19.4 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

spot_img

பாம்பின் கால் பாம்பறியும்

🌸🌸 ராகுவை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது என்பதால் தான் கேதுவை வைத்து
🌸🌸”பாம்பின் கால் பாம்பறியும்” என்றார்கள்.
🌸ராகு / கேது சூட்சுமம், ராகு / கேது சாரத்தின் சூட்சமம்🌸அதிலும் குறிப்பாக ராகு. ஏனென்றால் நடந்து முடிந்த பலன்களை விட இனிமேல் நடக்கப் போகும் பலன்களில் தான் சுவாரஸ்யம் உள்ளது. நடக்கப்போவதை துல்லியமாக கூறும் ஜோதிடர்களுக்கே, பெயர், புகழ் கிடைப்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.

🌸கேது flash back என்றால் ராகு flash front. இனி நடக்க போகும் பலன்கள் அனைத்தும் ராகுவின் காரகத்துவமே.

🌸கேம். அப்படி என் றால் ராகு பாவங்களை செய்ய தூண்டுபவர். ராகு- வாய்ப்பகுதி. கேது- கழிவுநீக்க பகுதி. நாம் சாப்பிடும் போது, நல்லவை கெட்டவை என்று பிரித்துப் பார்க்காமல் சாப்பிடுகிறோம். அதாவது சத்துணவு அல்லது சத்து இல்லாத உணவு என்று பிரிக்கலாம். சாப்பிட்ட உணவை சத்துணவு மற்றும் கழிவுகள் என்று பிரித்து வெளியே தள்ளுவது கேதுவின் வேலை. எனவேதான் கேதுவை பாவத்தை கழுவுதல் என்று முன்னரே குறிப்பிட்டோம்.

🌸கேதுவுக்கு நேர் எதிர் ராகு பாவத்தை செய்கிறார் என்று பொருள். அதாவது ராகு வாய் கேது கழிவுகளை வெளித்தள்ளும் உறுப்பு. நாம் சாப்பிடும் பொருளில் சத்துள்ள உணவை கேது உடலில் கிரகித்துக் உடலில் எடுத்து கொண்டால் அது புண்ணியம். வெளி தள்ளினால் அது பாவம். எனவே பாவங்கள் கழிகிறது என்று பொருள்.

🌸ராகு நமது தாத்தாவிற்கு காரகன். குழந்தை பிறப்பை நிர்ணயிப்பது ஆணின் உயிரணுவில் உள்ள Y குரோமோசோம். நமது தந்தை வழி தாத்தா, தாத்தாவிற்கு அப்பா என்று ஒரு வரிசையில் நாம் செல்லும்போது, நமது பிறப்பிற்கு காரணம் ராகுவே என்று புரிந்துவிடும். அதனால்தான் நமது ஆத்மா காரகன் சூரியன் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நீசமாகிறார்.

🌸ஒருவரின் லக்ன புள்ளி ராகுவின் தொடர்பே இல்லாமல் 100% அமையாது. ராகுவின் உச்ச நீச வீடு, ராகுவுக்கு சாரம் கொடுத்தவரின் உச்ச நீச வீடுகள், ராகுவுக்கு வீடு கொடுத்த வனின் உச்ச நீச வீடுகளில், அல்லது ராகுவிற்கு சாரம் கொடுத்தவனின் வீடு, ராகுவுக்கு சாரம் கொடுத்தவனின் வீடு இவையே லக்ன புள்ளி ஆக விழும். சரி பார்த்துக்கொள்ளவும்.

🌸ராகு முன்னோக்கி செல்பவர் கேது பின்னோக்கி செல்பவர் என்று பார்த்து இருந்தோம். ராகு கேதுவின் சாரம் பெற்றாலோ அல்லது கேது ராகுவின் சாரம் பெற்றாலும் பலன் என்னவா ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எவ்வளவு தூரம் நாம் முன்னோக்கி சென்றாலும் இறுதியில் கேதுவின் பின்னோக்கி இருக்கும் இடத்திற்கே வந்து ஆக வேண்டும். நாம் ஏரிய இடத்தில் இறக்கி விடாமல், அதற்கும் பின்னே சென்று இறக்கி விட்டு மீண்டும் நாம் இருந்த இடத்திற்கு நடக்க வைத்து விடுவார். ராகு கேதுவின் சாரத்தை பெற்றாலும் மிகப்பெரும் அனுபவமே.

