10.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

spot_img

108 சித்தர்களை பற்றிய முழு தொகுப்புகள்

 

108 சித்தர்களை பற்றிய
முழு தொகுப்புகள்

108 சித்தர்கள்…

1. திருமூலர் – சிதம்பரம்.

2. போகர் – பழனி என்கிற ஆவினன்குடி.

3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.

4. புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.

5. கொங்கணர் – திருப்பதி, திருமலை

6. மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் – மதுரை.

8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.

9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.

10. தேரையர் – தோரணமலை (மலையாள நாடு)

11. கோரக்கர் – பேரூர்.

12. பாம்பாட்டி சித்தர் – மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. சிவவாக்கியர் – கும்பகோணம்.14. உரோமரிசி – திருக்கயிலை

15. காகபுசுண்டர் – திருச்சி, உறையூர்.

16. இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமலை

17. குதம்ப்பைச் சித்தர் – மயிலாடுதுறை

18. பதஞ்சலி சித்தர் – சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19. புலத்தியர் – பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20. திருமூலம் நோக்க சித்தர் – மேலை சிதம்பரம்.

21. அழகண்ண சித்தர் – நாகப்பட்டினம்.

22. நாரதர் – திருவிடைமருதூர், கருவை நல்லூர்.

23. இராமதேவ சித்தர் – அழகர் மலை

24. மார்க்கண்டேயர் – கருவை நல்லூர்.

25. புண்ணாக்கீசர் – நண்ணாசேர்.

26. காசிபர் – ருத்ரகிரி

27. வரதர் – தென்மலை

28. கன்னிச் சித்தர் – பெருங்காவூர்.29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்

30. நந்தி சித்தர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.

31. காடுவெளி சித்தர் – திருக்காஞ்சிபுரம்.

32. விசுவாமித்திரர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.

33. கௌதமர் – திருவருணை, திருவிடைமருதூர்.

34. கமல முனி – ஆரூர்

35. சந்திரானந்தர் – திருவாஞ்சியம்.

36. சுந்தரர் – வாரிட்சம், திருவாரூர்.

37. காளங்கி நாதர் – திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38. வான்மீகி – எட்டிக்குடி, திருவையாறு.

39. அகப்பேய் சித்தர் – திருவையாறு, எட்டிக்குடி.

40. பட்டினத்தார் – திருவொற்றியூர்.

41. வள்ளலார் – வடலூர்.

42. சென்னிமலை சித்தர் – கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.

43. சதாசிவப் பிரம்மேந்திரர் – நெரூர்.44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் – பேலூர் மடம்

45. ராகவேந்திரர் – மந்திராலயம்.

46. ரமண மகரிஷி – திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47. குமரகுருபரர் – காசி.

48. நடன கோபால நாயகி சுவாமிகள் – காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் – அனைத்து தபோவனங்கள்.

50. ஷீரடி சாயிபாபா – ஷீரடி.

51. சேக்கிழார் பெருமான் – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.

52. ராமானுஜர் – ஸ்ரீரங்கம்.

53. பரமஹம்ச யோகானந்தர் – கலிபோர்னியா.

54. யுக்தேஸ்வரர் – பூரி.

55. ஜட்ஜ் சுவாமிகள் – புதுக்கோட்டை

56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

57. கண்ணப்ப நாயனார் – காளஹஸ்தி.

58. சிவப்பிரகாச அடிகள் – திருப்பழையாறை வடதளி.

59. குரு பாபா ராம்தேவ் – போகரனிலிருந்து 13 கி.மி.

60. ராணி சென்னம்மாள் – பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி – மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.62. குழந்தையானந்த சுவாமிகள் – மதுரை காளவாசல்.

63. முத்து வடுகநாதர் – சிங்கம் புணரி.

64. இராமதேவர் – நாகப்பட்டிணம்.

65. அருணகிரிநாதர் – திருவண்ணாமலை.

66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.

67. மௌன சாமி சித்தர் – தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.

68. சிறுதொண்டை நாயனார் – திருச்செட்டாங்குடி.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் – பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.

70. வல்லநாட்டு மகாசித்தர் – வல்லநாடு.

71. சுப்பிரமணிய சித்தர் – ரெட்டியப்பட்டி.

72. சிவஞான பாலசித்தர் – மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் – நாட்டரசன் கோட்டை.

74. நாகலிங்க சுவாமிகள் – புதுவை அம்பலத்தாடையார் மடம்.

