7.6 C
New York
Friday, March 29, 2024

Buy now

spot_img

சுக்கிரன் கெட்டால்..!

சுக்கிரன் கெட்டால்..!

சோதிடத்தில் நவகிரகங்களில் இரண்டாம் சுபர் மற்றும் கலி நாயகன் ராகுவின் மித்திரர் சுக்கிரன், இவரே ஆசைக்கு காரகர், ஆசையே மனிதன் உயிருடன் இருக்க காரணம் என்றால் மிகையாகாது, சுக்கிரன் ஒருவருக்கு தரும் நன்மைகள் ஏராளம், தீமைகள் தாராளம், சுக்கிரன் ஜனன ஜாதகத்தில் சுபத்துவ நிலையில் இருந்தாலே அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி தான், சுக்கிரனின் சுப பார்வை குருவின் பார்வைக்கு இணையானது, அசுர குரு சுக்கிராசாரியார் தான் சுக்கிரன் என்றாலும், இதில் அசுர என்பதே அமுதம் ஆகும், பார்க்கடலில் கிடைத்த அமுதம் சுக்கிரனே காரகம், அந்த அமுதத்தின் வழியே தான் தேவர்கள் சீரஞ்சீவித்துவம் பெற்றார்கள், அத்தனை சுகபோகத்தையும் அனுபவித்தார்கள், விஷத்துடன் கலந்த அமுதம் என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன், அந்த விஷத்தைதான் நீலகண்டர் தன் தொண்டையில் இறக்கும் போது அம்பாள் தன் கையால் தொண்டையை பற்றி மேற்கொண்டு அது செல்லாமல் தடுத்தாள் என்பதை இங்கே முக்கியமாக நினைவூட்டுகிறேன், ஏனெனில் விஷத்தில் இருந்தே அமுதம் பிறக்கிறது, அதாவது விஷம் என்று ஒன்று இருந்தால் தான் அமுதம் எது என்பதை பிரித்தரியவே இயலுக்கிறது, இதுவே ராகு+சுக்கிரனின் நட்புறவாகும்..!

விஷம் எனும் ராகுவின் உள்ளே தான் அமுதம் எனும் சுக்கிரன் உள்ளார், இவர்களை பரித்தரிய தான் கர்மம் வேண்டும், ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டால் அங்கே ராகுவின் ஆதிக்கம் மேலோங்கும், இதற்க்கு சுக்கிரன்+ராகு இருவரும் ஜாதகத்தில் தொடர்பு பெரும் போது 100% இது வேலை செய்யும், தொடர்பு பெறவில்லை என்றாலும் 50% வேலைசெய்யும், சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் கெடும் போது எவ்வாறான தாக்கத்தை பொதுவாக தருவார் பார்க்கலாம்..!

பல்வேறு கிரக கணிதத்தின் வழியே சுக்கிரன் ஜனன ஜாதகத்தில் கெட்டால் அதன் பலன் எவ்வாறு இருக்கும், தாம்பத்திய சுகம் கெடும்/பெண்ணுடன் இணக்கமான சூழல் ஏற்படாது/அலங்கார பொருள்கள், வாசனை திரவியங்கள், பூ, எதிர்பாலினத்தின் மீது உள்ள ஈர்ப்பு இவைகளால் பிரச்சனை, மன உளைச்சல் அவமானம் நேரும், தனம் ஈட்டுவதில் நெருக்கடி/அல்லது ஈட்டிய தனம் பயன் அளிக்காமல் போவது/வாகன பழுது/சுப காரியங்களில் நாட்டமின்மை, அல்லது அதனால் மனவருத்தங்கள்/கல்யாண வாழ்க்கையில் சிக்கல்/காதல் கசக்கும்/சுக கெடு/எவ்வளவு வசதி இருந்தும் அதில் அதிருப்தி/பேராசை/வக்கர சிந்தனைகள் அல்லது செயல்கள்/மோகத்தால் அழிவு/மனைவியால் அவமானம், இப்படி இன்னும் பல காரகங்கள் உள்ளன, இதனை எவ்வாறு எதிர்கொள்வது, மாற்றுவழி அல்லது பரிகாரம் மேற்கொண்டு படிக்கவும்..!

பரிகாரம்: உங்கள் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் கெட்ட நிலையை சோதிடரிடம் காண்பித்து உரிய அம்பாள் வழிபாடு செய்யவேண்டும், அல்லது திரிசாம்சம் எனும் D30 வர்க்க கட்டத்தில் சுக்கிரனின் நிலையை கணித்து அதன்படி பரிகாரம் செய்ய வேண்டும், அடுத்து ஒரு எளிய பரிகாரம் கூறுகிறேன் இதை அனைவரும் செய்யலாம், அம்பாள் கோயிலில் (ஈசனின் துணை அல்லது விஷ்ணுவின் துணை எதுவானாலும் ஒன்றே, ஆனால் உக்கிர தெய்வம் கூடாது) ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீட்டின் அதிபதி குறிக்கும் கிழமையில், மாலை வேளையில் இனிப்பு (வீட்டில் செய்தது என்றால் அதி உத்தமம் இயலாதபோது வெளியில் இருந்து வாங்கி தானம் அளிக்கலாம்) தானம் செய்து, அன்று காலை/இரவு சிற்றுண்டி மட்டும் அருந்த வேண்டும், மத்தியம் உணவு உபவாசம் இருக்க வேண்டும், இந்த உபவாசம் எதற்க்கு என்றால் நாம் செய்த கர்மத்தின் பலனை நம் உடலை வருத்தி கழிக்க அம்பாளின் அனுகிரகத்தை வேண்டியே, இந்த பதிவு ஆண்/பெண் அனைவருக்கும் பொருந்தும், சுய ஜாதக கிரகநிலை பதிய வேண்டாம், மீண்டும் சந்திப்போம்..!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!