#சிவபெருமானின் சொந்த ஊா்
ராவண வதம் முடித்த ராமனுக்கு சிவபக்தனை வதம் செய்ததால் ப்ரம்ம ஹத்தி தோஷம் பிடித்தது ,
உப்பூர் என்னும் ஊரில் வெயில் காத்த விநாயகரை பிரதிஷ்டை செய்து தேவி பட்டினம் என்னும் இடத்தில் விண்ணுலக நவகிரக கோள்களை முதன் முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிறகு புண்ணிய நதி கரையோரத்தில் லிங்க ப்ரதிஷ்ட்டை செய்து சிவபூஜை செய்தும் ப்ரம்மஹத்தி தோஷம் விலகாமல் போக வருந்திய ராமனின் காதுகளில் அரூபமாக 999 ரிஷிகளை தன்னுள் அடக்கி சகஸ்ர லிங்கமாக அமைந்து இருக்கும் உக்கர கோச மங்கை ஆலயத்திற்கு வரும் படி ஈசன் அருள் செய்தார் ,
இதன் படி சதுர் வேத மங்களம் ,தக்சன கைலாயம் ,பத்திரிகவனம் (இலந்தை மரம் கொண்டது )ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்பட்ட தளத்திற்கு வந்த ராமன் சிவபூஜைகள் செய்து ப்ரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டு தன் ஊருக்கு சென்றார் என்று கோவில் சுவடுகள் சொல்கிறது .
மனு அரசனால் கோபுரமும் ,பாண்டிய மன்னர்களால் கருவறைகளும் கட்டி தரப்பட்டது என்றும் ,3000 வருடமாக உயிருடன் இருக்கும் இலந்தை மரமும் ,
மரத்தின் அடியில் மாணிக்கவாசகருக்கு உமா மஹேஸ்வரராக காட்சி கொடுத்து, 999 ரிஷிகளை தன்னுள் அடக்கி கொண்ட தளமும் ,மண்டோதரிக்கு ராவணனை திருமணம் செய்த வைக்க சிவபெருமானை அவதரித்த இடமும்(சிவனின் ஊர் என்று சொல்லப்படுகிறது )
சிவ ரகசியத்தை அழகிய மங்கைக்கு சொல்லிய இடமும் ,முதன் முதலில் நடராஜ தரிசனத்தை அம்பாளுக்கு கொடுத்த இடமும் கொண்டது உக்கர கோச மங்கை என்னும் அதி சிதம்பரம் ….
மாணிக்கவாசகர் சொல்லித்தந்த பள்ளியறை எழிச்சி முதல் பள்ளியறை முடிவு வரை அனைத்தும் இந்த கோவிலில் இருந்து தான் உலகில் உள்ள எல்லா சிவபெருமான் கோவில்களுக்கும் பரவியது/ பின்பற்ற படுகிறது ,
இராவணன் வதம் பின்புதான் ராமனால் நவகிரகம் (நவபாஷாணம் )
பூமிக்கு வரப்பட்டு நமக்கு தெரியப்பட்டது வழிபாடு செய்ய பட்டது என்று இந்த கோவில் சுவடுகள் சொல்கிறது .
ஒரே மரகத கற்களினால் உண்டான நடராஜ உருவம் மார்கழி திருவாதிரை அன்று அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து பிறகு சந்தனத்தால் மூழ்கி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
சிவனே மண்டோதிரிக்கு ராவணனை திருமணம் செய்து வைத்த படியால் இங்கு மங்கள நாயகி ,மங்கள நாயகன் ,மங்கள விநாயகம் என்ற மூர்த்திகளும் உள்ளனர் ,
சூரியன் ,சந்திரன் ,சனி இவர்கள் மட்டும் இங்கேய இருந்து வழிபடுகின்றனர் என்றும் மற்ற கோள்கள் இல்லை என்றும் சொல்ல படுகிறது ,
மேலும் ,காக புஜேந்தர் ,மிருகண்டு மஹரிஷி வேத வ்யாஸர்,பராசரர் வழிபாடு செய்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது ….
மாணிக்கவாசகர் சொன்னது ….
சிவபெருமானுக்கு 1087 கோவில்கள் இருந்தாலும் உக்கிரகோசமங்கை இடமே சிவனின் ஊர் என்றும் ,
ஒரு குடும்பத்தில் ஒருவர் வந்து தரிசித்தால் அவர்களின் 3 தலைமுறைக்கு புண்ணியம் பலன்கள் தந்து காக்கப்படும் என்கிறார் ….
அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய கோவில் ..
🙏நமசிவாய🙏