75. அழகர் சுவாமிகள் – தென்னம்பாக்கம்.

76. சிவஞான பாலைய சுவாமிகள் – புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.

77. சித்தானந்த சுவாமிகள் – புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78. சக்திவேல் பரமானந்த குரு – புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் – வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80. அக்கா சுவாமிகள் – புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.81. மகான் படே சுவாமிகள் – சின்னபாபு சமுத்திரம்.

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் – புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.

83. பகவந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் – ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.

86. தயானந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் – பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள் – புதுவை.

89. வேதாந்த சுவாமிகள் – புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.

90. லஷ்மண சுவாமிகள் – புதுவையிலுள்ள புதுப்பட்டி.

91. மண்ணுருட்டி சுவாமிகள் – புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் – பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) – திருவண்ணாமலை.

94. கோட்டூர் சுவாமிகள் – சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.

95. தகப்பன் மகன் சமாதி – கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.

96. நாராயண சாமி அய்யா சமாதி – நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் – தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் – சென்னை பூந்தமல்லி.

99. வன்மீக நாதர் – எட்டிக்குடி.

100. தம்பிக்கலையான் சித்தர் – சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் – திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

102. குகை நாச்சியார் மகான் – திருவண்ணாமலை.

103. வாலைகுருசாமி – சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.

104. பாம்பன் சுவாமிகள் – திருவான்மியூர்.

105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் – கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.

106. பெரியாழ்வார் சுவாமிகள் – அழகர் கோவில் (மதுரை)

107. மாயம்மா ஜீவசமாதி – கன்னியாகுமரி.

108. பரமாச்சாரியார் ஜீவசமாதி – காஞ்சிபுரம்.

பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்

அழகுமலை இராமதேவர்

அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்

கமலமுனி ஆரூர்

சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்

சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில்
வான்மீகரோடு நற்றாள் .
காசி நந்திதேவர்

ப்லாதி அரிச்சங்கரன் கோவில்
பாம்பாட்டி

பழனி மலை போகநாதர்

திருப்பரங்குன்றமதில் மச்சமுனி

பதஞ்சலி இராமேசுவரம்

சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்

கோரக்கர் மாயூரங்குதம்பர்

திருவருணையோர் இடைக்காட சமாதியிற்

சேர்ந்தனர் எமைக் காக்கவே.

இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.

மதுரை அழகர் கோவிலின் முன்பாக
18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

திருமூலர் – சிதம்பரம்

இராமதேவர் – அழகர்மலை

அகஸ்தியர் – திருவனந்தபுரம்

கொங்கணர் – திருப்பதி

கமலமுனி – திருவாரூர்

சட்டமுனி – திருவரங்கம்

கரூவூரார் – கரூர்

சுந்தரனார் – மதுரை

வான்மீகர் – எட்டிக்குடி

நந்திதேவர் – காசி

பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்

போகர் – பழனி

மச்சமுனி – திருப்பரங்குன்றம்

பதஞ்சலி – இராமேஸ்வரம்

தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்

கோரக்கர் – பொய்யூர்

குதம்பை சித்தர் – மாயவரம்

இடைக்காடர் – திருவண்ணாமலை

சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,

சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

சித்தர்கள் பட்டியல்…

உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த சித்தர்களின் பெயர்கள்,குலங்கள் மற்றும் அவர்கள் செய்த தொழில்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன: ஆதாரம்: “நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர் நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர் கருவூரார் கொங்கணவர் காலாஞ்சி(காளாங்கி) சிந்தி எழுகண்ணர்(அழுகண்ணர்) அகப்பேயர் பாம்பாட்டி தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர் செந்தமிழ் சேர்த்த பதினெண்மர் பாதம் சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம்.”

