தின் குழந்தை ஆடு. நிலத்தின் தன்மை பொறுமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை
என்ற திருக்குறளே இதற்கு சான்று.
பஞ்சபூதத்தில் நிலத்தை அவமதித்ததில் பொறுமையற்று நாம் கோபம் கொள்ளும் படபடத்துக் கொள்ளும் ஆளாக மாறிவிடுவோம்
கடல் உணவு மீன் வகைகள்
—————————————-
மீன் மூச்சு வாங்கியே சாகும். மூச்சு – ராகு. நுரையீரல் – சனி. அதே போல் மீன் இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு மூச்சு வாங்கும் வியாதி வரும்.
(தற்போது கொரோனா வைரஸ் கூட சனி+ராகு வீரீயத்தில் தான் பலிவாங்குகிறது)
மீனை வலையில் பிடித்து, குடும்பத்தை விட்டு பிரித்து,மூச்சு வாங்கவிட்டு சாகடித்து உண்ணுகிறோம். இதே மாதிரி தான் பல மனிதர்கள் குடும்பத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்டு, மூச்சுவாங்கி கொரோனாவுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்
(தீதும் நன்றும் பிறர் தர வாரா)
பஞ்சபூதத்தில் நீரின் குழந்தை மீன் அதனால் சந்திரனின் சாபம் நிச்சயம் உண்டு. கர்மரீதியாக ஆஸ்துமா, வீசிங், எலும்புறுக்கி நோய், மனநோய் எனக் கண்டிப்பாக வரும்.
கோழி
————-
கோழி என்றாலும் வெடைக்கோழியை தான் அடித்து சாப்பிடுவர். எல்லா உயிரினமும் தன் இணையுடன் சேர்ந்து வாழ நினைக்கும். அப்படி இருக்க வெடைக்கோழியாய் அடித்து உண்டால், நிச்சயம் வீட்டில் சுக்கிரனின் களத்திர தோஷம் இருக்கும் கர்மரீதியாக திருமணம் ஆகாத நிலை, திருமணம் ஆகியும் வாழாமல் இருப்பது கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமல் வாழ்வது என நிச்சயம் தோஷம் உருவாகும்
முட்டை
—————
முட்டையை சாப்பிட்டால் கருகலைத்த தோஷம் வரும் இதன்விளைவு கர்மரீதியாக அபார்ஷன் ஆவது பெண்களுக்கு கருப்பையில் பிரச்சனைகள் வருவது
இராகு – கேது உணர்த்தும்
உணவின் சூட்சுமம்
————————————-
உள்ளம் பெருங்கோவில்; ஊனுடம்பு ஆலயம்; வள்ளற் பிரானுக்கு வாய் கோபுர வாயில்
என திருமூலர் கூறியுள்ளார்.
கோபுரவாயில் எனப்படும் வாயிலில்(திருமூலர் கூறியது) கர்மப்பதிவில்லாத உணவை கொடுக்கும் போது இராகுவின் தோஷம் மட்டுப்படும். (வாய் – ராகு).. அதை வெளியேற்றுவது கேது. ( ஆசனவாய் – கேது). கேதுவும் மட்டுப்படும். உடல் ஆலயமாக மாறும்
இப்போ எல்லோருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும் என்ன கேள்வி???
சுத்தமான சைவம் சாப்பிடுபவர்கள் இருக்காங்களே அவங்களுக்கும் இந்த நோயெல்லாம் வருகிறதே அனுபவிக்கிறாங்களே எப்படி???? ……..
அதுதான் கர்மா ……….
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ………… இதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்திருக்கும் ……….
நன்றி🙏🏻🙏🏻
அதிகம் பகிருங்கள் எல்லோரும் நலமோடு வாழட்டும்
என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி
9894770473
வாட்சப் எண்கள்
9894770473
சிவாயநம🙏