🌸இராகு லக்ன சுபரான 1 5 9 குறியவர்களின் சாரத்தை பெறுவது சிறப்பு. அதேபோல் 1 5 9 மற்றும் ராகு சுபத்துவம் ஆக இருப்பது சிறப்பு. ஏனென்றால் 1 5 9 நமது வம்ச விருத்தியை கூறும்.

🌸 ராகு என்றால் பெருகுதல் எதையும் விருத்தி செய்தல் என்று பொருள். ராகுவின் நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் மட்டுமே செய்ய வேண்டும். சுப காரியங்கள் செய்தால் அது சுபத்தை பெருக்கும். இராகு நட்சத்திரத்தில் மருத்துவம் பார்க்கக் கூடாது. மீண்டும் மீண்டும் மருத்துவம் பார்க்க செய்துவிடும்.

🌸ராகுவின் நட்சத்திர பாதங்களில் நின்ற கிரகங்களின் நவாம்ச பாதை தனுசு முதல் மீனம் வரை வருகிறது. அதை எதிர்காலத்தைக் குறிக்கும் ராசிகள். எனவே ராகுவின் நட்சத்திரங்களில் திருமணம் முடிக்கும் பொழுது அடுத்தடுத்த ஜென்மங்களிலும் கணவன் – மனைவி இணைந்தே இருப்பார்கள் என்ற கருத்தில் இணைக்கப்படுகிறது.

🌸ராகுவின் நட்சத்திரங்களில் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது. கொடுத்தால் வராது என்று கூறுவார்கள். ஒன்று அடுத்த ஜென்மத்தில் வரும். அல்லது ஜாதகருடைய ஜாதக அமைப்பை பொருத்து இந்த ஜென்மம் முடிவுக்குள் பணம் கைக்கு வந்து விடும்.

🌸பலருக்கு ராகு திசை என்றாலே உச்சத்திற்கு கொண்டு விடும் என்று நினைப்பார்கள். கேது சாரம் பெற்று இருப்பவர்கள் கண்டிப்பாக போக முடியாது. போனாலும் இறங்கிய இடத்திற்கே வந்து விட்டுவிடும் இந்த கேது. கேது ஒரு மரத்தின் வேர் என்றால் ராகு ஒரு மரத்தின் உச்சி. எவ்வளவு பெயர், புகழ் கிடைத்தாலும் திசை முடிவில் மிகுந்த பக்குவத்தை கொடுத்து கீழே இறக்கி வைத்து சென்று விடுவார். லக்ன சுபர்களின் சாரத்தை பெற்று அவர்களும் ராகுவும் கெடாமல் பொருள் ஸ்தானங்களில் ஜாதகருக்கு பொருளை தக்க வைப்பது போல் ராகு இருக்க வேண்டும்.

🌸 ராகு என்றாலே போக காரகன். போகத்திற்கு வீரியம் கண்டிப்பாக தேவை. எனவே வீரியத்திற்கு காரகன் ராகு.🌸🌸ராகுவின் நட்சத்திரங்கள் காம திரிகோண ராசிகளில் மட்டுமே வரும். எனவே ராகுவின் தன்மை இன்பத்தை பொறுத்தே அமையும். அது உயிர் இன்பமா அல்லது பொருள் இன்பமா என்று பிரித்து பார்க்க வேண்டும்.