சித்தர் மரபு அடங்கிய தலம் நந்தி வேதியர் காசி அகத்தியர் வேளாளர் அனந்த சயனம் திருமூலர் வேளாளர் தில்லை(சிதம்பரம்) புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி புலத்தியர் சிங்களவர் யாழ்ப்பாணம் பூனைக் கண்ணர் எகிப்தியர் எகிப்து இடைக்காட்டு சித்தர் இடையர் திருவண்ணாமலை போகர் சீனக் குயவர் பழனி புலிக் கையீசர்

கருவூரார் கன்னரர் கருவூர் கொங்கண சித்தர் கன்னட இடையர் திருப்பதி காளங்கி நாதர் சீனத்து ஆசாரியார் காஞ்சீபுரம் அழுகண்ணச் சித்தர் சீனத்து ஆசாரியார் திருக்குறுங்குடி அகப்பேய் சித்தர் வேளாளர் அழகர் மலை பாம்பாட்டி சித்தர் கோசாயி விருத்தாசலம் தேரையர் வேதியர் பொதிகை மலை குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம் சட்டை முனி் சிங்களவர் திருவரங்கம்

பின் வருபவர்களும்
சித்தர்களே என்பர் சிலர்…

சித்தர்கள் மரபு அடங்கிய தலம்
இராம தேவர்

இராமலிங்க சுவாமிகள் கருணீகர் குலம் மேட்டுக்குப்பம் கமல முனி உவச்சர் திருவாரூர் கடுவெளிச் சித்தர்

கணபதி தாசர்

காக புசுண்டர் சமணர் அன்னவாசல் காளைச் சித்தர்

கோரக்கர் மராட்டியர் / கள்ளர் பேரூர்(கோவை) கைலயக் கம்பளிச் சட்டை முனி

சிவவாக்கியர் சங்கர குலம் சூரியானந்தர்

சுந்தரானந்தர் வேளாளர் மதுரை தன்வந்திரி அந்தணர் வைத்தீசுவரன் கோயில் பதஞ்சலியார் கள்ளர் இராமேசுவரம் பத்திரகிரியார்

பட்டினத்தார்

பீரு முகமது

பூரணானந்தர்

மச்ச முனி செம்படவர் திருப்பரங்குன்றம் வாம தேவர் ஓதுவார் அழகர் மலை வான்மீகர் வேடர் எட்டிக்குடி மதுரை வாலைச் சாமி

உரோமரிஷி மீனவர்

இவர்களும் சித்தர்கள்தாம் என்று சில புத்தகங்களில் உள்ளது. ஆயினும் இவர்கள் பாடிய பாடல்கள் காணக் கிடைப்பது இல்லை.

சித்தர் மரபு அடங்கிய தலம்
எனாதிச் சித்தர்

சேட(ஷ)யோகியார்

காரைச் சித்தர்

குடைச் சித்தர்

பூகண்டம் வன்னியர் புலிப்பாணி வேடர் வியாசர் சந்திர குலம் சோதி முனி பள்ளர் டமரகர் மறவர் வரரிடி(ஷி) கள்ளர் அறிவானந்தர் வள்ளுவர் ச(ஜ)மதக்கினி சைனர் சண்டேசர் வள்ளுவர்

சித்தர்கள் தினம்:

“உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் மொழி. இந்தப் பண்பாட்டின் ஒரு அம்சமாக வளர்ந்த அறிவியல்தான் சித்த மருத்துவம். சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய தமிழகத்தின் பண்டைய அறிவியலாளர்கள்தான் சித்தர்கள்.சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலக சித்தர் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கொண்டாடபடுகிறது.

சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வண்ணமும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக சித்தர் தின விழா கொண்டாடப்படுகிறது.

சித்தர்கள் பற்றிய
வாழ்க்கை குறிப்புகள்…

சித்தர்மரபை நோக்குங்கால், இதுவரைகண்டுள்ள எண்ணிக்கைகட்டுக்கடங்காதது. பதினெட்டு சித்தர் என்ற மரபு பன்னெடுங்காலமாய் இருந்து கொண்டேவந்துள்ளது. நூலுக்குநூல் எண்ணிக்கை வேறுபட்டபோதிலும் கீழ்க்கண்ட சித்தர்கள் மிகமுக்கியமானவர்களாக கருதப்பட்டு அவர்களின் பாடல்கள் ஞானக்கோவையாகவும் சித்தர்பாடல்களாகவும் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பட்டுள்ளன.சித்தர்களின் எண்ணிக்கையை பதினெட்டு என்றுபல சித்தர்பாடல்களே கூறுகின்றன.
“சித்தர்கள் தான் பதினென்ப ராத்தாள் சொன்ன/செயலெல்லாம் கண்டுணர்ந்து தெளிந்திட்டார்கள்”

என ஞானவெட்டியான்

1500ல் பாடல் 220ம்,
“பாடுவார் பதிணென்பேர் நூல்கள் எல்லாம்/பாலகனே இத்தயிலம் கொண்டு சாதி”

