ஜோதிடத் தேவ ரகசியம்
💐💐💐💐💐💐💐💐💐
நான் தான் பெரிய இவன் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தவேளையில்……..
நச்சென்று நடுமண்டையில் வாத்தியார் கொட்டியது போல கொட்டியது
சூரியனுடன் சேர்ந்த ராகு……
மனை மக்களுடன் மகிழ்ச்சியாய் வாழ்பவன் நான் என்று எண்ணிக்கொண்டிருக்கையில்
மர்மமாய் மனத்தை கசக்கினான்
சந்திரனுடன் சேர்ந்த கேது……….
மாடுமனையுடன் தேடிய செல்வமும் பெற்று சிறந்திருப்பவன் நான் என்று எண்ணிக்கொண்டிருக்கையில்…..
ஏரில் பூட்டிய எருமையாய் வதைத்தான்.
செவ்வாயுடன் சேர்ந்த சனி……….
கன்னி ஒருத்தி கனவில் வர கனவில் வந்தவள் போல் காரிகையொருத்தி நேரிலும்வர நிஜமாய் காதலித்து நிம்மதியாக கைபிடிக்க நினைக்கயில் நிழல்போல் வந்து நிம்மதியைக் கெடுத்தான்
புதனுடன் சேர்ந்த ராகு………
வாழ்வே மாயம் என்பதை விடுத்து வாழுவோம் சிவமாய் என்று வளமாய்
எண்ணிக்கொண்டிருக்க……
குரு என்ற கொடூரப்பாம்பிடம் கொண்டுபோய் விட்டான்.
குருவுடன் சேர்ந்த ராகு…………..
இதுவும் வேண்டாம் இல்லறமாக ஒருத்தியுடன் நல்லறமாய் வாழ்வோம்
என்று இன்புற கைபிடித்து வாழ நினைக்கயில்…….
வன் கொடுமையாய் வந்து நின்றான்
சுக்கிரனுடன் சேர்ந்த கேது…………
குடும்பமும் வேண்டாம் குட்டியும் வேண்டாம்…….
நல்ல தொழில் செய்து நானிலத்தில் உயர்ந்து நிற்போம் என்று நாலெட்டு வைக்கயிலே நடு முதுகை உடைத்தான்.
சனியுடன் சேர்ந்த ராகு……..
எதுவுமே வேண்டாம் எங்காவது போய் எப்படியாவது வாழலாம் என நினைக்கையில்.
சத்தமே இல்லாமல் சடுதியில் தடுத்தான்.
சர்ப்பங்களுடன் சேர்ந்த மாந்தி………
ஒன்பது பேரும் இருபத்தியேழுபேருடன் சேர்ந்து
பனிரெண்டு இடங்களைப் பற்றி க்
கொண்டு நம்மை இப்படி படாதபாடு படுத்த வருகையில்.
நாற்பத்தி எட்டு நாள் நோன்பிருந்து
ஐந்து மலைகள் எனும் பூதங்களைக்கடந்து ஞான ஊற்றாய் ஊர்ந்து நதியான பம்பை ஆற்றில் மூழ்கி பாவ நிலை அகன்றிட
பதினெட்டு படி மீது பவ்யமாய் அமர்ந்திருக்கும் பாலகனை தரிசிக்க
பாவம் விழக பாவகங்கள் பலன்கள் நல்லது தரும்……..
என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி
9894770473