🌸 மேஷ லக்னத்திற்கு 3 7 11 க்கு உரியவர். இந்த லக்னத்திற்கு சந்திரன் சுக ஸ்தான அதிபதி. மற்றும் கேந்திர ஆதிபத்திய தோஷ கிரகம். எனவே பலன் சுகம் பெறுவதே இன்பம் என்று கூற வேண்டும். ஆனால் அந்த சுகம் உடல் சுகமா அல்லது நான்காம் இடம் சம்பந்தப்பட்ட பொருள் சுகமா என்று கணித்துக் கூற வேண்டும்.

🌸ராகு அதிரடிக்கு கட்டுப்படுவார். அதனால்தான் செவ்வாயின் விருச்சிகத்தில் நீசம்.

🌸ராகுவின் சாரத்தில் சூரியன் அல்லது சந்திரன் இருக்கும் பொழுது, அம்மா வழி மற்றும் அப்பா வழி வம்சவிருத்தி மற்றும் சொந்த பந்தங்கள் அதிகம் உள்ளார்கள் என்று கூற வேண்டும். அதேபோல் அம்மா வழி மற்றும் அப்பா வழி சொத்து பத்துக்கள் அடுத்த தலைமுறைக்கும் வரும் என்று கூற வேண்டும். ராகு சுப தொடர்பில் இருந்தால் நல்வழியிலும் அது அசுப தொடர்பில் இருந்தால் கெட்ட வழியிலும் பண வரவு உண்டு. ராகுவை வைத்தே பாவ சொத்து புண்ணிய சொத்து என்று பிரித்து பலன் கூறலாம். சூரியன் நேர்மைக்கு உரிய கிரகம். மற்றும் கால புருஷனுக்கு பூர்வபுண்ணிய அதிபதி. சூரியனின் நீச நட்சத்திரம் ராகு. எனவே பெரும்பாலும் ராகு மறைமுக வழியிலேயே பணத்தை கொடுப்பார். அதனால்தான் ராகு திசை பல பேருக்கு பணவரவை அதிகம் கொட்டும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது பொருள் ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே கொடுக்கும் உயிர் ஸ்தானத்தில் இருந்தால் கண்டிப்பாக கொடுக்கவே கொடுக்காது. ராகு உயர் ஸ்தானத்தில் இருந்தால் பொருளை முற்பகுதியில் கொடுத்துவிட்டு, பிற்பகுதியில் உயிரைத் தக்க வைத்துக்கொள்வார். பொருளை கண்டிப்பாக கொடுக்கவே மாட்டார். இதை வைத்துதான் ராகு கொடுத்துக் கெடுப்பார் என்று முன்னோர்கள் கூறினார்கள்.

🌸 ராகுவின் சாரத்தில் ஒரு கிரகம் நின்றால் அந்த கிரக காரக பலன் அடுத்த ஜென்மத்தில் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். உதாரணமாக ராகு சுயசாரம் அல்லது சூரியன் ராகு சாரத்தில் இருந்தால், நமது தாத்தா மற்றும் நமது தந்தையார் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் நமக்கு பிறப்பார்கள் என்பதை சொல்லாமல் சொல்லும்.

🌸ராகு – கேதுவின் சாரத்தில் இருந்தால் தந்தைவழி அல்லது தாய்வழி பாட்டனாருக்கு இரு தாரம் என்று கூற பலன் சரியாக இருக்கும். ஏனென்றால் கேது எதையும் இரண்டாக பிரிப்பவர்.

🌸 நாம் செய்யும் அனைத்து நல்லவை மற்றும் கெட்டவை அனைத்தையுமே தொடர்ந்து கவனித்து வருபவர் ராகுவே. ராகு ஒரு CCTV கேமரா போல் செயல்படுபவர். எதையுமே நிழல் படம் எடுத்து வைக்கும் கிரகம் ராகு. ராகுவிடம் இருந்த பெற்ற அனைத்து தகவல்களையும் கர்மகாரகன் சனி பெற்று கர்மாவை செயல்படுத்துவார். அதனால்தான் இருளிலும் கூட கடவுள் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறார் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இருளிலும் நிழல் படம் எடுக்கும் கிரகம் ராகுவே.