என்று அகத்தியர் பரிபாஷை
500ல் பாடல் 100ம்,

“வாத நூல் ஆதீதம் பதிணென்பேர் சித்தர் வசனித்த நூல்களும் பலிதம்”

என புலத்தியர் கற்பம் 300ல் பாடல்54ம்

“மூலரோடு பதிணென்பேர் பரநாதாக்கள்’’

என மச்சமுனி பெருநூல் பாடல் 2ம்

“துலக்கு மந்தப் பதினெட்டுச் சித்தரையா/ தொல் புவியில் சொல்லாமல் மறைத்தார்”

என யாகோபு வைத்திய வாத சூத்திரம் 400ல் பாடல் 179ம்

சித்தர்களின் எண்ணிக்கையை வரையறுத்து

சொல்லுவதாக பாடல் பல உள்ளன. ஒவ்வொரு சித்தர்களின் காலமும் வெவ்வேறானபோது எவ்வாறு அவர்களே அவர்களின் எண்ணிக்கையை பற்றி எப்படி இயலும் என ஐயமும் எழத்தான் செய்கிறது. இருந்தபோதும் முக்கியமாகக் கருதப்படும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் தாண்டி அதிகமாக உள்ளது என்பதே உண்மை.
அபிதான சிந்தாமணியில் சித்தர்கள் பற்றிய குறிப்பில் சித்தர் ஒன்பதின்மர் என்று

1.சத்தியநாதர்

2.சதோகநாதர்

3.ஆதிநாதர்

4.அனாதிநாதர்

5.வெகுளிநாதர்

6.மாதங்க நாதர்

7.மச்சேந்திரநாதர்

8.கடேந்திரநாதர்

9.கோரக்க நாதர் ஆகிய ஒன்பதுபேரையும்,தொடர்ந்து சித்தர் பதிணென்மர் என்று

அகத்தியர்,

போகர்,

கோரக்கர்,

கைலாச நாதர்,

சட்டைமுனி,

திருமூலர்,

நந்தி,

கூன் கண்ணர்,

கொங்கணர்,

மச்சமுனி,

வாசமுனி,

கூர்மமுனி,

கமல முனி,

இடைக்காடர்,

புண்ணக்கீசர்,

சுந்தரானந்தர்,

உரோமரிஷி,

பிரமமுனி இவர்களின்றி

தன்வந்திரி,

புலஸ்தியர்,

புசுண்டர்,

கருவூரார்,

ராமதேவர்,

தேரையர்,

கபிலர் முதலியவரும் பட்டியலிடப்படுகின்றனர்.சித்தரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களைப் பற்றிய உண்மைகளைப் போலவே

அவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஒவ்வொரு நூலிலும் முரண்களைக் காண முடிகிறது. எனினும் சித்தர் ஒன்பதின்மர் எழுதியதாக எந்த ஒரு பாடலும் நமக்குக் கிடைக்கவில்லை. பதிணென் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை என்ற நூலில் 44 சித்தர் வகை பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
அவற்றில் சிவவாக்கியரின் பாடல் முதன்மைப்படுத்தப்பட்டு

பட்டினத்தார்,

பத்திரகிரியார்,

திருவள்ளுவர்,

சட்டைமுனி,

பாம் பாட்டி,

இடைக்காடர்,

அகப்பேய்ச்சித்தர்,

குதம்பைச் சித்தர்,
கடுவெளிச்சித்தர் என மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

சித்தர்கள் தம் வாழ்வை எவ்வித வெற்று ஆடம்பரங்களுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வை வாழ்ந்துள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிவாழ்ந்த சித்தர்கள், பாமரர் நலனுக்காக உண்மையான முறையில் அன்றைக்கே செய்தவர்கள் சித்தர்கள்.

மக்களின் நம்பிக்கையை பெறவும், மூடநம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணரவும், தெய்வங்கள்பற்றிய தேவையற்ற பயத்தை போக்கவுமே விண்ணில் பறப்பது, இரும்பைத் தங்கமாக்குவது போன்ற இரசவாத வேலைகள் செய்து சித்தர்பால் மக்களுக்குள்ள பயங்களை போக்கியும், தம் கருத்துக்களை மக்கள் முன்வைத்து செயல்பட்டுள்ளனர்.

