ஜோதிட கிரகங்களின் பலம் :
😊ஸ்தான பலம் என்பது கிரகம் நேர்வலு அடையும், திக் பலம் என்பது நேர்வலு இல்லாமல் மறைமுக வலு அடைகிறது. எடுத்துக்காட்டாக இயற்கை பாப கிரகமான செவ்வாய் நேர்வலு அடையும்போது அக்கிரகம் அதனுடைய காரகத்துவமான வீடு, சகோதரகாரகன், பூமிகாரகன், ரத்தம் ஆகியவற்றை குடுக்கக்கூடியவர். அதே செவ்வாய் நேர்வலுவற்று மறைமுக வலுகூடி அதாவது நீசமாகி சுப கிரக பார்வை அல்லது திக் பலம் பெறுவதோ அல்லது வர்கோத்தமம் பெறுவது அந்த ஜாதகருக்கு நல்ல பலன் தரும்.
🙂குரு திக் பலம் அடைத்தது என்றால் குரு ஆனவர் ஒன்றாம் வீட்டின் திசை அதாவது கிழக்கு திசை மூலமாக நன்மை செய்வார். எந்த கிரகம் ஆனாலும் அந்த கிரகம் திக் பலம் அடையும் வீட்டின் நடுப்பகுதி 15″ டிகிரி முழு திக் பலம் அடையும்.
எடுத்துக்காட்டாக அதிகாலையில் சூரியன் கிழக்கு திசையில் உதிக்கும் பொழுது குரு மற்றும் புதன் திக் பலம் அடையும் பொழுது அதனுடைய காரகத்துவமான
கல்வி, ஞானம், புத்திகூர்மை ஆகியவை அதிகளவில் பூமியில் மனிதர்களுக்கு கிடைக்கும்.
🙂அதே போல் சனி ஒரு இருள் கிரகம் அதனால் சூரியன் மேற்கு திசை அதாவது மாலை நேரம் முழு பலம் அடையும். ஒரு கிரகம் திக் பலம் அடையுமானால் அதனுடைய காரகத்துவம் வலு பெரும்.
🙂சூரியன் மற்றும் செவ்வாய் சக்தி வாய்த்த கிரகம் மதியம் முழுவதும் கிடைக்கும்.
🙂சந்திரன் மற்றும் சுக்ரன் ஆகியவை மென்மையான கிரகங்களாகும், இவை தூக்கத்திற்கும் அன்பிற்கும் உகந்தவையாகும்.