🌸ராகுவை வைத்து ஒருவர் திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் அல்லது தொலை தொடர்புகளில் எந்த அளவு பிரகாசிக்கிறார் என்று பலன் கூறலாம்.

🌸 ஒருவருக்கு மேடையில் மிக உயர்ந்த மரியாதை, பெயர், புகழ், செல்வாக்கு அனைத்தையும் கொடுப்பவர் ராகுவே.
🌸 ராகு ஒரு இணைப்பு கிரகம். கால புருஷனுக்கு ஐந்தாம் அதிபதியான சூரியனின் நீச நட்சத்திரம். எனவே மதமாற்றத்திற்கு காரக கிரகம் ராகு. ஒரு மாதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு தன்னை இணைத்து விடுதல். கேதுவும் ஒருவகையில் வருவார் ஏன் என்றால் தன் மதத்தில் இருந்து தன்னை வெட்டி விடுதல் கேது தன்மை.

🌸 ராகுவை விந்து நாதம் என்று ஏற்கனவே கூறினோம். அதேபோல் ராகுவை பெருக்குதல், மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட பெருக்குதல் என்ற காரகத்திற்கு உரியவர். ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினை முட்டையும் சேர்ந்தால் தான் ஒரு உயிர் உருவாகும். எனவே பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? அல்லது இரட்டை குழந்தைகளா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒரு காரக கிரகம் ராகுவே.

🌸கேது தூக்கத்திற்கு மற்றும் கனவிற்கு காரகம் என்று ஏற்கனவே பார்த்துவிட்டோம். ராகுவும் ஒரு காரகம் தான். கேது ஏற்கனவே நடந்தவற்றை கூறினார் என்றால், ராகு வரப் போகும் கனவு பலன்கள், மற்றும் பகல் தூக்கத்தை குறிப்பவர். ராகு என்றால் விழிப்பு நிலை. இரவில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவார். எனது பகல் தூக்கம் பகல் கனவு கண்டிப்பாக உண்டு.
🌸 ராகு அசைவ பிரியன். சூரியன் + ராகு, சந்திரன்+ ராகு, அசைவ உணவை உடல் மற்றும் ஆத்மா கேட்கும். ஏன் கேது தொடர்பு பெற்றால் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறுவார்கள். சூரியன்+ கேது, சந்திரன்+
கேது சைவ உணவு.

🌸கேது – மெய்ஞானம், ராகு -விஞ்ஞானம். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரண கிரகம் ராகு.

🌸 கண்களை மூடிக் கொள்ளுதல் – கேது காரகத்துவம். உதாரணம் ஞானிகள் ரிஷிகள். கண்களை திறந்து வைக்கும் விழிப்பு நிலை. ஆச்சரியமான பார்வைக்கு காரமும் ராகு. இப்பொழுது நாம் மேல்நோக்கி வானத்தைப் பார்க்கும் பொழுது குறிப்பிட்ட டிகிரி மற்றும் தூரம் வரை மட்டுமே பார்க்கிறோம். பார்வையும் தூரமும் விரிவடைந்து செல்வதால் இதற்கு எல்லைகள் கிடையாது. அதனால்தான் ராகுவை முன் நோக்கி செல்லுதல் என்று கூறுகிறோம்.

🌸 ராகு ஒன்றிலிருந்து ஒன்று மாறுதல். ராகுவின் சாரத்தில் நிற்கும் காரக உறவுகள் மற்றும் லக்ன புள்ளி ராகு சாரத்தில் இருந்தால் கவனமாகப் பழகவேண்டும், ராகு இருக்கும் சுப அசுப உயிர் மற்றும் பொருள் தன்மைகளை பொருத்து. சில பேர் உயிர் தன்மையாக இருப்பார்கள் பழகுவார்கள். சிலபேர் பொருள் தன்மையாக இருப்பார்கள் பொருளுக்காக பழகுவார்கள், கவனம் தேவை.