மேலும் எந்தவொரு இடத்திலும் சித்தர்கள் தங்களது பணியினை சிறப்பானதென்றோ, தங்களால் மட்டுமே மக்களை கடைத்தேற்றமுடியும் என்ற பிரச்சார வழியையோ ஒரு போதும் கையாளவில்லை என்பதினின்றே அவர்களின் மாண்பினை உணரலாம். அதுபோன்றே மதப்பிரச்சாரங்கள் பின்னாளில் நிகழக்கூடும் என்பதனையும் அவர்கள் உணர்ந்தே செயல்பட்டவர்கள் என்பதனை கொங்கணச் சித்தர் எழுதிய இப்பாடலின் மூலமாக அறியலாம்:

“எல்லாமறிந்தவரென்றுசொல்லியிந்தப்

பூமியிலேமுழு ஞானியென்றே

உல்லாசமாகவே வயிறுபிழைக்கவே

ஓடித்திரிகிறார்வாலைப்பெண்ணே

-இதுதான்சித்தர்கள்நமக்குவிட்டுச்சென்றசெய்தி.

சித்தரின் பெயர் பிறந்த மாதம் நட்சத்திரம் வாழ்நாள்
சமாதியடைந்த இடம்…

1.பதஞ்சலி பங்குனி மூலம் 5 யுகம் 7நாட்கள் இராமேசுவரம்.

2.அகத்தியர் மார்கழி ஆயில்யம் 4 யுகம் 48 நாட்கள் திருவனந்தபுரம்.

3.கமலமுனி வைகாசி பூசம் 4000 வருடம் 48 நாட்கள திருவாரூர்.

4.திருமூலர் புரட்டாதி அவிட்டம் 3000 வருடம் 13 நாட்கள் சிதம்பரம்.

5.குதம்பையார் ஆடி விசாகம் 1800 வருடம் 16 நாட்கள் மாயவரம்.

6.கோரக்கர் கார்த்திகை ஆயில்யம் 880 வருடம் 11 நாட்கள் பேரூர்.

7.தன்வந்திரி ஐப்பசி புனர்பூசம் 800 வருடம் 32 நாட்கள் வைத்தீச்வரன் கோவில்.

8.சுந்தரானந்தர் ஆவணி ரேவதி 800 வருடம் 28 நாட்கள் மதுரை.

9.கொங்கணர் சித்திரை உத்திராடம் 800 வருடம் 16 நாட்கள் திருப்பதி.

10.சட்டமுனி ஆவணி மிருகசீரிடம் 800 வருடம் 14 நாட்கள் திருவரங்கம்.

11.வான்மீகர் புரட்டாதி அனுசம் 700 வருடம் 32 நாட்கள் எட்டுக்குடி.

12.ராமதேவர் மாசி பூரம் 700 வருடம் 06 நாட்கள் அழகர்மலை.

13.இடைக்காடர் புரட்டாதி திருவாதிரை 600 வருடம் 18 நாட்கள் திருவண்ணாமலை.

14.மச்சமுனி ஆடி ரோகிணி 300 வருடம் 62 நாட்கள் திருப்பரங்குன்றம்.

15.கருவூரார் சித்திரை அஸ்தம் 300 வருடம் 42 நாட்கள் கருவூர், தஞ்சை.

16.போகர் வைகாசி பரணி 300 வருடம் 18 நாட்கள் பழனி.

17.பாம்பாட்டி கார்த்திகை மிருகசீரிடம் 123 வருடம் 14 நாட்கள் சங்கரன்கோவில்.

18.சிவவாக்கியர் காலம் தெரியவில்லை கும்பகோணம்.

சித்தர்களை பற்றிய
தொகுப்புகள்…

சித்தர்கள் சிவ சிவா வென்றாற் றிரு நடமாகும் சிவ சிவா வென்றாற் சீவனும் முக்தியாம்
சிவ சிவா வென்றாற் சீவனும் சித்தியாம்

சிவ சிவா வாசி சிவசிவந் தானே! சித்தர்

சித்தர்கள் – தியானம், மருத்துவம், ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானம், ரசாயனம், சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.

பராபரத்தில் பரம், பரத்தில் சிவம், சிவத்தில் சக்தி,சக்தியிலிருந்து தான் பஞ்ச பூதம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றியது. இந்த சிவன் தான் சித்தன் எனவும் கூறப்படுவதுண்டு.சித்தர் வழி தனி வழி ! யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கு அவர்களுடையது. சித்தர்களின் விடா முயற்சியும், உழைப்பும்,தன்னலமற்ற பணியும் நமக்கு எப்போதும் வேண்டும் வேண்டும்.சீவனே சிவன் என்று துணிவதே சித்தர் தம் மதம்.சித்தர் தம்மைக் காலங்கடந்தவராகக் கூறிக் கொளல் மிகையும் அன்று. பொய்யும் அன்று.சித்தம் என்பது புத்தி, மனம்,சித்து புத்தியால் ஆகிற காரியம் சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.

