5.3 C
New York
Friday, March 29, 2024

Buy now

spot_img

தர்மசாஸ்த்திரம்.

1. மந்திரங்களின் முடிவில் “ஸ்வாஹா” என்று சொல்லாமல், ஹோம குண்டங்களில் நெய் சேர்க்கக்கூடாது.

2.ஹோமகுண்டங்களில் நெய்வார்க்க உபயோகிக்கின்ற மரக்கரண்டி அத்தி, அரசமரம், கருங்காலி மரம், பலாச மரம் ஆகியவற்றால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.வேறுமரங்களால் ஆனதோ, கடைகளில் வாங்கியதாகவோ இருக்கக்கூடாது.

3.காயத்ரி ஜபம் உட்பட எந்த ஜபம் செய்த இடத்தையும், ஜபம் செய்துமுடித்த பிறகு, நீரால் ப்ரோக்ஷித்து, அந்த நீரை மோதிர விரலால் தொட்டு, நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.

4.ஹோமகுண்டத்தில் நெய் சேர்ப்பதற்கு மாவிலை, பலாசஇலை, பலாஇலை என்று சாஸ்திர சம்மதமுள்ள இலைகளையே உபயோகிக்க வேண்டும்..

5.குழந்தையைக் கையில் ஏந்தி இருப்பவரையோ, ஜபம் செய்து கொண்டிருப்பவரையோ, நீரில் நின்று கொண்டிருப்பவரையோ வணங்கக்கூடாது.

6.பூஜையறையில் விளக்கேற்றியபிறகு, துணி துவைக்கக் கூடாது.

7.விதை விதைப்பது, முகச்சவரம், பூமி பூஜை, வயல்களில் பணி செய்வது ஆகியவற்றை அந்திசாய்ந்த பிறகு செய்யக்கூடாது.

8.பஞ்சுத்திரிகளைத் திங்கட்கிழமைகளில், கையினால் தீண்டக்கூடாது.

9.சந்த்யாவந்தனம் செய்யாமல் தர்ப்பண, அபர காரியங்களைச் செய்வதையோ, பூஜை, ஹோமங்கள் செய்வதையோ, நாமசங்கீர்த்தனங்களோ செய்யக்கூடாது..

10. விடிகாலையாக இருந்தாலும், குளிக்காமல் கோயிலுக்குச் செல்வதோ, அங்கு தரப்படுகின்ற ப்ரசாதங்களைப் புசிப்பதோ கூடாது.

11. விடிகாலையில் தன்வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும், மார்கழி மாதமே ஆனாலும், கோயிலுக்குச் செல்லக்கூடாது.

12. துளஸி இலைகளை மாலைவேளை, சங்க்ராந்தி, சுக்ல/க்ருஷ்ண பக்ஷ துவாதசி தினங்கள், அமாவாசை, பௌர்ணமி, ஞாயிற்றுக்கிழமை போன்ற சந்தர்ப்பங்களில் பறிக்கக்கூடாது.

13.அரச மரத்தை ஞாயிற்றுக் கிழமைகளில் ப்ரதக்ஷிணம் செய்யக்கூடாது.

14 எரிகின்ற தீபத்தின் நிழலோ, மற்றவரின் நிழலோ நம்மீது படக்கூடாது. அப்படி விழுவது, நாம் செய்த புண்ணியங்களை எல்லாம் அழித்துவிடும்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!