🌸ராகு கேள்வி என்றால் கேது பதில். கேள்வி இருக்கும் இடத்தில்தான் ஒரு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் எந்தத் துறை சார்ந்த கண்டுபிடிப்புகளும் அங்கே இருக்கும். கேது – பதில் என்பதால் ஏற்கனவே இந்த பூமியில் பதில் உள்ளது. எனவே இந்த உலகில் தேடுதலே முக்கியம்.

🌸ராகு மிதுனத்தில் வரும் பொழுது, அதாவது 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவார். அப்பொழுது புதுவித காற்றின் மூலம் பரவும் நோய்களை பரப்புவார். இந்தாண்டு கிரகணம் நிகழ்ந்த தனுசு ராசிக்கு எதிர் மிதுனம் பாதிக்கப்படும். மிதுனம் ராசி, அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளைக் குறிக்கும் அங்கே காற்றின் மூலம் பரவும் நோய்கள் தற்போது தற்போது அதிகமாக இருக்கிறது.

🌸 ராகு / கேது எங்கே ஆசைப்பட வேண்டுமோ அங்கு ஆசைப்பட வேண்டும். கேது இருக்கும் இடத்திற்கு ராகுவின் காரகத்துதிற்கும், ராகு இருக்கும் இடத்திற்கு கேதுவின் காரகத்துவதிற்கும் ஆசைப்படக்கூடாது.
🌸ராகு -கொடுத்தால் கேது – பிடித்து வைத்து கொள்ளுதல்.
ராகு – பணம் கொடுத்தால் செல்வந்தன். கேது- பணம் பெற்றுக் கொண்டால் ஆண்டி. ராகு கேதுவின் சாரத்தில் அல்லது கேது ராகுவின் சாரத்தில் அல்லது ராகு கேதுக்கள் சுயசாரம் பெரும்பொழுது, முன்னோர் சொத்துக்கள் இல்லை என்று கூற பல நூறு சதவீதம் துல்லியமாக இருக்கும். ஏனென்றால் இருந்த சொத்துக்கள் எல்லாம் முன்னோர் தலைமுறையுடன் அதாவது தாத்தா,பாட்டி தலைமுறையிடம் முடிந்தது என்று கூற பலன் சரியாக இருக்கும்.

🌸சிம்மத்தில் ராகு, முன்னோர் சொத்து சுத்தமாக இல்லை.

🌸சூரியன் – வயிறு ரஜ்ஜூ. சனி – தொடை ரஜ்ஜு. ராகு – பாவங்களை சேர்த்தல். பாவ வழியில் சம்பாதித்த பணத்தை கொண்டு சாப்பிட வயிறை தொடை தாங்கும். அதுவே கர்மா. சனி – கர்மகாரகன்.

🌸 ராகு கேதுக்கள் சுப தொடர்புடன் தனியாக இருக்க வேண்டும். ராகு கேதுக்கள் விஷத் தன்மை உடையதால் அவற்றுடன் சேரும் கிரகங்களுக்கும் பாவங்களை சேர்த்தல் அல்லது பாவங்களை கழுவுதல் வந்து சேரும்.

🌸 கேது இருக்கும் பாவத்தைக் கெடுப்பார். ராகு இருக்கும் பாவத்தை பெருக்குவார். ராகுதிசையில் ராகுவிற்கு 9 10 அதிபதிகள் சேர தர்மகர்மாதிபதி யோகம். உதாரணமாக மேஷ லக்னத்திற்கு 6 ல் கன்னியில் ராகு. ஒன்பது பத்தாம் அதிபதிகள் என சுக்கிரன் மற்றும் புதன் சேர தர்மகர்மாதிபதி யோகம். இருந்தாலும் சுக்கிரனின் நீச வீட்டில் இருப்பதால் 9 குரிய பாக்கியத்திற்கு பங்கம் .

🌸 ராகுவே குழந்தைகளை தீர்மானிப்பவர். அதேபோல் மனைவியை தீர்மானிப்பவரும் ராகுவே.