சித்தர் இலக்கியங்களுள் சில மரபுச் செய்யுட்களால் அமைந்தவை. சில நாட்டுப்புறப் பாடல்களால் இயன்றவை. எளிய நடையில் உயய கருத்துக்களைப் பொது மக்களுக்காகப் பாடியிருப்பது இச்சித்தர்களின் தனிச் சிறப்பு என்றுகூறலாம். மேலும் அவர்தம் பாடல்கள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரும் உயிரோட்டம் உடையவை.

சித்தின் பாடல்கள் வெண்பா, அகவற்பா, ஆசிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை, கலிவிருத்தம் முதலான யாப்பு வரையறையோடு இயற்றப்பெற்றவை. தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி வகையைச் சார்ந்த இசைப்பாடல்களாகவும் சில காணப்படுகின்றன. அவை கும்மி, கண்ணி, ஆனந்தக்களிப்பு, காவடிச்சிந்து, கீர்த்தனை முதலிய நாட்டுப்புற இசைப் பாடல்களாகும். இப்பாடல்கள் பெரும்பாலும் இசைப்பாடல்களாக அமைந்திருத்தலால், அவற்றைப் பொது மக்கள் மகிழ்ச்சியோடு தெருக்களில் பாடிச் செல்வதை இன்றும் நாம் காண்கிறோம்.

கேட்போரும் அப்பாடல்களின் பொருளை எளிதில் உணர்ந்து இன்புறுகின்றனர். சித்தர்களைப் பற்றிய செய்திகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றில் குறிப்புக்களாகக் காணப்படும் போக்கு சித்தர்கள் என்போர் யாவர் என்பதனைப் பல்வேறு சித்தர் பாடல்களும் விளக்கியிருக்கும் பாங்கு, தாயுமானவர், பாம்பாட்டி சித்தர், இராமலிங்க அடிகளார் முதலானோர் பல்வேறு சித்து விளையாடல்கள் புந்துள்ளமை பற்றிய செய்திகள், சித்தர்கள் தத்தம் பாடல்களில் சமயங்கள் கடந்த எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே பாடியிருக்கும் நிலை, பல வகையான யாப்பு வகைகளில் சித்தர் பாடல்கள் பாடப்பெற்றிருக்கும் பெற்றி முதலானவை விளக்கப்பட்டிருத்தலை காணலாம்.

பதினெட்டு என்னும் எண்ணின்பால் கொண்ட ஈடுபாட்டினால் சித்தர்களையும் பதினெண்மராகக் காட்டியிருக்கலாம் என்ற செய்தி சித்தர்களின் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டிலிருந்து ஐம்பதுவரை எட்டியுள்ள நிலை குறித்த அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

பதினெட்டு என்னும் எண்ணின்பால் கொண்ட ஈடுபாட்டினால் சித்தர்களையும், பதினெண்மராக அடக்கிக் காட்டுகின்றனர். பதினெண்கணக்குள், பதினெண்கீழ்கணக்கு பதினெண் மேற்கணக்கு பதினெண் நாள் பாரதப் போர் என்பவனற்றைக் காணுங்கால், அவ்வெண்ணிடம் வைத்த மதிப்பினை உணரலாம். தமிழிலுள்ள பதினெட்டு மெய்யெழுத்துக்களோடு சித்தர் எண்ணிக்கையை ஒப்பிட்டு
இயையு காண்போரும் உளர்.

சிறுபிரபந்த வகைகளை 96 எனக்
கூறி அவற்றையெல்லாம் 90க்குள்ளேய அடக்கிக் காட்டுவர். காலப்போக்கில் அவ்விலக்கிய வகை வளர்ந்து. தொண்ணுற்றானும் மிகுந்து ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது. அது போலவே, சித்தர்களின் எண்ணிக்கையும் பதினெட்டினைக் கடந்து ஐம்பதினை எட்டியுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியாரும் எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
(1 பாரதி அறுபத்தாறு) எனத் தம்மைச் சித்தராகக் கூறிக் கொள்கிறார். இவர் போன்றோரை எல்லாம் சித்தர்களின் பட்டியலில் சேர்த்தால் எண்ணிக்கை ஐம்பதிலும் மேலாகிறது.

சித்தர்கள் 18 பேர்…

1. திருமூலர்

2. இராமதேவர்

3. கும்பமுனி

4. இடைக்காடர்

5. தன்வந்தி

6. வான்மீகர்

7. கமலமுனி

8. போகர்

9. மச்சமுனி

10. கொங்கணர்

11. பதஞ்சலி

12. நந்திதேவர் 13. சட்டைமுனி

14. சுந்தரானந்தர்

15. குதம்பை

16. கருவூரார்

17. கோரக்கர்

18. பாம்பாட்டி சரசுவதி மகால் நூலகப் படத்தில் பதினெண் சித்தர் பெயர்கள் காணப்படுகின்றன.

1. கும்ப முனி,

2. நந்தி முனி,

3. கோரக்கர்,

4. புலிப்பாணி,

5. புகண்டரிஷி,

6. திருமுலர்,

7. தேரையர்,

8. யூகி முனி,

9. மச்சமுனி,

10.புண்ணாக்கீசர்,

11. இடைக்காடர்,

12. பூனைக் கண்ணன்,

13. சிவவாக்யர்,

14.சண்டிகேசர்,

15. உரோமருஷி,

16. சட்டநாதர்,

17. காலாங்கி,

18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது. 1. அகத்தியர்,

2. போகர்,

3. நந்தீசர்,

4. புண்ணாக்கீசர்,

5. கருவூரார்,

6. சுந்தரானந்தர்,

7. ஆனந்தர்,

8. கொங்கணர்,

9. பிரம்மமுனி,

10.உரோமமுனி,

11. வாசமுனி,

12. அமலமுனி,

13. கமலமுனி,

14. கோரக்கர்,

15.சட்டைமுனி,

16. மச்சமுனி,

17. இடைக்காடர்,

18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.

1. அகத்தியர்,

2. போகர்,

3. கோரக்கர்,

4. கைலாசநாதர்,

5. சட்டைமுனி,

6.திருமுலர்,

7. நந்தி,

8. கூன் கண்ணன்,

9. கொங்கனர்,

10. மச்சமுனி,

11.வாசமுனி,

12. கூர்மமுனி,

13. கமலமுனி,

14. இடைக்காடர்,

15. உரோமருஷி,

16.புண்ணாக்கீசர்,

17. சுந்தரனானந்தர்,

18. பிரம்மமுனி என்கிறது அபிதானசிந்தாமணி.

அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியாரால்
(1855 – 1931) தொகுக்கப்பட்ட
இலக்கியக் கலைக்களஞ்சியமாகும்.

இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு 1934 இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. 1981 இலே தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது. அண்மையில் 2001ம் ஆண்டு தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ், 11ம் பதிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது.

 

அபிதானகோசம் என்பது தமிழிலே முதன் முதலாகத் தோன்றிய இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பெற்ற வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தருமநூல்கள், இலக்கியங்களிற் காணப்பெற்ற தெய்வம், தேவர், இருடி, முனிவர், அசுரர், அரசர், புலவர், புரவலர் முதலிய விபரங்களை அகர வரிசையிலே தொகுத்தளிக்கும் முயற்சி அபிதானகோசம் ஆகும். அபிதானகோசத்தைத் தொகுத்தளித்தவர் மானிப்பாய்

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) சுயமாக எழுதியும் உரையெழுதியும் பதிப்பித்தும் உதவியவர்; சஞ்சிகை நடத்தியவர்; அகராதி தொகுத்தவர். அபிதான கோசம் 1902 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்படடு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவரும் முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் அபிதானகோசத்தைக் காட்டிலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி.இவர்களேயன்றி வேறு சிலரையும் அபிதான சிந்தாமணி சித்தர்களாகக் குறிப்பிட்டுள்ளது. அவர்கள்

தன்வந்தி,

புலத்தியர்,

புசுண்டர்,

கருவூரார்,

இராமதேவர்,

தேரையர்,

கபிலர் போன்றோராவர். கலைக்களஞ்சியம் குறிப்பிடும் பதினெண் சித்தர்களும் அபிதான சிந்தாமணியால் சுட்டப் பெற்றவர்களே. சிலர் சித்தர்களின் எண்ணிக்கை இருபத்தொன்று என்பர். அவர்கள் சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் 21 சித்தர்கள் தவம் சித்திக்கப் பட்டிருத்தலைச் சான்றாக எடுத்துக் காட்டுவர்.