🌸ராகு – லாபம், ஷேர், வட்டித்தொழில், அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட தொழில், புகைப்படத் தொழில், அறிவியல் கண்டுபிடிப்பு சார்ந்த தொழில்.

🌸ராகு – அச்சுப்பதித்தல், ராகுவை வைத்தே ஒருவர் தான் சம்பந்தப்பட்ட துறையில் பெரிய அளவில் முத்திரை குத்துவரா, தடம் பதிப்பாரா என்று எளிதாக கூறலாம்.

🌸ராகு + புதன் சம்பந்தப்பட – கைரேகை நிபுணர். அல்லது கைரேகை பார்க்க ஜோதிட பலிதம் உண்டு.

🌸 ராகு / கேதுக்கள் சூரியனின் உச்ச பாதையில் இருக்கலாம். அவஸ்தை இல்லாத மரணம். சூரியனின் நீச பாதை என்றால் ஆத்மா நீசம் ஆகிறது என்று பொருள். எனவே ஆத்மா பிரிவிற்கு சிரமம் உள்ளது என்று பொருள்.

🌸ராகு எதையும் பெருக்குவதால், தன காரகனான குரு மற்றும் பணத்திற்கு காரகனான சுக்கிரன் இவர்களுடன் சேரும் பொழுது பெரும் பணத்தை கண்டிப்பாக தருவார். ராகு+குரு+சுக்கிரன் சேர்க்கை பெரும் பண யோகம்.
🌸ராகு எட்டாம் அதிபதி மற்றும் லக்னாதிபதி தொடர்பு கூட்டு மரணத்தை சொல்லும். இதில் ஜாதகருக்கு உயிரை கொடுப்பது போல் வந்து விட்டால், கூட்டு மரணத்தில் இருந்து ஜாதகர் தப்பித்து விடுவார். அதற்குப் பதிலாக பெரும் பொருள் விரையம் உண்டு.

🌸உடலை இயக்க ஆத்மா தேவை. ஆத்மகாரகன் சூரியன் மூலமே ராகு இயங்குகிறார். அதனால்தான் ராகுவை சூரியனின் நிழல் என்கிறோம்.
🌸சரீரத்தை கொடுப்பவர் தந்தை, சந்திரனின் மூலம் கொடுப்பார். சரீரத்தை இயக்குபவர் ராகு (வீரியம்).
🌸ராகு – எலும்பு,அஸ்தி அஸ்திவாரம், இவற்றிற்கு காரகன். இறப்புக்குப்பின் எலும்பு முழுமையாக எரிந்து சாம்பலாக வேண்டும். அப்படி எரிந்து சாம்பலாக விட்டால், பிரேத சாபம் உண்டு என்று பொருள்.

🌸ராகு – வீரியம் முகத்திற்கு நேராக பேசுதல். கேது – வீரியமில்லை, முதுகில் குத்துதல்.
🌸சூரியனே இப்பூமியில் நமது ஆத்மா தோன்றுவதற்கு காரகம். குழந்தையே இல்லாமல் எவ்வாறு பகவான் குழந்தையை (சூரியன்) கொடுத்தார். ராகு மூலம் (வீரியம் மூலம்)தனது தவ வலிமையால்.
🌸 சூரியன் – கேது (முனிவர்கள், ஆண்டிகள்) தனிமை விரும்பி.
சூரியன்-ராகு கூட்டத்தை விரும்புதல். அரசன் அரச சபையில் கூட்டத்துடன் இருப்பதையே விரும்புவர். அதாவது ஆத்மா மற்றவர்களுடன் எப்போதும் இருப்பதையே விரும்பும்.
🌸ராகு / கேது சூட்சுமம், ராகு / கேது சாரத்தின் சூட்சமம்.
அனைத்துக் கிரகங்களுமே கொடுக்கும். அதில் எது நல்லது எது கெட்டது என்று பிரித்து வாழ வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!