நம் நாட்டுச் சித்தர்கள் என்னும் நூலை எழுதிய முனைவர் இரா. இராசமாணிக்கம் சித்தர்களின் பெயர்களை அகர வசைப்படுத்திப் பின் வருமாறு 25 என்ற எண்ணிக்கையில் காட்டியுள்ளார்

1. அகத்தியர்

2. அகப்பேய்

3. அழுகணிச் சித்தர்

4. இடைக்காடர்

5. இராமதேவர்

6. இராமலிங்கர்

7. உரோமமுனி

8. கபிலர்

9. கருவூரார்

10. காகபுசுண்டர்

11. குதம்பைச் சித்தர்

12. கொங்கணர்

13. கோரக்கர்

14. சட்டைமுனி

15. சிவவாக்கியர்

16. தன்வந்தி

17. திருமாளிகைத்தேவர்

18. திருமூலர்

19. தேரையர்

20. நந்தி

21. பாம்பாட்டி

22.புலத்தியர்

23. புலிப்பாணி

24. போகர்

25. மச்சமுனி சித்தர்

சித்தர் பாடல்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற திருமதி இளமதி தன் ஆய்வேட்டின் பின்னிணைப்பில் 47 சித்தர்கள் பெயர்களைத் தொகுத்துத் தந்துள்ளார். அவை.

1.அகத்தியர் 2.அகப்பேய் 3.அமலுமுனி 4.அழுகண்ணர் 5.ஆனந்தர் 6.இராமதேவர் 7.இடைக்காடர் 8.உரோமமுனி 9.கமலமுனி 10.கருவூரார் 11.கபிலர் 12.காகபுசுண்டர் 13.காலாங்கி 14.குதம்பை 15.கூர்மமுனி 16.கூன்கண்ணர்

17.கைலாசநாதர் 18.கொங்கணர் 19.கோரக்கர் 20.சட்டைமுனி 21.சண்டிகேசர் 22.சனகர் 23.சனந்தனர் 24.சனற்குமாரர்

25.சனாதனர் 26.சாகமமுனி 27.சிவவாக்கியர் 28.சுந்தரானந்தர் 29.சூதுமுனி 30.தன்வந்தி 31.திருமூலர் 32.தேரையர்

33.நந்தீசர் 34.பதஞ்சலி 35.பாம்பாட்டி 36.பிரம்மமுனி 37.புண்ணாக்கீசர் 38.புலத்தியர் 39.புலிப்பாணி 40.பூணைக்கண்ணர்

41..போகர் 42.போககுரு 43.மச்சமுனி 44.யூகிமுனி 45.வாசமுனி 46.வான்மீகி 47.வியாசர் .

சித்தர் இலக்கியம் ஒளவையார், மாணிக்கவாசகர், திருமாளிகைத் தேவர், சேந்தனார், காரைக்காலம்மையார், பட்டினத்தார் ஆகியோரையும் சித்தர் கூட்டத்தில் அடங்கியுள்ளார். மாணிக்கவாசகன் சிவபுராணம், கீர்த்தித்திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் என்பனவற்றையும் ஒளவையார் குறள், விநாயகர் அகவல் ஆகியனவற்றையும் ஒன்பதாம் திருமறையிலுள்ள திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருபூர்த் தேவர் ஆகியோர் பாடல்களையும் பதினோராம் திருமுறையிலுள்ள காரைக்காலம்மையார், பட்டினத்தார் பாடல்களையும் சித்தர் இலக்கியங்கள் எனக் குறிப்பிட்டு அவற்றுக்கு விளக்கமும் எழுதியுள்ளார்.சித்தர் பாடல்கள் தொகுக்கப்பெற்று வெளிவந்துள்ள சித்தர் ஞானக் கோவையில் ஒளவையான் குறள், விநாயகர் அகவல், மாணிக்கவாசகன் சிவபுராணம் முதலிய பகுதிகளும் ஒன்பதாம் திருமுறையிலுள்ள திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர் ஆகியோருடைய பாடல்களும் பதினோராந் திருமுறையிலுள்ள காரைக்காலம்மையார் பாடல்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் என்னும் இந்நூலில் மீ.ப . சோமு அவர்கள் தம் சித்தர் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ஒளவையின் குறள், விநாயகர் அகவல், திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், காரைக்காலம்மையார் ஆகியேன் பாடல்கள் இடம் பெறுகின்றன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!